Friday 7 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 217 - பொது ஊழியர் குற்றவாளிக்கு துனைப் போகுதல்





     யாவராவது, பொது ஊழியராக இருப்பவர் சட்டப்படி எப்படிச் செயல் பட வேண்டும் என்று சட்டத்தில் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
   

      அதனை வேண்டும் என்று மீறுவது குற்றமாகும், குற்றவாளியை சட்டப்பூர்வமான தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் ஒரு காரியத்தை செய்வதும் அல்லது தண்டனைக் கிடைக்காமல் இருப்பதற்காக ஒரு காரியத்தை செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். 




    குற்றவாளிப் பெற வேண்டிய தண்டனையிலிருந்து குறைந்த தண்டனைப் பெற வேண்டும் என்பதற்காக தன் கடமையிலிருந்து பிழற்வதும் குற்றமாகும்.

  சட்டப்படி கைப்பற்ற வேண்டிய ஒரு சொத்தைக் கைப்பற்றாமல் அதனை சட்டத்திற்கு முரனாக காக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது எண்ணத்துடன் சட்ட பொது ஊழியருக்கு விதித்துள்ள சட்ட நெறிமுறைகளை மீறுவது குற்றமாகும்.


  இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

குற்ற வழக்கு பதிய தவறினால் ?
 

     சட்டபடியான ஒரு கடமையை செய்ய ஒரு புலனாய்வு அதிகாரி தவறும்போது, அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 154 இன் படி வழக்கு பதிவு செய்ய தவறும்போது, , இந்திய தண்டனை சட்டம் பிரிவு 217 இன் படி, அது ஒரு குற்றம், “ஒருவரை சட்டபடியான தண்டனையிலிருந்து காப்பாற்றும் உட்கருத்துடன், அல்லது அதனால் அவரை அநேகமாக காப்பாற்ற கூடும், அல்லது அவர் ஆளாக கூடிய தண்டனைக்கும் குறைந்த தண்டனையை அடைய செய்ய கூடும் என்று அறிந்து, அல்லது சொத்தை காப்பாற்றும் உட்கருத்துடன் அல்லது அதனால் சொத்து எதையும் தண்ட இழப்பிநின்றும் அல்லது சட்டப்படி அது உள்ளாக்கபட்டிருக்கும் பொறுப்பு எதனின்றும் தம்மால் அநேகமாக காப்பாற்றப்பட கூடும் என்று அறிந்திரிக்கிற ஒரு பொது ஊழியர் என்ற முறையில் அவர் நடந்து கொள்ள வேண்டிய வகைக்கான சட்டத்தின் உத்தரவு எதனையும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும்…

 Section 217- Public servant disobeying direction of law with intent to save person from punishment or property from forfeiture




Whoever, being a public servant, 
   knowingly disobeys any direction of the law as to the way in which he is conduct himself as such public servant, 

   intending thereby to save, or knowing it to be likely that he will thereby save, any person from legal punishment, 
 
    or subject him to a less punishment than that to which he is liable, or with intent to save, or knowing that he is likely thereby to save, 
 
   any property from forfeiture or any charge to which it is liable by law, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 



2 comments:

  1. நல்ல தகவல் பதிவுக்கு நன்றி

    ReplyDelete