Thursday 4 February 2016

தினம் ஒரு சட்டம் - குழந்தையை அநாதையாக விடுதல்


இ.த.ச 317



  யாராவது ஒரு குழந்தையின் தந்தையாகவோ அல்லது தாயாகவோ அல்லது அந்த குழந்தையிடம் அக்கறையுள்ள ஒருவராக இருந்து, அந்தக் குழந்தைக்கு பன்னிரன்டு வயதுக்கு குறைவாக அகவை இருக்க அந்தக் குழந்தையை நிரந்தரமாக விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அல்லது எண்ணத்துடனும் ஏதாவது ஒரு இடத்தில் விட்டு விடுவது குற்றமாகும்.

  இந்தக்குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதம் அல்லது   ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் தண்டனையாக வழங்கப்படும்.

  விளக்கம் - அவ்வாறு அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டு அந்தக்குழந்தைக்கு மரணம் சம்பவித்தால் , இவ்வாறு செய்ந்தவருக்கு கொலைக்குற்றம் சாட்டி விசாரிக்கப்படும். அது இந்தப் பிரிவுக்கு எதிரானது அல்ல.



Section 317- Exposure and abandonment of child under twelve years, by parent or person having care of it.
  

    Whoever being the father or mother of a child under the age of twelve years, having the care of such child, shall expose or leave such child in any place with the intention of wholly abandoning such child, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years; or with fine, or with both.

   Explanation.- this section is note intended to prevent the trial of the offender for murder or culpable homicide, as the case may be, if the child die in consequence of exposure.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

1 comment: