Monday 14 March 2016

தினம் ஒரு சட்டம் - ஒரு குற்றத்தைப் பற்றிய தகவல் தராமல் இருந்தால் அது குற்றமாகும்.

இ.த.ச 176


    யாராவது அல்லது எவர் ஒருவர், சட்டப்படி ஒரு பொது ஊழியர் ஒரு தகவல் அல்லது அறிவிப்பைப் பற்றி கேட்கப்படும் போது அதனைப் பற்றிய தமக்கு தெரிந்த தகவலை சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நடந்த எந்தகைய சம்பவத்தைப் பற்றிய  அறிவிப்பை அல்லது அது தொடர்பான எந்த தகவலை தராமல் இருப்பதும் உண்மையை மறைப்பதும் குற்றமாகும்.  இது தொடர்பாக சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால ஆவகாசத்தக்குள் தெரிவிக்க வேண்டும் என சட்டத்தில் இருக்கின்றது, அத்தகைய கால ஆவகாசத்துக்குள் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு ஒராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து நூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

  அல்லது அத்தகைய அறிவிப்பு அல்லது தகவல் ஒரு குற்ற சம்பவத்தை சார்ந்ததாக இருப்பின், அல்லது அத்தகைய அறிவிப்பு அல்லது தகவல் மறைக்கப்பட்டு அதன் மூலம் குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட ஒரு குற்றவாளியை காப்பற்ற வேண்டும் என தராமல் இருப்பதும் குற்றமாகும், அவருக்கு ஆறு மாதங்கள் வரையில் கூடிய சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரைக் கூடிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


  அல்லது அத்தகைய அறிவிப்பு அல்லது தகவல் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 ன் பிரின் 565 ன் கீழ் அறிவிப்பு அல்லது தகவல் பொது ஊழியர்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என  கூறப்பட்டிருக்கும் போது, அத்தகைய தகவலையோ அல்லது அறிவிப்பையோ பொது ஊழியருக்கு தராமல் இருப்பது குற்றமாகும். 

   அத்தகைய குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 176- Omission to give notice or information to public servant by person legally bound to give it
    

    Whoever, being legally bound to give any notice or to furnish information on any subject to any public servant, as such, intentionally omits to give such notice or to furnish such information in the manner and at the time required by law, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

     Or, if the notice or information required to be given respects the commission of an offence, or is required for the purpose or preventing the commission of an offence, or in order to the apprehension of an offender, with simple imprisonment for a term which may extend to six month, or with fine which may extend to one thousand rupees, or with both;

     *[Or, if the notice or information required to be given is required by an order passed under sub-section (1) of section 565 of the Code of Criminal Procedure, 1898 (5 of 1898) with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.]

* Added by Act 22 of 1939, sec. 2. 


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment