Friday 25 March 2016

தினம் ஒரு சட்டம் - காவலரை மிரட்டுதலும் காரியம் ஆற்ற செய்யும் செயலும்


இ.த.ச 189

        யாராவது ஒருவர், ஒரு பொது ஊழியரை மிரட்டி ஒரு காயம் ஏற்ப்படுத்தப்படும் என்றும் அல்லது அவருக்கு வேண்டிய ஒரு நபரின் மீது அத்தகைய காயம் உண்டாக்கப்படும் என மிரட்டி, அவர் கடமை ஏற்று நடத்தும் ஒரு செயலை செய்யவிடாமல் தடுத்தல் தனக்கு வேண்டியப்படி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளுதல் அல்லது ஒரு செயலை தாமதப்படுத்த வேண்டும் என செய்யப்படும் எத்தகைய செயலும் குற்றமாகும்.


       இத்தகைய குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 189- Threat of injury to public servant


                Whoever holds out any threat of injury to any public servant, or to any person in whom he believes that public servant to be interested, for the purpose of inducing that public servant to do any act, or to forbear or delay to do any act, connected with the exercise of the public functions of such public servant, 

               shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
 
 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment