Friday 18 March 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்குமூலத்தில் பொய் கூறினால்


இ.த.ச 181

       யாராவது ஒருவர்,   தாம் மனமுன்வந்து ஒரு பொது ஊழியர் அல்லது அத்தகைய அதிகாரம் பெற்ற ஒருவர் முன்பு அளிக்கும் வாக்குமூலம் அல்லது உறுதிமொழியில் ஒரு பொய்யான தகவலை அளிப்பதும் அல்லது பொய்யான உறுதிமொழியைக் கூறுவதும் , அல்லது பொய்யானது என தெரிந்தும் ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளிப்பதும், அது பொய்யானது என தெரிந்தும் அத்தகைய தகவலை உண்மையானது நம்புவதற்கு ஏதுவானது என சான்றளிப்பதும் குற்றமாகும்.



     இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 181- False statement on oath or affirmation to public servant or person authorized to administer an oath or affirmation
 

     Whoever, being legally bound by an oath *[or affirmation] to state the truth on any subject to any public servant or other person authorized by law to administer such oath 1[or affirmation], makes, to such public servant or other person as aforesaid, touching the subject, any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true,

    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

* Ins. by Act 10 of 1873, sec. 15.
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

No comments:

Post a Comment