Thursday 24 March 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் சட்டப்படி இடும் ஆணையை மீறுதல்


இ.த.ச 188 

       யாராவது ஒருவர் தமக்கு நன்றாக தெரிந்து, ஒரு பொது ஊழியர் சட்டப்படி பொது நலன் கருதி ஒரு ஆனையை நிறைவேற்ற ஒரு கட்டளையிட அல்லது உத்திரவிட அதனை வேண்டும் என்றே நாம் செய்யாமல் இருப்பதும் அல்லது அதனை மீறி நடப்பதும் குற்றமாகும்.

அத்தகைய உத்தரவு ஒரு சட்டரீதியான முறையில் ஒரு சொத்தை காப்பதற்கோ அல்லது அத்தகைய சொத்தை சட்டப்படி தம்வசத்தில் வைத்திருப்பதற்கும் சட்டத்தில் இடம் இருக்கும் போது அத்தகைய உத்தரவை மதித்து நடப்பது நமது கடமையாகின்றது.





       அத்தகைய உத்தரவை மீறுவதும் அதனால் ஒரு தொல்லை விளைந்தால் குற்றமாகும் இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரை வெறுங்காவல் தண்டனை அல்லது இரு நூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


       மேலும் அத்தகைய ஆனை அல்லது உத்தரவை நாம் மீறி நடப்பதால் மனித உயிருக்கு ஏதாவது சேதம் அல்லது பாதுக்காப்புக்கு ஒரு அச்சுறுத்தல் அல்லது சுகாதாரக்கேடு உண்டானால் அல்லது அதன் விளைவாக ஒரு கலகம் நடைப் பெற காரணமாகவோ அல்லது  அதன் விளைவாக ஒரு கலகம் பெற்றாலாலோ தண்டனை மேலும் நீட்டிக்கப்படும்.

      இதற்கு ஆறு மாதம் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  ஆயிரம் ரூபாய்  வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - அத்தகைய அத்துமீறுதல் ஒரு ஒரு சேதத்தை  உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் குற்றவாளிக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் பொது ஊழியரின் ஆணைக்கு கட்டுப்படாமல் இருந்தாலே அல்லது அதனால் ஒரு தீங்கு உண்டாகும் என அறிந்தாலே போதுமானதாகும்.



உதாரணம் - ஒரு பொது ஊழியர் ஒரு குறிப்பிட்ட சாலையில் மத ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ளார் அவருடைய உத்தரவை மீறு மத ஊர்வலம் நடத்துவதால் மதக்கலவரம் உண்டாகின்றார், அது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.
 




       
         
Section 188- Disobedience to order duly promulgated by public servant

     Whoever, knowing that, by an order promulgated by a public servant lawfully empowered to promulgate such order, he is directed to abstain from a certain act, or to take certain order with certain property in his possession or under his management, disobeys such direction,

      Shall, if such disobedience causes to tender to cause obstruction, annoyance or injury, or risk of obstruction, annoyance of injury, to any persons lawfully employed, be punished with simple imprisonment for a term which may extend to one month or with fine which may extend to two hundred rupees, or with both;

      And if such disobedience causes or trends to cause danger to human life, health or safety, or causes or tends to cause a riot or affray, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

Explanation-It is not necessary that the offender should intend to produce harm, or contemplate his disobedience as likely to produce harm. It is sufficient that he knows of the order which he disobeys, and that his disobedience produces, or is likely to produce, harm.

Illustration

An order is promulgated by a public servant lawfully empowered to promulgate such order, directing that a religious procession shall not pass down a certain street. A knowingly disobeys the order, and thereby causes danger of riot. A has committed the offence defined in this section.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1628

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

1 comment: