Monday 14 March 2016

தினம் ஒரு சட்டம் - ஆவணத்தை ஆனையிடும் போது சமர்ப்பிக்க தவறினால்


இ.த.ச 175

      யாராவது, சட்டப்படி ஒரு ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை, ஒரு பொது ஊழியரிடம் சமர்ப்பிக்கபட வேண்டும் என ஒரு ஆணையிடும் போது,  அல்லது கேட்டுக் கொள்ளப்படும் போது அவர் அதற்கு கட்டுப்பட வேண்டும் , அதற்கு கட்டுப்படாமல் அத்தகைய ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிக்காமல் இருப்பது குற்றமாகும் .

இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைக்காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

அல்லது அத்தகைய ஆவணம் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை ஒரு நீதிமன்றம் ஆணையிடும் போது அதை செய்யாமல் அத்தகைய ஆவணத்தை சமர்ப்பிக்காமல் இருப்பது குற்றமாகும்.

 இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதம் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

விளக்கம்

எ என்பவர் சட்டப்படி ஒரு ஆவணத்தை ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடமையும் பொருப்பும் உடையவர், அவர் தம் மனவிருப்பப்படி ஒரு தவறிழைக்க வேண்டும் என அத்தகைய ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.
 
A being legally bound to produce a document before a **[District Court], intentionally omits to produce the same. A has committed the offence defined in this section.



Section 175- Omission to produce to document or electronic record to public servant by person legally bound to produce it
    Whoever, being legally bound to produce or deliver up any *[document or Electronic Record] of any public servant, as such, intentionally omits so to produce or deliver up the same, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

Or, if the *[document or Electronic Record] is to be produced or delivered up to a Court of Justice, with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

Illustration

A being legally bound to produce a document before a **[District Court], intentionally omits to produce the same. A has committed the offence defined in this section.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000)

2. Subs. by the A.O.1950, for "Zila Court".
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment