Tuesday 22 March 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் பொது ஊழியர் கேட்கும் உதவிகளை செய்ய மறுத்தால்



இ.த.ச 187 



     யாராவது, ஒரு பொது ஊழியர் சட்டப்பூர்வமான முறையில் ஒரு உதவியைக் கேட்டும் போது நாம் செய்ய கடமைப் பட்டு இருக்கின்றோம். அவர் அத்தகைய பொது சேவை செய்யும் போது நாம் அவருக்கு உதவுவது கடமையாகும். அவ்வாறு அத்தகைய உதவிக்கு நாம் செவி சாய்க்காமலும் உதவாமலும் இருப்பது குற்றமாகும். 

       இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  இருநூறு ரூபாய்  வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

        மேலும் அத்தகைய உதவி ஒரு நீதிமன்றத்தின் வாயிலாக ஒரு உத்தரவின் மூலம் ஒரு செயல் செயலாற்றும் போது அது ஒரு ஒரு குற்றத்தை தடுப்பதற்காகவோ அல்லது ஒரு கலவரத்தை கலைப்பதற்காகவோ அல்லது கலகத்தை அடக்குவதற்காகவோ அல்லது ஒரு குற்றவாளியை பிடிப்பதற்காகவோ ஒரு பொது ஊழியர் அத்தகைய உதவி தேடி வரும் போது நாம் அவருக்கு உதவி செய்ய மறுத்தால் குற்றமாகும்.

      இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதம் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  ஐநூறு ரூபாய்  வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 187- Omission to assist public servant when bound by law to give assistance
 


    Whoever, being bound by law to render or furnish assistance to any public servant in the execution of his public duty, intentionally omits to give such assistance, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to two hundred rupees, or with both;

and if such assistance be demanded to him by a public servant legally competent to make such demand for the purposes of executing any process lawfully issued by a Court of Justice, or of preventing the commission of an offence, or of suppressing a riot, or affray, or of apprehending a person charged with or guilty of an offence, or of having escaped from lawful custody, shall be punished with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to five hundred rupees, or with both.
 
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

No comments:

Post a Comment