Saturday 26 September 2015

தினம் ஒரு சட்டம் - குற்றங்கருதி பொது அமைதியை கெடுத்தல்


இ.த.ச 504

        யாராவது,   ஒருவர் ஆத்திரத்துடன் வெகுண்டு எழுந்து ஒன்றைப் பேசி யாராவது ஒருவரை தவறிழைக்க தூண்டுவதும் அல்லது பொது அமைதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது அப்படி  அவர் ஆத்திரத்துடன் வெகுண்டு  எழுந்து ஒன்றை பேசி பொது மக்களிடன் அதன் மூலம் ஒரு பொது அமைதி கேடும் அல்லது  அமைதி கேடு உண்டாகும் என தெரிந்தும் அல்லது அவ்வாறு அவர் வெகுண்டு எழுவதால் ..............

 http://zeenews.india.com/news/gujarat/hardik-patel-announces-lollipop-movement-against-gujarats-govts-package_1802234.html


ஒரு குற்றம் புரியப்படும் என்ற கருத்துடனும் அல்லது தெளிவுடன் ஒன்றை அனுமதிப்பது குற்றமாகும்.


   ஆத்திரத்துடன் வெகுண்டு  பேசிய அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 504- Intentional insult with intent to provoke breach of the peace

Whoever intentionally insults, and thereby gives provocation to any person, intending or knowing it to be likely that such provocation will cause him to break the public peace, or to commit any other offence, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 



இ.த.ச 505


உட்பிரிவு 1A - யாராவது இந்தியாவின் மூப்படை வீரர்கள் அல்லது அலுவலர்களை அவர்களுடைய கடமையிலிருந்து தவற வேண்டும் அல்லது இந்திய அரசுக்கு எதிராக  கலகம் செய்யவேண்டும்  என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும்.

உட்பிரிவு 1B - யாராவது ஒரு பயம் அல்லது பீதியை பொது மக்களுக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு உண்டாக்கி , அதனால் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு ஒரு கேடு உண்டாக்க வேண்டும் என்ற    கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும்.
 படம் எடுக்கப்பட்டது சட்ட விளக்கத்திற்காக சன்டைக்காக அல்ல - http://www.pakistantribe.com/wp-content/uploads/2014/11/Hindu-Muslim-Riots-in-Aligarh-Muslim-University.jpg

உட்பிரிவு 1C - யாராவது ஒரு குறிப்பிட்ட பிரிவை சாரந்த மக்களை மற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கு எதிராக ஒரு கலகம் அல்லது சன்டை உண்டாக்க வேண்டும் என்ற  கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும்.

ஒரு அறிக்கை அல்லது பொய்யான தகவல் அல்லது ஒரு பிரகடனத்தை உருவாக்கினாலும், வெளியிட்டாலும் அல்லது பரப்பினாலும் அது குற்றமாகும். 
  அவருக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

உட்பிரிவு 2 - யாராவது இரு வேறு பிரிவினர்களுக்கிடையே அவைகள் ஜாதி, மதம்,  இனம், மொழி , பிராந்தியம் என பிரிந்திருக்கும்  பிரிவினர்களுக்கிடையே உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கடையில் விரோதம், வெறுப்புணர்ச்சி அல்லது கெட்டஎண்ணங்களை தூண்டி வளர்க்க வேண்டும் என்ற கருத்துடன் , ஒரு வதந்தியை அல்லது ஒரு பயத்தை தரும் செய்தியுள்ள  அறிக்கை  அல்லது தகவலை உண்டாக்குவதும் அல்லது பரப்புவதும் குற்றமாகும். 

இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

உட்பிரிவு 3 -யாராவது உட்பிரிவு 2- ல் சொல்லப்பட்ட ஒரு குற்றத்தை ஒரு பிரிவினர் வணக்கம் அல்லது தொழுகை செய்யும் இடத்தில் கூறினால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 

விதிவிளக்கு - மேலே விளக்கப்பட்ட கருத்து இன்றி நல்ல எண்ணத்துடன், உண்மையானவை என்று தான் அறிந்துள்ள விபரங்களைப் பற்றிய தகவல் அல்லது அறிக்கையை வெளியிடுவதும் பரப்புவதும் இந்தப்பிரிவின் கீழ் குற்றமாகாது.



Section 505- Statements conducing to public mischief
2[1 Whoever makes, publishes or circulates any statement, rumour or report, -

(a) With intent to cause, or which is likely to cause, any officer, soldier, 3[sailor or airman] in the Army, 4[Navy or Air Force] 5[of India] to mutiny or otherwise disregard or fail in his duty as such; or

(b) With intent to cause, or which is likely to cause, fear or alarm to the public, or to any section of the public whereby any person may be induced to commit an offence against the State or against the public tranquility; or

(c) With intent to incite, or which is likely to incite, any class or community or persons to commit any offence against any other class or community;

Shall be punished with imprisonment which may extend to 6[three years], or with fine, or with both.

1. Subs. by Act 4 of 1898, s. 6, for the original section.

2. Section 505 was renumbered as sub-section (1) of that section by Act 35 of 1969, sec. 3.

3. Subs. by Act 10 of 1927, s. 2 and Sch. I, for "or sailor".

4. Subs. by Act 10 of 1927, s. 2 and Sch. I, for "or Navy".

5. Subs. by the A.O. 1950 for "of Her Majesty or in the Imperial Service Troops". The words "or in the Royal Indian Marine" occurring after the word "Majesty" were omitted by Act 35 of 1934, s. 2 and Sch.

6. Subs. by Act 41 of 1961, s. 4, for "two years".
7[Statements creating or promoting enmity, hatred or ill-will between classes: - Whoever makes, publishes or circulates any statement or report containing rumour or alarming news with intent to create or promote, or which is likely to create or promote, on grounds of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever, feelings of enmity, hatred or ill-will between different religious, racial, language or regional groups or castes or communities, shall be punished with imprisonment which may extend to three years, or with fine, or with both.

7. Ins. by Act 35 of 1969, s. 3.
Offence under sub-section (2) committed in place of worship, etc.: -- Whoever commits an offence specified in sub-section (2) in any place of worship or in an assembly engaged in the performance or religious worship or religious ceremonies, shall be punished with imprisonment which may extend to five years and shall also be liable to fine.]

Exception-It does not amount to an offence, within the meaning of this section, when the person making, publishing or circulating any such statement, rumour or report, has reasonable grounds for believing that such statement, rumour or report is true and makes, publishes or circulates it 5[in good faith and] without any such intent as aforesaid.

  

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும்.

2 comments: