Sunday 27 September 2015

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கூகுள்


ஆம் இன்று கூகுளின் 17 வது பிறந்த நாள்.

இது தொடங்கப்பட்டது 1998 ஆம் ஆண்டு. இதனை உருவாக்கியவர்கள் லாரி பெஜ் மற்றும் செர்ஜீ பிரின்.




அதன் அன்றைய தோற்றம் மற்றும் ஊழியர்கள்




    இன்று நம்முடைய எல்லாத் தேவைகளையும் எளிதாக்கி மாபெரும் சாதனை கூகுள், மைக்ரோசாப்ட், ஜாவா மற்றும் ஆரக்களை சாரும். கணினியில் வேலைப் பார்ப்பதும் ஒரு மக்கள் சேவைதான் எப்படி என்றால் தகவல்கள் மிக எளிதாக கிடைப்பது தான். 


20 வருடங்களுக்கு முன்னர் நமக்கு ஒரு தகவல் தேவையென்றால் ஆசிரியர் அல்லது லைப்ரரியில் அல்லது தினத்தந்தியில் வரும் குருவியாரிடமோ அல்லது


    ராணியில் வரும் அல்லியிடமோ அல்லது க்ரைம் மன்னன் ராஜேஸ்குமாரிடமோ தான் கேட்போம்.


    ஆனால் இன்று அப்படியில்லை நாம் கூகுளிடம் அல்லவா கேட்கிறோம். மாதா , பிதா, குரு வரிசையில் இப்போது கூகுளும் இனைந்துள்ளது. அதன் தலைமை அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு தமிழராக இருப்பதும், நமக்கு எல்லாம் பெருமைதான். வாழ்த்துவோம் மேன் மேலும் வளர. 


Not sure what’s more of a relic from a bygone era, the lava lamp or the computer monitor.

     இதுப் போல பல நிறுவனங்கள் தோன்றின அவைகள் முதலில் இலவசமாக தொடங்கி பின் கட்டண சேவைக்கு மாறிவிட்டார்கள் அவர்கள் போல இல்லாமல் இதுப் போன்ற சேவைகளை என்றும் வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

 நன்றி கூகுள் எங்களின் அன்றாட வாழ்க்கையில் உன் பங்களிப்பிற்கு.

   இன்று நமக்கேன்று இருக்கும் சுமார்ட் போனின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம்  கூகுளின் தயாரிப்பு என்றால் அது மிகையாகாது.  இப்போது நீங்கள் படிக்கும் பிளாக்கர் கூட கூகுளின் தயாரிப்புதான்.

அவர்களின் என்னற்ற படைப்புகளை இங்கு காணலாம்.

https://www.google.com/doodles/googles-17th-birthday
www.google.com
https://en.wikipedia.org/wiki/Google

 அன்று

இன்று


2 comments: