Monday 14 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 412, 413 - திருட்டுப் பொருள் வைத்திருந்தால் என்ன தண்டனை?

இ.த.ச 412 

      ஒரு பொருள், ஒரு கூட்டுக் கொள்ளையின் மூலம் கிடைத்தப் பொருள் அல்லது அது ஒரு கூட்டுக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரிடமிருந்து அல்லது அத்தகைய கூட்டுக் கொள்ளை கூட்டத்தைச் சார்ந்தவரிமிருந்து பெறுவதும் அந்தப் பொருளை தன் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.


    இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக வழங்கப்படும்.


Section 412- Dishonestly receiving property stolen in the commission of a dacoity 


    Whoever dishonestly receives or retains any stolen property, the possession whereof he knows or has reason to believe to have been transferred by the commission of dacoity, or dishonestly receives from a person, whom he knows or has reason to believe to belong or to have belonged to a gang of dacoity, property which he knows or has reason to believe to have been stolen, 



shall be punished with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
 
  இ.த.ச 413 

          ஒரு பொருளை அது கள்ளப் பொருள் என்று அறிந்திருந்தும் அதனை கரவுடன் பெறுவதையும் அத்தகைய பொருட்கள் புழங்குவதை வழக்கமாக கொண்ட நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அத்துடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக வழங்கப்படும்.



Section 413- Habitually dealing in stolen property 

      Whoever habitually receives or deals in property which he knows or has reason to believe to be stolen property, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).


 
இ.த.ச 413 

ஒரு பொருள் அது கள்ளப் பொருள் என்று தெரிந்திருந்தும் அதனை தன்னிச்சையாக ஒளித்து வைத்தல் அல்லது அதனை காசாக்குதல் அல்லது அதனை சுருட்டிக் கொள்ளல் ஆகியவற்றில் எதனைப் புரிந்தாலும் குற்றமாகும்.

இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.





Section 414- Assisting in concealment of stolen property

Whoever voluntarily assists in concealing or disposing of or making away with property which he knows or has reason to believe to be stolen property, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both. 




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

No comments:

Post a Comment