Monday 14 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 415 - Cheating - நேர்மையின்றி ஒருவரை வஞ்சித்தல்


இ.த.ச 415 - வஞ்சித்தல்




     யாராவது ஒருவர்,  பிறரை ஏமாற்றி, கள்ளத்தனமாக அல்லது நேர்மையின்றி அல்லது நேர்மையின்றி ஏமாற்றப்பட்டவரைத் தூண்டி அவரிடம் உள்ள சொத்தைப் பிறருக்கு கொடுக்கும் படி செய்வதும் அல்லது பிறர் அவருடைய சொத்தை வைத்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் படி செய்வதும் அல்லது ஏமாற்றப்படவரை தூண்டி அவர் செய்யாத காரியத்தை செய்யும் படியும் செய்வதும், அத்தகைய காரியத்தை அவர் செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அவருடைய மனம், உடல் , புகழ் அல்லது சொத்துக்குத் தீங்கினை உண்டாக்கிணாலும் அல்லது தீங்கு உண்டாக்க கூடியதாக இருந்தாலும், அதனை வஞ்சித்தல் என்று சொல்லப்படுகிறது.


விளக்கம் - நேர்மையின்றி தகவல்களை மறைப்பதும் இந்தப்பிரிவின் கீழ் ஏமாற்றுதலாகக் கொள்ளப்படும்.

உதாரணம் 1 - செந்தில் என்பவர் தான் ஒரு மக்கள் நல அதிகாரி என குமாரை ஏமாற்றி அவருடைய கடையிலிருந்து கடனுக்கு பொருள் வாங்குகிறார் . அவருக்கு குமாருக்கு கடனை திருப்பித்தராத எண்ணம் இல்லாதப் போது செந்தில் இந்தப்பிரிவின் கீழ் குற்றவாளியாகின்றார்.

உதாரணம் 2 -

ஒருப் பொருளின் மீது பொய்யாக ஒரு குறியீட்டு அது அந்தப் பிரபலமான தயாரிப்பு என நம்ப வைத்து விற்று பணமாக்குவதும் அதனால் அந்த தொழிற்சாலைக்கு கெட்ட பேர் வாங்கி தருவதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.



உதாரணம் 3 -

பணம் இல்லாத தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் இருக்கின்றது என நம்ப வைத்து ஒரு காசோலையைக் கொடுப்பதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

உதாரணம் 4 -

ஒரு கவரீங் நகையைக் காட்டி இது உண்மையான நகை என நம்பவைத்து அதை விற்பதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

உதாரணம் 5 -

ஒருவரிடம் பணம் பெறும் போது ஒரு குறிப்பிட்ட தேதியில் பணம் தருவதாக நம்பவைத்து அவரிடம் ஏமாற்றி பணம் பெற்று அவரிடம் அந்த நாளில் பணம் தராமல் ஏமாற்றுவதும்
இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.





Section 415- Cheating

    
 Whoever, by deceiving any person, fraudulently or dishonestly induces the person so deceived to deliver any property to any person, or to consent that any person shall retain any property, or intentionally induces the person so deceived to do or omit to do anything which he would not do omit if he were not so deceived, and which act or omission causes or is likely to cause damage or harm to that person in body, mind, reputation or property, is said to "cheat".

Explanation. A dishonest concealment of facts is deception within the meaning of this section.

Illustrations

(a) A, by falsely pretending to be in the Civil Service, intentionally deceives Z, and thus dishonestly induces Z to let him have on credit goods for which he does not mean to pay. A cheats.

(b) A, by putting a counterfeit make on an article, intentionally deceives Z into a belief that this article was made by a certain celebrated manufacturer, and thus dishonestly induces Z to buy and pay for the article. A cheats.

(c) A, by exhibiting to Z a false sample of an article, intentionally deceives Z into believer that the article corresponds with the sample, and thereby, dishonestly induces Z to buy and pay for the article. A cheats.

(d) A, by tendering in payment for an article a bill on a house with which A keeps on money, and by which A expects that the will be dishonored, intentionally deceives Z, and thereby dishonestly induces Z to deliver the article, intending not to pay for it. A cheats.

(e) A, by pledging as diamonds article which he knows are not diamonds, intentionally deceives Z, and thereby dishonestly induces Z to lend money. A cheats.

(f) A intentionally deceives Z into a belief that A means to repay any money that Z may led to him and thereby dishonestly induces Z to lend him money. A not intending to repay it A cheats.

(g) A intentionally deceives Z into a belief that A means to deliver to Z a certain quantity of indigo plant which he does not intend to deliver and thereby dishonestly induces Z to advance money upon the faith of such deliver. A cheats; but if A, at the of obtaining the money, intends to deliver the indigo plant, and afterwards breaks his contract and does not deliver it, he does not cheat, but is liable only to a civil action for breach of contract.

(h) A intentionally deceives Z into a belief that A has performed A's part of a contract made with Z, which he has not performed, and thereby dishonestly induces Z to pay money. A cheats.

(i) A sells and coveys an estate to B.A, knowing that in consequence of such sale he has no right to the property, sells or mortgages the same to Z, without disclosing the fact of the previous sale and conveyance to B, and receives the purchase or mortgage money for Z. A cheats. 
 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    


1 comment: