Sunday 20 September 2015

தினம் ஒரு சட்டம் - வலிந்து வீடுப்புகுந்தலும் அதன் தண்டனைகளும் - 3



இ.த.ச 458

யாராவது,  ஒருவருக்கு காயம் ( hurt ) உண்டாக்க வேண்டும்,  அச்சுறுத்த வேண்டும் ( fear of hurt ) அல்லது முறையற்ற தடுத்தல் ( wrongfully restraining any person ) உண்டாக்க வேண்டும் அல்லது அவைகளைப்பற்றிய அச்சத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாட்டுடன்,  



சூரிய மறைவுக்கு பின்னும் சூரியன் உதயத்திற்கு முன்னும் அதாவது இரவில்  ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் செய்ந்தால், அந்த நபருக்கு பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 458- Lurking house-trespass or house-breaking by night after preparation for hurt, assault, or wrongful restraint
Whoever commits lurking house-trespass by night, or house-breaking by night, having made preparation for causing hurt to any person or for assaulting any person, or for wrongfully restraining any person, or for putting any person in fear of hurt, or of assault, or of wrongful restraint, shall be punished with imprisonment of either description for a term which may extend to fourteen years, and shall also be liable to fine. 


இ.த.ச 459


 யாராவது, ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் இரவில் செய்கிற போது, யாருக்காவது கொடுங்காயம் உண்டாக்கினால், அல்லது மரணத்துக்கு எதுவான ஒரு சம்பவத்தை நடத்தினால் அல்லது கொடுங்காயத்தை ஏற்படுத்த முயற்ச்சித்தாலும். அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 459- Grievous hurt caused whilst committing lurking house trespass or house-breaking
Whoever, whilst committing lurking house-trespass or house-breaking, causes grievous hurt to any person or attempts to cause death or grievous hurt to any person, shall be punished with *[imprisonment for life], or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 




இ.த.ச 460 

 யாராவதுஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் இரவில் செய்கிற போது, அத்தகைய தவறைப் புரியும் நபர்களில் யாராவது ஒருவர், யாருக்காவது மரணமோ அல்லது கொடுங்காயம் உண்டாக்கினால், அல்லது மரணத்துக்கு எதுவான ஒரு சம்பவத்தை நடத்தினால் அல்லது கொடுங்காயத்தை ஏற்படுத்த முயற்ச்சித்தாலும். அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 460- All persons jointly concerned in lurking house-trespass or house-breaking by night punishable where death or grievous hurt caused by one of them
If, at the time of the committing of lurking house-trespass by night or house-breaking by night, any person guilty of such offence shall voluntarily cause or attempt to cause death or grievous hurt to any person, every person jointly concerned in committing such lurking house-trespass by night or house-breaking by night, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

1 comment: