Saturday 19 September 2015

தினம் ஒரு சட்டம் - வலிந்து வீடுப்புகுந்தலும் அதன் தண்டனைகளும் - 1.

இ.த.ச 445 -  வலிந்து வீடுப்புகுதல் 

     ஒருவர் ஒரு குற்றத்தைப் புரிவதற்காக ஒரு வீட்டுக்கள் நுழைவதற்கும் அல்லது குற்றம் புரிந்தப்பின் அந்த வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் கீழ் கண்ட முறைகளில் எதேனும் ஒன்றைக் கையாண்டாலும் அதனை  வலிந்து வீடுப்புகுதல் (House Breaking) என்கிறோம்.



முதலாவதாக - தன்னாலோ அல்லது தன் குற்றத்தில் உடந்தையாக உள்ள வேறு ஒருவர் முலமாகவோ உண்டாக்கப்பட்ட வழியின் மூலமாக அந்த வீட்டிற்குள் நுழைவதும் அல்லது குற்றத்தை செய்நது விட்டு அந்த வழியின் மூலம் வெளியேறுதலும்.


ரண்டாவதாக - தன்னாலோ அல்லது தன் குற்றத்தில் உடந்தையாக உள்ள வேறு ஒருவர் நபராலோ அன்றி வேறு நபர்களால் அறியப்படாத ஒரு வழியால் அந்த வீட்டுக்குள் நுழைவதும்
அல்லது குற்றத்தை செய்நது விட்டு அந்த வழியின் மூலம் வெளியேறுதலும். அல்லது சுவர் அல்லது கட்டத்தின் மீதேறி அதன் மூலம் அந்த வழியை அடைவதும்.

மூன்றாவது -  தன்னாலோ அல்லது தன் குற்றத்தில் உடந்தையாக உள்ள வேறு ஒருவர் நபராலோ அந்த கட்டடம் அல்லது வீட்டின் உரிமையாளர் உண்டாக்காத ஒரு வழியை உண்டாக்கி அதன் மூலம் குற்றம் புரிவதற்காக உள்ளே நுழைவதும் அல்லது குற்றம் புரிந்துவிட்டு அந்த வழியே வெளியேறுவதும்.

நான்காவது - குற்றங்கருதி வீடுப் புகுவதற்காக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் அல்லது வெளியேறுவதும்.

ஐந்தாவது - ஒருவரை பயமுறுத்தி அல்லது மிரட்டி அல்லது வன் செயல் மூலம் அந்த வீட்டுக்குள் குற்றங் கருதி உள்ளே புகுவதும் , குற்றம் புரிந்த பின் வெளியே வருவதும்.

ஆறாவது - தடைசெய்யப்பட்ட அல்லது மூடப்பட்டுள்ள ஒரு வழியை, தன்னாலோ அல்லது தன் குற்றத்தில் உடந்தையாக உள்ள வேறு ஒருவர் நபராலோ திறந்து அதன் மூலம் அந்த வீட்டுக்குள் புகுவதும் அல்லது அந்த வழியின் மூலம் வெளியேறுவதும்.

விளக்கம் -  எந்த வெளி வீடும் (Out house) அல்லது  கட்டிடமும் (Building) , அந்த வீட்டின் கட்டத்தின் எல்லையோடு தொடர்பில் உள்ள ஒரு வீடாகவே கருதப்படும்.




Section 445- Housing breaking
A person is said to commit "house-breaking" who commits house-trespass if he effects his entrance into the house or any part of it in any of the six ways hereinafter described; or if, being in the house or any part of it for the purpose of committing an offence, or, having committed an offence therein, he quits the house or any part of it in any of such six ways, that is to say: --

First-If he enters or quits through a passage by himself, or by any abettor of the house-trespass, in order to the committing of the house-trespass.

Secondly-If he enters or quits through any passage not intended by any person, other than himself or an abettor of the offence, for human entrance; or through any passage to which he has obtained access by scaling or climbing over any wall or building.

Thirdly-If he enters or quits through any passage which he or any abettor of the house-trespass has opened, in order to the committing of the house-trespass by any means by which that passage was not intended by the occupier of the house to be opened.

Fourthly-If he enters or quits by opening any lock in order to the committing of the house-trespass, or in order to the quitting of the house after a house-trespass.

Fifthly-If he effects his entrance or departure by using criminal force or committing an assault or by threatening any person with assault.

Sixthly-If he enters or quits by any passage which he knows to have been fastened against such entrance or departure, and to have been unfastened by himself or by an abettor of the house-trespass.

Explanation -Any out-house or building occupied with a house and between which and such house there is an immediate internal communication, is part of the house within the meaning of this section.

Illustrations - விளக்கம்

எ - ஒருவர் ஒரு வீட்டின் சுவரில் கன்னம் என்ற ஒட்டைப் போட்டு  கையை நுழைத்து திருட நினைப்பதும் இந்த பிரிவின் கீழ் வரும்
வலிந்து வீடுப்புகுதல் (House Breaking) என்கிறோம்.

(a) A commits house-trespass by making a hole through the wall of Z's house, and putting his hand through the aperture. This is house-breaking.

பி - ஒருவர் கப்பலின் ஒட்டை வழியே நுழைந்து திருடுவதும் இந்தப் பிரின் கீழ் வரும் வலிந்து வீடுப்புகுதல் (House Breaking) என்கிறோம்.

(b) A commits house-trespass by creeping into a ship at a port-hole between decks. This is house-breaking.

சி - ஓ என்பவரின் வீட்டின் சன்னலை உடைத்து அதன் மூலம் உள்ளே சென்று திருடுவது இந்தப் பிரின் கீழ் வலிந்து வீடுப்புகுதல் (House Breaking) என்கிறோம்.

(c) A commits house-trespass by entering Z's house through a window. This is house-breaking.

டி - ஒ என்பவரி வீட்டின் தாழ்பாளை நீக்கிவிட்டு உள்ளே சென்று திருடுவதும் இந்தப் பிரின் கீழ் வலிந்து வீடுப்புகுதல் (House Breaking) என்கிறோம்.

(d) A commits house-trespass by entering Z's house through the door, having lifted a door which was fastened. This is house-breaking


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1905 


 இ.த.ச 446 -

      மேற்கண்ட வலிந்து வீடுப்புகும் குற்றத்தை இரவில் புரிந்தால் அதாவது சூரியன் மறைவிற்குப் பிறகும் சூரிய உதயத்திற்கும் முன்னால் புரிந்தால் அது இரவில் வலிந்து வீடுப்புகுதல் என்று கொள்ளப்படும்.



Section 446- House-breaking by night

Whoever commits house-breaking after sunset and before sunrise, is said to commit "house-breaking by night".

Thanks To http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1906
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

2 comments: