Sunday 13 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 410 - கள்ளப் பொருள் என்றால் என்ன ?


கள்ளப் பொருள் என்பது யாதெனில் ....

      இ.த.ச 410 -    ஒரு திருட்டு அல்லது அச்சுறுத்திப் பொருள் பெறுதல் அல்லது கொள்ளை அல்லது வழிப்பறி அல்லது குற்றக் கையாடல் அல்லது நம்பிக்கை மோசடி செய்தல் ஆகியவற்றை புரிவதன் மூலம் கிடைத்த சொத்தை கள்ளப் பொருள் என்று சொல்லப்படுகிறது சுருங்க சொல்லவதானால் திருட்டு பொருள் அல்லது திருட்டு சொத்து.


 அத்தகைய பொருள் இந்தியாவுக்குள்ளேயோ அல்லது இந்தியாவுக்கு வெளியோ எங்கு மாற்றப்பட்டாலும் அது கள்ளப்பொருளாகும்.


ஆனால் அந்தப் பொருள் சட்டப்பூர்வமாக அதன் மீது உரிமைக் கொண்டாடக் கூடிய நபர் வசத்தில் இருக்கும் போது அது கள்ளப் பொருளாதில்லை.


Section 410- Stolen Property
Property, the possession whereof has been transferred by theft, or by extortion, or by robbery, and property which has been criminally misappropriated or in respect of which 1[***] criminal breach of trust has been committed, is designed as "stolen property", 2[whether the transfer has been made, or the misappropriation or breach of trust has been committed, within or without 3[India]]. But, if such property subsequently comes into the possession of a person legally entitled to the possession thereof, it then ceases to be stolen property.

1. The words "the" and "offence of" rep. by Act 12 of 1891, sec.2 and sch. I and Act 8 of 1882, sec.9, respectively.

2. Ins. by Act 8 of 1882, sec.9.

3. The words "British India" have successively been subs. by the A.O.1948 the A.O. 1950 and Act 3 of 1951, sec.3 and sch. to read as above. 


 கள்ளப் பொருள்  வைத்திருப்பவருக்கான தண்டனைகள் - 1.

      இ.த.ச 411  -   ஒருவர் கள்ளப்பொருள் என்று தெரிந்தப் பின்னும் , நேர்மையின்றி பெறுவதும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக் காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 411- Dishonestly receiving stolen property
Whoever dishonestly receives or retains any stolen property, knowing or having reason to believe the same to be stolen property, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.

STATE AMENDMENT

State of Tamil Nadu:

Section 411 of principal Act shall be renumbered as sub-section (1) of that section and after sub-section (1) as so renumbered, the following sub-section shall be added, namely: -

"(2) Whoever dishonestly receives or retains any idol or icon stolen from any building used as a place of worship knowing or having reason to believe the same to be stolen property shall, notwithstanding anything contained in sub-section (1), be punished with rigorous imprisonment which shall not be less than two years but which shall not be less than two thousand rupees:

Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment for a term of less than two years."

[Vide Tamil Nadu Act 28 of 1993, section 3 (w.e.f. 13-7-1993)].


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

1 comment: