Wednesday 16 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 421 - 424 - மோசடியான செயல்களும் சொத்துகளை மாற்றுதலும்

இ.த.ச 421 - யாராவது , தன்னுடைய கடன்காரர்களுக்கோ அல்லது பங்கு தாரர்களுக்கோ சட்டப்படி பங்கிட்டு கொடுக்க வேண்டிய ஒரு சொத்தை பங்கு போட்டுக் கொள்ளாமல் தடுக்க வேண்டும் என்ற கருத்துடன் அந்த சொத்தை இ
டமாற்றம் செய்வதும்,  மறைத்து வைப்பதும், பிறருக்கு கொடுப்பதும் அல்லது அதற்கான உரிய மதிப்பை பெறாமல் பிறருக்கு கொடுப்பதும் குற்றமாகும். 

       இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 421- Dishonest or fraudulent removal or concealment of property to prevent distribution among creditors

    Whoever dishonestly or fraudulently removes, conceals or delivers to any person, or transfer or causes to be transferred to any person, without adequate consideration, any property, intending thereby to prevent, or knowing it to be likely that he will thereby prevent, the distribution of that property according to law among his creditors or the creditors of any other person, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 

இ.த.ச 422 -யாரவது  தான் செலுத்த வேண்டிய கடன் நிலுவைக்காக அல்லது பிறர் செலுத்த வேண்டிய கடன் நிலுவைக்காக , தன்னுடைய சொத்து அல்லது பிறருடைய சொத்து சட்டபூர்வமாக பறிக்கப்படுவதை தடுக்கவேண்டும் என்று,  நேர்மையின்றி அல்லது மோசடியாகத் தடுக்க வேண்டும் என்று எந்த செயலைப் புரிந்தாலும் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 422- Dishonestly or fraudulently preventing debt being available for creditors

    Whoever dishonestly or fraudulently prevents any debt or demand due to himself or to any other person from being made available according to law for payment of his debts or the debts of such other person, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

 இ.த.ச 423 - யாரவது பிறருக்கு விற்க்கப்படும் அல்லது சொந்தமாக்கப்படும் ஒரு சொத்தைப் பற்றி எழுதப்படும் ஆவணத்தில் ஒரு தவறான தகவலை சேர்ப்பது குற்றமாகும். அது அந்த சொத்தின் மதிப்பைக் குறைத்துக் அல்லது அதிகமாக காட்டுவது அல்லது அதன் உரிமையாளர்களைப் பற்றி தவறான தகவல்களை தந்தாலும் அவ்வாறு நேர்மையின்றி மோசமாக பொய்யாக ஆவணத்தை உருவாக்கியவர்கள் அல்லது கையொப்பமிட்டவர்கள் அந்த ஆவணம் உருவாக்க சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் புரிந்தவர்கள் ஆகின்றனர். 

   இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 423- Dishonest or fraudulent execution of deed of transfer containing false statement of consideration
    
    Whoever dishonestly or fraudulently signs, executes or becomes a party to any interest therein, and which contains any false statement relating to the consideration for such transfer or charge, or relating to the person or persons for whose use or benefit it is really intended to operate, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 

 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1883
  இ.த.ச 424 -யாரவது, தன்னுடைய அல்லது பிறருடைய சொத்தை நேர்மையின்றி அல்லது மோசடியாக மறைத்து வைத்தாலும் , அல்லது அப்படி மறைப்பதற்கு உதவி புரிந்தாலும் அல்லது தமக்குள்ள உரிமையை சட்டப்படி அல்லாமல் மோசடியாக அல்லது நேர்மையின்றி விட்டுக் கொடுத்தாலும் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 424- Dishonest or fraudulent removal or concealment of property
     Whoever dishonestly or fraudulently conceals or removes any property of himself or any other person, or dishonestly or fraudulently assists in the concealment or removal thereof, or dishonestly releases any demand or claim to which he is entitled, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1884
Thanks for Picture http://www.indianpenalcode.in
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

No comments:

Post a Comment