Monday 21 September 2015

தினம் ஒரு சட்டம் - போலிசொத்து குறியீடும் அதன் தண்டனைகளும்


இ.த.ச 484

யாராவது, ஒரு பொது ஊழியர் உபயோகப்படுத்தும் சொத்துக் குறியீட்டை உருவாக்கினாலும் அல்லது உபயோகப்படுத்தினாலும் குற்றமாகும்.


அந்த பொது ஊழியர் உபயோகப்படுத்தும் ஒரு சொத்துக் குறியீடு என்பது ஒரு குறியாகவோ அல்லது ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நபரால் உற்பத்தி செய்யப்பட்டது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டது அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் தரநிர்னயத்தை காட்டுவதற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறது அல்லது அந்தப் பொருளுக்கென சில விதிவிலக்கு உண்டு என்பதை தெரிவிக்கும் குறியீடுகளாகும்.அல்லது உண்மைக்கு மாறாக ஒரு போலி குயியீட்டையிடுவதும்.

இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 484- Counterfeiting a mark used by a public servant


 *Whoever counterfeits any property mark used by a public servant, or any mark used by a public servant to denote that any property has been manufactured by a particular person or at a particular time or place, or that the property is of a particular quality of has passed though a particular office, or that it is entitled to any exemption, or uses as genuine any such mark knowing the same to be counterfeited, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

* Subs. by Act 4 of 1889 sec. 3, for the original section 484. 




இ.த.ச 485

 யாராவது, ஒரு போலி குறியீட்டை உருவாக்கினாலும் அல்லது தம் வசம் வைத்திருந்தாலும் குற்றமாகும். அது ஒரு போலி குறியீட்டை உருவாக்கும் அச்சாகவோ அல்லது போலி குறியீட்டுத் தகடாகவோ அல்லது போலி குறியீடு உண்டாக்கும் கருவியாகவோ இருக்கலாம்.

ஒருவருக்கு சொந்தமில்லாத சொத்தை அவருக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கும் ஒரு  போலிசொத்து குறியீட்டை தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 485- Making or possession of any instrument for counterfeiting a property mark

*Whoever makes or has in his possession any die, plate or other instrument for the purpose of counterfeiting a property mark, or has in his possession a property mark for the purpose of denoting that any goods belong to a person to whom they do not belong, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years or with fine, or with both.]

* Subs. by Act 43 or 1958, sec. 135 and Sch., for the original section 485 (w.e.f. 25-11-1959).


இ.த.ச 486




 யாராவது, ஒரு போலி சொத்துக் குறியீடு பதிக்கப்பட்டுள்ள சொத்தை அல்லது சரக்கை அல்லது பெட்டியிலுள்ள சரக்கு அல்லது பொருளை அல்லது அத்தகைய போலி குறியீடு பதிக்கப்பட்டுள்ள பெட்டகம், மூட்டை ஆகியவற்றில் உள்ள பொருளை விற்பனை செய்வதும் அல்லது விற்பனைக்காக வைத்திருப்பதும் அல்லது தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.


இந்த குற்றத்திற்கு ஒர் ஆண்டு வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.


தான் நிரபராதி என நிருபிக்க வேண்டுமெனில்,  அவர்

1 - அத்தகைய சொத்தில் போலி குறியீடு போடப்பட்டது தனக்கு தெரியாது இது உண்மையானதா அல்லது போலியா என்பதை அறிய தேவையான முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்துப் பரிசீலனை பன்னி பார்த்திருக்கிறேன்

2 - தான் யாரிடமிருந்து இந்த போலி சொத்தைப் பெற்றேன் என்பதற்கான முழு விபரங்களையும் தனக்கு தெரிந்த வரையில் கூறியிருக்கிறார்.

3 - தான் மிகவும் நீதி, நேர்மையாக நடப்பவர் என்பதை நிருபிக்க வேண்டும்



Section 486- Selling goods marked with a counterfeit property mark

**[*Whoever sells, or exposes, or has in possession for sale, any goods or things with a counterfeit property mark] affixed to or impressed upon the same to or upon any case, package or other receptacle in which such goods are contained, shall, unless he proves-

(a) That, having taken all reasonable precautions against committing an offence against this section, he had at the time of the commission of the alleged offence no reason to suspect the genuineness of the mark, and

(b) That, on demand made by or on behalf of the prosecutor, he gave all the information in his power with respect to the persons from whom he obtained such goods or things, or

(c) That otherwise he had acted innocently.

be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.]

* Subs. by Act 4 of 1889, sec. 3, for the original section 486.

** Subs. by Act 43 of 1958, sec. 135 and sch., for certain words (w.e.f.25-11-1959). 




 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

1 comment:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா..

    ReplyDelete