Friday 25 September 2015

தினம் ஒரு சட்டம் - அவதூறும் அதற்கான தண்டனைகளும்....


அவதூறு என்றால்    

  பிறரைக் கேலி செய்வதும் அல்லது இரட்டை அர்த்ததில் வசைப்பாடு சொற்களை உபயோகப்படுத்துவது அவதூறாகிறது.



    யாராவது, ஒருவருடைய நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்லது அவருடைய நன்மதிப்பை கேடு உண்டாக்கும் என தெரிந்தும். ஒருவரைப்பற்றி மற்றவர்கள்
 அறியும் படி பேச்சால் அல்லது எழுத்தால் அல்லது அறிகுறிகளால் அல்லது காணும் காட்சிப் பொருட்களால் வசைப் பாடுவதையும் அல்லது வசைப் பாடி வெளியிடுதலையும் அவதூறு செய்தல் என்கிறோம்.

மேலும் வாசிக்க http://vriddhachalamonline.blogspot.in/2015/09/defamation.html

இ.த.ச 500



       யாராவது, ஒருவரை அவதூறு செய்ந்தால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிப்படும்.


Section 500- Punishment for defamation
       


     Whoever defames another shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both. 

இ.த.ச 501 
  
    யாரவது, ஒருவரை அவதூறு செய்ய எழத்தாலோ அல்லது உருவப்படத்தாலோ  அல்லது பேச்சாலோ அது அத்தகைய அவதூறாக உள்ளது என தெரிந்தும் அல்லது உருவாக்கும் என தெரிந்தும் அதனை உருவாக்குவதும் அல்லது வார்ப்பதும் தவறாகும். 

அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிப்படும்.


Section 501- Printing or engraving matter known to be defamatory
      

    Whoever prints or engraves any matter, knowing or having good reason to believe that such matter is defamatory of any person, 

   shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both. 


இ.த.ச 502  


      யாராவது, அவதூறான ஒரு புத்தகத்தையோ அல்லது அவதூறான வார்த்தை பதிக்கப்பட்ட தாளையோ அல்லது அவதூறாக ஒரு சின்னம் பொறிக்கப்பட்ட பொருளை விற்பனை செய்வதும் அல்லது விற்பனைக்கு வைத்திருப்பதும் குற்றமாகும்.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிப்படும்.
 

Section 502- Sale of printed or engraved substance containing defamatory matter
     Whoever sells or offers for sale any printed or engraved substance containing defamatory matter, knowing that it contains such matter, 

   shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1969


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete