Thursday 17 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 431-434 சொத்து அழித்தல் தண்டனைகள் - 3




இ.த.ச 431 - பொது மக்கள் பயன் படுத்தும் பாலம், பொது வழி ஆகியவற்றில் சொத்து அழித்தல் செய்வது



         யாரவது ஒரு பொது வழி , பாலம் அல்லது படகு செல்லும் ஆறு அல்லது கால்வாய் ஆகியவற்றில் ஒரு சொத்து அழித்தல் செய்ந்து அதன் மூலம் யாரும் செல்லமுடியாத வாறு ஒரு சேதம் அல்லது பொருட்களை ஏற்றி செல்ல இயலாதவாறு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உண்டாக்குவது அல்லது உண்டாக்கும் என தெரிந்து ஒரு செயலைச் செய்வதும் சொத்து அழித்தல் ஆகும். 

     இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.





Section 431- Mischief by injury to public road, bridge, river or channel
      Whoever commits mischief by doing any act which renders or which he knows to be likely to render  any public road, bridge, navigable river or navigable channel, natural or artificial, impassable or less safe for traveling or conveying property, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. 

 
இ.த.ச 432 -  பொது சாக்கடையை அடைத்தும் தடுத்தும் சொத்து அழித்தல் செய்வது
 
 
     யாரவது பொது மக்கள் உபயோகப்படுத்தும் பொது சாக்கடையை அடைப்பதும் அல்லது தடுப்பதும் அதனால் ஒரு தீமை அல்லது நட்டம் உண்டாகும் என தெரிந்து ஒரு சொத்து அழிப்பு செய்வது குற்றமாகும். 
 

  இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
 
Section 432- Mischief by causing inundation or obstruction to public drainage attended with damage

        Whoever commits mischief by doing any act which causes or which he knows to be likely to cause an inundation or an obstruction to any public drainage attended with injury or damage, 

       shall be punished with imprisonment of either description for term which may extend to five years, or with fine, or with both.
 
 
இ.த.ச 433 - மாலுமிக்கு வழிக்காட்டியை அழித்தல்



யாரவது, ஒரு மாலுமிக்கு வழிக்காட்ட உதவும் தீபம் அல்லது கடல் வழி அடையாளம் , மிதவை அல்லது விளக்கு ஆகியவற்றை அழிப்பதும் , மாற்றுவதும் அல்லது பயனின்றி போகும் படி செய்வதும் சொத்து அழித்தலாகும். இது குற்றமாகும்.
 
   இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
 
Section 433- Mischief by destroying, moving or rendering less useful a light-house or sea-mark
   
         Whoever commits mischief by destroying or moving any light-house or other light used as a sea-mark or any sea-mark or buoy or other thing placed as a guide for navigators, or by any act which renders any such light-house, sea-mark, buoy or other such thing as aforesaid less useful as a guide for navigators, 
   
        shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both. 


இ.த.ச 434 - நிலத்தின் எல்லைக்கல்லை மாற்றுதல்



 யாரவது, நிலத்தில் அடையாளமாகப் பயன் படுத்துவதற்காக , ஒரு அரசு ஊழியரால் அமைக்கப்பட்டிருக்கும் எந்தப் பொருளை அழிப்பதும் , மறைப்பதும் அல்லது பயனற்று போகும் படி செய்வதும் சொத்து அழித்தல் குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு ஒர்ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

 
Section 434- Mischief by destroying or moving, etc., a land- mark fixed by public authority

       Whoever commits mischief by destroying or moving any land-mark fixed by the authority of a public servant, or by any act which renders such land-mark less useful as such, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to one years, or with fine, or with both.
 
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

3 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி அண்பரே

      Delete
  2. பயனுள்ள தகவல் தளம்

    ReplyDelete