Tuesday 22 September 2015

தினம் ஒரு சட்டம் - திருமணம் தொடர்பான குற்றங்களும் அதன் தண்டனைகளும்-1


இ.த.ச 493 - பெண்ணை ஏமாற்றி மோசம் செய்தல்

எந்த மனிதராவது, மணமாகாத ஒரு பெண்ணை வஞ்சித்து தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் ஆகாத நிலையில்,  அந்தப் பெண் தன்னுடைய மனைவிதான் என்றும். சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் திருமணம் நடைப் பெற்றது என நம்பவைத்து அந்தப்பெண்ணுடன் இல்லறத்தில் அல்லது உடலுறுவில் ஈடுபடும்படி யாரேனும் செய்ந்தால். அது குற்றமாகும்.


அவருக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 493- Cohabitation caused by a man deceitfully inducing a belief of lawful marriage

Every man who by deceit causes any woman who is not lawfully married to him to believe that she is lawfully married to him and to cohabit or have sexual intercourse with him in that belief, 


shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
 இ.த.ச 494 - திருமணத்தை மறைத்து திருமணம் செய்தல்
யாராவது, கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது மறுமணம் செய்ந்துக் கொண்டால் அது குற்றமாகும். அந்த திருமணம் கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது செய்யப்படுவதால் அது திருமணமாகாது. அது செல்லாதக்க திருமணமாகும்.



     இந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
விளக்கம் - இந்தப் பிரிவானது ஒரு திருமணம் செல்லாது என தகுதிப் பெற்ற ஒரு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் இந்த பிரிவின் கீழ் அந்த நபரை தண்டிக்க முடியாது.
- தன்னுடைய கணவரோ அல்லது மனைவியோ ஏழு ஆண்டுகளாக எந்த தகவலும் இல்லை என்ற பட்சத்திலும் அவரைப் பற்றிய விவரம் அவர் கடைசியாக குடியிருந்த இடத்தில் விசாரிக்கும் போது கிடைக்கவில்லை
- அவரோடு தொடர்பில் உள்ள எவரும் அவர் உயிரோடு இருக்கும் வாய்ப்பு இல்லை யென கருதும் பட்சத்தில் அந்த நபர் மீண்டும் திருமணம் செய்ந்துக் கொள்வது குற்றமாகாது.


-ஆனால் தனது மறு திருமணத்திற்கு முன் சம்பந்தப்பட்ட நபருக்கு தனக்கு அத்தகைய முதல் திருமணம் நடைப்பெற்றத்தை கூறி நிலைமையை தெளிவுபடுத்த வேண்டியது இரண்டாவதாக திருமணம் செய்ந்துக் கொள்ளக்கூடிய கணவனோ அல்லது மனைவியோட பொருப்பாகும். ஆங்கிலத்திலும் வாசித்து தெளிவு பெறவும்.
Section 494- Marrying again during lifetime of husband or wife


   Whoever, having a husband or wife living, marries in any case in which such marriage is void by reason of its taking place during the life of such husband or wife, 

shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

Exception-This section does not extend to any person whose marriage with such husband or wife has been declare void by a Court of competent jurisdiction,

nor to any person who contracts a marriage during the life of a former husband or wife, if such husband or wife, at the time of the subsequent marriage, shall have been continually absent from such person for the space of seven years, 


and shall not have been heard of by such person as being alive within that time provided the person contracting such subsequent marriage shall, before such marriage takes place, inform the person with whom such marriage is contracted of the real state of facts so far as the same are within his or her knowledge.


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

1 comment: