இ.த.ச 262,
யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைகளை அவைகள் உபயோகப்பட்டுள்ளது என்ற குறியை அழிப்பதும் அல்லது அகற்றுவதும் குற்றமாகும். அந்தக் குறியை அழித்துவிட்டு அவைகளை உபயோகிக்கவில்லை நல்ல முத்திரை என உபயோகப்படுத்துவதும் அல்லது விற்பனை செய்வதும் அல்லது வைத்திருப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
262-
Using Government stamp known to have been before used
Whoever, fraudulently or with intent to
cause loss to the Government, uses for any purpose a stamp issued by
Government for the purpose of revenue, which he knows to have been
before used,
shall be punished with imprisonment of either description
for a term which may extend to two years, or with fine, or with both.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1708
இ.த.ச 263,
யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைகளை அவைகள் உபயோகப்பட்டுள்ளது என்ற குறியை அரசுக்கு நட்டம் உண்டாக்க வேண்டும் என அழிப்பதும், அல்லது அவ்வாறு அந்த முத்திரை குறியிடு அழிக்கப்பட்டுள்ளது என தெரிந்து தம் வசம் வைத்திருப்பதும் அல்லது விற்பனை செய்வதும் அல்லது வேறு வகைகளில் பயன்படுத்தினாலும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்றுஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
263-
Erasure of mark denoting that stamp has been used
Whoever, fraudulently or with intent to
cause loss to Government, erase or removes from a stamp issued by the
Government for the purpose of revenue, any mark, put or impressed upon
such stamp for the purpose of denoting that the same has been used, or
knowingly has in his possession or sells or disposes of any such stamp
from which such mark has been erased or removed, or sell or disposes of
any such stamp which he knows to have been used,
shall be punished with
imprisonment of either description for a term which may extend to three
years, or with fine, or with both.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1709
இ.த.ச 263A,
(1) (அ) - யாராவது, போலியான முத்திரைத் தாள்களை அல்லது முத்திரைகளை உருவாக்குவதும் அல்லது அவைகள் போலியானவை என தெரிந்தும் அவற்றை விற்பதும் அல்லது விற்பனைக்கு வைத்திருப்பதும் அல்லது அஞ்சலு்க்கு அவற்றைப் பயன் படுத்துவதும் குற்றமாகும்.
(1) (ஆ) யாராவது, தம்மிடம் எந்த விதமான சட்ட ரீதியான காரணமின்றி போலி வில்லைகளை வைத்திருப்பதும்
(1) (இ) யாராவது, போலி முத்திரைகளை உருவாக்கப்பயன்படும், அச்சு வில்லைகளை,
கருவிகள் அல்லது பொருட்கள் இருந்தாலும் அல்லது அந்தப் பொருட்களை உண்டாக்கினாலும் அல்லது தம் வசம் வைத்திருந்தாலும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரு நூறு ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
(2) போலி முத்திரைகளை உருவாக்கப் பயன்படும் அச்சு, தகடுகள் , இயந்திரங்கள் அல்லது பொருட்கள் யாரிடம் இருந்தாலும் அவைகள் கைப்பற்றப்படும். மேலும் அத்தகைய பண்டங்கள் பறிமுதல் செய்யப்படும்.
(3) இந்தப் பிரிவுகளில் போலி முத்திரைத் தாள்கள் என்பது அஞ்சலுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் தபால் வில்லைகள் மற்றும் காகிதங்களை குறிக்கும்.
(4) இந்தப் இதச 255 முதல் 263 பிரிவுகளில் பயன்படுத்தப்படும் அரசாங்கம் என்ற பதம் இந்திய அரசாங்கத்தையும் அதன் கீழ் செயலாற்றும் நிர்வாகத்தையும் மற்றும் அதன் கீழ் பணியாற்றும் நபர்களையும் குறிக்கும்.
Section
263-A-
Prohibition of fictitious stamps
Whoever -
(a) Makes, knowingly utters, deals in or sells any fictitious stamps, or knowingly uses for any postal purpose any fictitious stamp, or (b) Has in his possession, without lawful excuse, any fictitious stamp, or (c) Makes or, without lawful excuse, has in his possession any die, plate, instrument or materials for making any fictitious stamp, Shall be punished with fine which may extend to two hundred rupees. |
Any such stamps, die, plate,
instrument or materials in the possession of any person for making any
fictitious stamp *[may be seized and, if seized] shall be forfeited.
* Subs. by Act 42 of 1953, sec.4 and sch. III, for "may be seized and" (w.e.f. 23-12-1953) |
In this section "fictitious
stamp" means any stamp falsely purporting to be issued by the Government
for the purpose of denoting a rate of postage, or any facsimile or
imitation or representation, whether on paper or otherwise, of any stamp
issued by Government for that purpose.
|
In this section and also in
sections 255 to 263, both inclusive, the word, "Government", when used
in connection with, or in reference to, any stamp issued for the purpose
of denoting a rate of postage, shall, notwithstanding anything in
section 17, be deemed to include the person or persons authorized by law
to administer executive government in any part of India, and also in
any part of Her Majesty's dominions or in any foreign country.
|
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1710
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
கில்லர்ஜீ அவர்களுக்கு வணக்கம் - தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை
ReplyDeleteவணக்கம் - வாழ்த்துக்கள்
Delete