Tuesday, 6 October 2015

தினம் ஒரு சட்டம் - வன்முறைப் புணர்ச்சிக்கான தண்டனைகள்

இ.த.ச 376

உட்பிரிவு -1 -

  யாராவது , வன்முறைப் புணர்ச்சியை செய்ந்தாலும் உட் பிரிவு 2 ல் விளக்கப்பட்ட முறைகளில் அன்றி   வன் புணர்ச்சியில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு நபருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு குறையாமலும் பத்து ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரையில் நீட்டிக்க கூடிய சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

வன்புணர்ச்சியில் உட்படுத்தப்பட்டவர் அந்த பெண்ணின் கணவனாக இருப்பின் அவர் கற்பழித்த பெண் பன்னிரன்டு வயதுக்கு குறைவாக இருந்தால் ,

ந அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

உட்பிரிவு -2 ,

யாராவது ,  

  - ஒரு காவல் அலுவலர்

தாம் பணிப்புரியும் காவல் நிலையத்தின் வரம்புக்குள்;  அல்லது

தாம் பணிப்புரியும் காவல் நிலையத்தின் வரம்புக்குள் இருப்பினும்   அல்லது அது ஒரு காவல் நிலையத்தின் கட்டிடமாகவோ; அல்லது

தம் பொருப்பில் உள்ள ஒரு பெண்ணிடம் அல்லது தமக்குத் கீழ் பணிப்புரியும் ஒரு காவல் அலுவலரின் பொருப்பில் உள்ள ஒருப் பெண்ணிடம்

வன்முறைப் புணர்ச்சியில் ஈடுப்பட்டாலும்; அல்லது



- ஒரு அரசு ஊழியராக இருக்கும் ஒருவர் , தமது பொருப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணியாற்றும் அலுவலர் ஒருவரின் பொருப்பில் உள்ள பெண்ணி்டம் வன்முறைப் புணர்ச்சி செய்ந்தாலும்; அல்லது

- அமலில் உள்ள சட்டப்படி அமைக்கப்படுள்ள ஒரு பெண்களுக்கான சிறை, காவல் விடுதி அல்லது கழிப்பிடம் , மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகிய ஒன்றின் நிர்வாகப் பொறுப்பிலுள்ள அல்லது அங்கே பணிப்புரியும் ஒர் அரசு அதிகாரி தம் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சிறை, காவல் விடுதி, காப்பிடம் அல்லது இல்லம் ஆகியவற்றில் உள்ள பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சியில் ஈடுப்பட்டாலும் அல்லது


- ஒரு மருத்துவமனையில் பணிப்புரியும் அல்லது அதன் நிர்வகிக்கும் ஒரு அரசு ஊழியர் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சியில் ஈடுப்பட்டாலும் அல்லது

- ஒரு பெண் கற்பகமாக இருக்கின்றால் என்று தெரிந்தப்பின்னரும், அந்தப் பெண்ணுடன் வன்புணர்ச்சி செய்ந்தாலும் அல்லது

- பலர் ஒன்றாக கூடி ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ந்தாலும்,

அத்தகைய நபர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து ஆண்டுகள் குறையாத சிறைக்காவலை தண்டனையாக விதிக்கப்பட வேண்டும், மேலும் அபராதமும் உண்டு.

விளக்கம் - 1

இந்த கிளைப் பிரிவின் படி ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை வன்முறைப்புணர்ச்சிக்கு உட்படுத்தும் போது, அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கூட்டாக வனமுறைப் புணர்ச்சி செய்ததாக கருதப்படுவார்கள்


விளக்கம் -2

மகளிர் மற்றும் குழந்தைகள் இல்லம் என்பது பெண்களையும் குழந்தைகளையும் பாதுக்காக்கும் ஒரு இல்லத்தைக் குறிக்கும்.  அநாதை இல்லம் அல்லது திக்கற்றோர் இல்லம் என்பது சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது கைம்பெண்களைக் குறிக்கும்.

விளக்கம் -3

மருத்துவமனை என்பது ஒரு மருத்துவமனைக் கட்டிடத்தையும், நோய்க்கு உட்பட்டவர்கள் தங்கி மருத்துவம் பார்க்கும் இடத்தையும், மருத்துவ உதவி தேவைப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்யும் இடத்தை கூறிக்கும். நோய்க்கு மறு வாழ்வு அளிக்கும் இடத்தையும் கூறிக்கும்.




Section 376- Punishment for rape 


*Whoever, except in the cases provided for by sub-section (2), commits rape shall be punished with imprisonment of either description for a term which shall not be less than seven years but which may be for life or for a term which may extend to ten years and shall also be liable to fine unless the woman raped is his own wife and is not under twelve years of age, in which cases, he shall be punished with imprisonment of either description for a term which may extend to two years or with fine or with both:

Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment for a term of less than seven years.

*Subs. by Act 43 of 1983, sec. 3, for sec. 376 (w.e.f. 25-12-1983)



Whoever: -

(a) Being a police officer commits rape-

(i) Within the limits of the police station to which he is appointed; or

(ii) In the premises of any station house whether or not situated in the police station to which he is appointed; or

(iii) On a woman is his custody or in the custody of a police officer subordinate to him; or

(b) Being a public servant, takes advantage of his official position and commits rape on a woman is custody as such public servant or in the custody of a public servant subordinate to him; or

(c) Being on the management or on the staff of a jail, remand home or other place of custody established by or under any law for the time being in force or of a woman's or children's institution takes advantage of his official position and commits rape on any inmate of such jail, remand home, place or institution; or

(d) Being on the management or on the staff of a hospital, takes advantage of his official position and commits rape on a woman in that hospital; or

(e) Commits rape on a woman knowing her to be pregnant; or

(f) Commits rape when she is under twelve years of age; or

(g) Commits gang rape,


Shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than ten years but which may be for life and shall also be liable to fine:

Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment of either description for a term of less than ten years.

Explanation 1- Where a woman is raped by one or more in a group of persons acting in furtherance of their common intention, each of the persons shall be deemed to have committed gang rape within the meaning of this sub-section.

Explanation 2-"Women's or children's institution "means an institution, whether called an orphanage of a home for neglected women or children or a widows' home or by any other name, which is established and maintained for the reception and care of women or children.

Explanation: 3. - "Hospital" means the precincts of the hospital and includes the precincts of any institution for the reception and treatment of persons during convalescence or of persons requiring medical attention or rehabilitation].

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.


1 comment:

  1. பதிவின் விளக்கவுரை அருமை நண்பரே..

    ReplyDelete