இ.த.ச 375
கீழ் கண்ட முறையில் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் நடந்துக்கொண்டால் அவன் அந்தப் பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சியில் ஈடுப்பட்ட குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.
1 - ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு விரோதமாக
2- அந்தப் பெண்ணின் சம்மதமின்றி
3- அந்தப் பெண் அல்லது அந்தப் பெண்ணுக்கு நெருங்கிய ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தைப் பெற்று,
4 - அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் உடல் உறவு நடைப்பெற்றாலும் , அத்தகைய சம்பவத்தின் போது அந்தப் பெண் புத்தி சுவாதீனமற்று அல்லது இந்த குற்றத்தைப் புரியும் நபரால் அல்லது வேறோருவரால் அந்தப் பெண்ணுக்கு போதையூட்டும் மருந்து அளிக்கப்பட்டிருப்பதால் அதன் காரணமாக அந்தப் பெண் அத்தகைய சம்மதத்தை அளித்திருக்கலாம்
5- அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் அத்தகைய உடல் உறவு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் அத்தகைய சம்மதத்தினை அளிக்கும் போது அந்தப் பெண் புத்தி சுவாதீனமற்று இருந்ததால், அல்லது இந்த குற்றத்தைப் புரியும் நபரால் அல்லது வேறோருவரால் அந்தப் பெண்ணுக்கு போதையூட்டும் அல்லது மயக்கம் உண்டாக்க கூடிய மருந்து அளிக்கப்பட்டிருப்பதால்அதன் விளைவாக அந்தப் பெண் தான் எதற்காக அத்தகைய சம்மதத்தினை அளிக்கிறோம் என்பதைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் அறிய முடியாத சந்தர்ப்பத்தில் அத்தகைய சம்மதத்தை அளிக்கும் போது,
6 - அந்தப் பெண் பதினாறு வயது பூர்த்தியடையாத போது அவளுடைய சம்மதத்தைப் பெற்றும் , பெறாமலும்
மேற்க்கொள்ளப்படும் உடலுறவு வன்முறைப் புணர்ச்சியாகும்.
விளக்கம்
ஆண் தன் குறியை சிறிதளவு பெண்ணின் குறிக்குள் நுழைத்தாலும் வன்முறைப் புணர்ச்சி என்ற குற்றத்திற்கான உடல் புணர்ச்சி நடைப் பெற்றதாக கருத்தில் கொள்ளப்படும்.
விதி விளக்கு
பதினைந்து வயது முடிவடைந்துள்ள மனைவியுடன் கணவன் ஈடுபடும் உடல் புணர்ச்சி வன்புணர்ச்சி குற்றமாகாது.
Section
375-
Rape
*Rape.A man is said to commit "rape" who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions: -
First: - Against her will.
Secondly: -without her consent.
Thirdly: - With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.
Fourthly: -With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.
Fifthly: - With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.
Sixthly: - With or without her consent, when she is under sixteen years of age.
Explanation: - Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape.
Exception: -Sexual intercourse by a man with his wife, the wife not being under fifteen years of age, is not rape].
STATE AMENDMENT
Union Territory of Manipur
(a) In clause sixthly, for the word "sixteen" substitute the word "fourteen"; and
(b) In the Exception, for the word "fifteen" substitute the word "thirteen".
[Vide Act 30 of 1950.]
* Subs. by Act 43 of 1983, sec. 3, for sec. 375. (w.e.f. 25-12-1983)
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1831
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment