Tuesday, 13 October 2015

தினம் ஒரு சட்டம் - போலி பத்திரங்களை தயாரித்தல்


இ.த.ச 257

யாராவது போலி முத்திரைத் தாள்களை உருவாக்கினாலும் அதனை தயாரிக்கப்பயன் படும் இயந்திரத்தை உற்பத்தி செய்ந்தாலும் அல்லது அத்தகைய இயந்திரத்தை வாங்குவதும் அல்லது விற்பதும் குற்றமாகும்.



   
 
அத்தகைய போலி முத்திரைத் தாள்களை தயாரிக்கும் வேலையின் எத்தகைய காரியத்தை செய்ந்தாலும் அதனில் எந்த வேலையில் பங்கேற்றாலும் குற்றமாகும்.


இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 257- Making or selling instrument for counterfeiting Government stamp

    Whoever makes or performs any part of the process of making, or buys, or sells, or dispose of, any instrument for the purpose of being used, or knowing or having reason to believe that it is intended to be used, for the purpose of counterfeiting any stamp issued by Government for the purpose of revenue, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

இ.த.ச 258
             யாராவது,  அரசாங்க வருமானத்திற்காக உருவாக்கப்படும் முத்திரைத் தாள்களைப் போல, போலியான முத்திரைத் தாள்களை, அவைகள் போலியானது என தெரிந்தப் பின்பும் விற்பனைக்கு வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் குற்றமாகும்.


            இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 258- Sale of counterfeit Government stamp

     Whoever, sells, or offers for sale, any stamp which he knows or has reason to believe to be a counterfeit of any stamp issued by the Government for the purpose of revenue, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment