Thursday, 8 October 2015

தினம் ஒரு சட்டம் - நாணயங்களை போலியாக்குதல்



இ.த.ச 231

    யாராவது, போலி நாணயங்களை உருவாக்கினால் அது குற்றமாகும். மேலும் தெரிந்து போலி நாணயங்களை உருவாக்கினாலும் அல்லது அத்தகைய போலி நாணயம் உருவாகுவதற்கு எந்த ஒரு பகுதி வேலையை செய்ந்தாலும் குற்றமாகும். 



    இந்தக் குற்றம் புரிந்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


விளக்கம் - ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் அல்லது ஏமாற்ற பயன்படும் என்ற தெளிவுடன் ஒரு உண்மையான நாணயத்தைப் போல தோன்றும் படி போலி நாணயத்தைப் தோன்றும்படி செய்வதும் இந்தக் குற்றத்தைச் சாரும்.


Section 231- Counterfeiting coin

    Whoever counterfeits or knowingly performs any part of the process of counterfeiting coin, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

Explanation: - A person commits this offence who intending to practice deception, or knowing it to be likely that deception will thereby be practiced, causes a genuine coin to appear like a different coin.
 இ.த.ச 232
    யாராவது, போலி இந்திய நாணயங்களை உருவாக்குவது குற்றமாகும், அப்படி போலியாக இந்திய நாணயங்களை உருவாக்குவதற்கு தேவையான வேலையின் எந்த ஒரு பகுதியை செய்ந்தாலும் குற்றமாகும். 

    இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை யுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 232- Counterfeiting Indian coin


     Whoever counterfeits, or knowingly performs any part of the process of counterfeiting 1[Indian coin], 

      shall be punished with 2[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extent to ten years, and shall also be liable to fine.
1. Subs. by the A.O. 1950, for "the Queen's coin".

2. Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1.1.1956).


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment