Tuesday, 13 October 2015

தினம் ஒரு சட்டம் - போலி பத்திரங்களை உபயோகித்தால்


இ.த.ச 259



   யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைத் தாள்களை , அவைகள் போலியானது என அறிந்தப் பின்பு அவற்றை நல்ல முத்திரைத் தாள்கள் என விற்பதும் அல்லது விற்பதற்கு தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.


இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 259- Having possession of counterfeit Government stamp


     Whoever has in his possession any stamp which he knows to be a counterfeit of any stamp issued by Government for the purpose of revenue, intending to use, or dispose of the same as a genuine stamp, or in order that it may be used as a genuine stamp, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

இ.த.ச 260
       யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைத் தாள்களை ,
அவைகள் போலியானது என அறிந்தப் பின்பு அவற்றை நல்ல முத்திரைத் தாள்கள் போல உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.


 
       இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 260- Using as genuine a Government stamp known to be a counterfeit


      Whoever uses a s genuine any stamp, knowing it to be counterfeit of any stamp issued by Government for the purpose of revenue, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both. 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.

1 comment: