நல்லெண்ணத்துடன் ஒருவருடைய நலனுக்காகச் செய்யப்படும் காரியத்தால் எத்தகைய தீங்கு நேர்ந்தாலும் அந்தக் காரியத்தைக் குற்றமாகக் கொள்ளக்கூடாது.
அதற்குச் சம்பந்தப்பட்ட நபருடைய சம்மதம்கூடக் தேவையில்லை, சம்மதத்தை தெரிவிக்கக்கூடிய சூழ்நிலையில் அவர் இல்லை ; அல்லது சம்மதம் தெரிவிக்க அவருக்கு சக்தி இல்லை.
அத்துடன் அவருடைய சார்பில் சம்மதம் தரக்கூடிய பாதுக்காவலரோ , பெற்றோரோ அல்லது வேறு வகையில் அவருக்காக பொருப்பேற்கக்கூடியவரோ அருகில் இல்லை.
இந்த நிலையில் அவருடைய நலன் கருதி செய்யப்படும் எந்தக் காரியத்தையும் குற்றமெனக் கொள்ளக் முடியாது.
ஆனால் இதற்குச் சில நிபந்தனைகள் உண்டு.
அவையாவன
1. வேண்டுமென்றே மரணத்தை உண்டாக்குவதற்கு அல்லது மரணத்தை உண்டாக்க முயற்சி செய்வ தற்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது.
2. மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, அல்லது கொடிய இயலாமையைப் போக்குவதற்குச் செய்யப்படும் காரியமாக இல்லாமல் வேறு செயலால் மரணம் உண்டாக்கக் கூடிய செயல் என்று புரிபவர் அறிந்திருந்தால் அந்தக் காரியத்தைப் புரிந்தாலும் இந்த விதிவிலக்கு அதற்குப் பொருந்தாது
3. மரணத்தை அல்லது காயத்தைத் தடுப்பதற்காக அன்றித் தன்னிச்சையாகக் காயத்தை உண்டாக்கும் செயலுக்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது.
4. எத்தகைய குற்றத்துக்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளதோ, அத்தகைய குற்றங்களைப் புரிவதற்கெனச் செய்யப்படும் முயற்ச்சிக்கும் இந்த விதிவிலக்குப் பொருந்தாது.
Section 92 in The Indian Penal Code
Act done in good faith for benefit of a person without
consent.—Nothing is an offence by reason of any harm which it may cause
to a person for whose benefit it is done in good faith, even without
that person’s consent,
if the circumstances are such that it is
impossible for that person to signify consent, or if that person is
incapable of giving consent, and has no guardian or other person in
lawful charge of him from whom it is possible to obtain consent in time
for the thing to be done with benefit: Provisos—Provided—
(First) — That this exception shall not extend to the intentional causing of death, or the attempting to cause death;
(Secondly) —That
this exception shall not extend to the doing of anything which the
person doing it knows to be likely to cause death, for any purpose other
than the preventing of death or grievous hurt, or the curing of any
grievous disease or infirmity;
(Thirdly) -— That
this exception shall not extend to the voluntary causing of hurt, or to
the attempting to cause hurt, for any purpose other than the preventing
of death or hurt;
(Fourthly) —That
this exception shall not extend to the abetment of any offence, to the
committing of which offence it would not extend.
Illustrations
(a) Z is thrown
from his horse, and is insensible. A, a surgeon, finds that Z requires
to be trepanned. A, not intending Z’s death, but in good faith, for Z’s
benefit, performs the trepan before Z recovers his power of judging for
himself. A has committed no offence.
(b) Z is carried
off by a tiger. A fires at the tiger knowing it to be likely that the
shot may kill Z, but not intending to kill Z, and in good faith
intending Z’s benefit. A’s ball gives Z a mortal wound. A has committed
no offence.
(c) A, a surgeon,
sees a child suffer an accident which is likely to prove fatal unless
an operation be immediately performed. There is no time to apply to the
child’s guardian. A performs the operation in spite of the entreaties of
the child, intending, in good faith, the child’s benefit. A has
committed no offence.
(d) A is in a
house which is on fire, with Z, a child. People below hold out a
blanket. A drops the child from the house-top, knowing it to be likely
that the fall may kill the child, but not intending to kill the child,
and intending, in good faith, the child’s benefit. Here, even if the
child is killed by the fall, A has committed no offence.
Explanation.—Mere pecuniary benefit is not benefit within the meaning of
sections 88, 89 and 92.
புதியன அறிந்தேன்.
ReplyDeleteதொடருங்கள்.
தொடர்கிறேன்.
நன்றி
நன்றி
Deleteதகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி
Deleteசட்ட விளக்கம்
ReplyDeleteமட்டற்ற மகிழ்ச்சி மனதில்!
தங்களை வலைச் சரத்தில் அறிமுகம் செய்தமைக்காக
மிகவும் பெருமை அடைகின்றேன்.
தொடரட்டும் பணி
படரட்டும் மக்கள் மனதில்!
விருத்தாலத்தார் குழலின்னிசை கேட்க வரலாமே?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி குழலின்னிசை கேட்க வரேன்
Delete