Sunday, 22 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 89





        பன்னிரன்டு வயதுக்குட்பட்ட குழந்தை அல்லது சித்த சுவாதீனமில்லாத ஒருவருக்கு அவருடைய நன்மையைக் கருதி நல்லெண்ணத்துடன் செய்யப்படுவது எதுவும் குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது. அதற்கான சம்மதத்தைப் பாதுக்காப்பாளரிடமோ , அல்லது அவர்களுக்குப் பொருப்பேற்றுள்ளவர்களிடமோ பெற்றிருந்தால் போதும். அதனால் ஏற்படும் தீங்கு அல்லது சேதம் குற்றமாகக் கருதப்படமாட்டாது


           1. ஆனால் அதற்கான கருத்துடன் உண்டாக்கப்பட்ட மரணம் அல்லது மரணத்தை விளைவிப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சிக்கு இந்த விதி விலக்குப் பொருந்தாது.

          2. செய்யப்படும் காரியம் மரணத்தை அல்லது கொடுங்காயத்தை தவிப்பதற்காகச் செய்யப்பட வேண்டும். செய்பவர் தம் செயலால் மரணத்தை  விளைவிக்கும் என்று தெரிந்து செயல்பட்டிருக்ககூடாது. கொடுமையான நோயை அல்லது இயலாமையைக் குணப்படுத்துவற்காகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இந்த விதிவிலக்கு அந்தச் செயலுக்கு பொருந்தாது.

           3.   மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படுவதைத் தவிப்பதற்காகவும், கொடிய நோயைக் குணப்படுத்த அல்லது இயலாமையைக் குணப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு, அதனால் கொடுங்காயம் ஏற்பட்டிருந்தால் அன்றி அல்லது கொடுங்காயம் ஏற்படுத்தும் என்று தோன்றினாலன்றி அந்த விதிவிலக்குப் பொருந்தாது.

           4.   இந்த விதிவிலக்குக்கு அடங்காத குற்றத்தைப் புரிவதற்கு உடந்தையாகக் காரியம் ஆற்றும் போதும், இந்த விதிவிலக்கு பொருந்தாது.




Section 89 in The Indian Penal Code
   Act done in good faith for benefit of child or insane person, by or by consent of guardian.—Nothing which is done in good faith for the benefit of a person under twelve years of age, or of unsound mind, by or by consent, either express or implied, of the guardian or other person having lawful charge of that person, is an offence by reason of any harm which it may cause, or be intended by the doer to cause or be known by the doer to be likely to cause to that person: Provisos—Provided— 


(First) — That this exception shall not extend to the intentional causing of death, or to the attempting to cause death; 
(Secondly) —That this exception shall not extend to the doing of anything which the person doing it knows to be likely to cause death, for any purpose other than the preventing of death or grievous hurt, or the curing of any grievous disease or infirmi­ty;
(Thirdly) — That this exception shall not extend to the voluntary causing of grievous hurt, or to the attempting to cause grievous hurt, unless it be for the purpose of preventing death or griev­ous hurt, or the curing of any grievous disease or infirmity; 
(Fourthly) —That this exception shall not extend to the abetment of any offence, to the committing of which offence it would not extend. Illustration A, in good faith, for his child’s benefit without his child’s consent, has his child cut for the stone by a surgeon. Knowing it to be likely that the operation will cause the child’s death, but not intending to cause the child’s death. A is within the excep­tion, inasmuch as his object was the cure of the child.

1 comment: