Friday 9 October 2015

தினம் ஒரு சட்டம் - போலி நாணயத்தை பிறருக்கு கொடுத்தால்


இதச 239,

       யாராவது, தாம் வைத்திருப்பது போலி நாணயம் என அறிந்தப் பின்பும் அந்த நாணயத்தை பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் அல்லது ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பிறருக்கு கொடுப்பதும் அல்லது அதனை பிறர் பெற்றுக்கொள்ளும் படி பிறரைத் தூண்டுவதும் அல்லது அதற்கான முயற்ச்சினை செய்வதும் குற்றமாகும்.  


    இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 239- Delivery of coin, possessed with knowledge that it is counterfeit


     Whoever, having any counterfeit coin, which at the time when he became possessed of it knew to be counterfeit, fraudulently or with intent that fraud may be committed, delivers the same to any person, or attempts to induce any person to receive it shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine.
இதச 240,

     யாராவது, தாம் வைத்திருப்பது போலி இந்திய நாணயம் என அறிந்தப் பின்பும் அந்த நாணயத்தை பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் அல்லது ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பிறருக்கு போலி இந்திய நாணயத்தை கொடுப்பதும் அல்லது அதனை பிறர் பெற்றுக்கொள்ளும் படி பிறரைத் தூண்டுவதும் அல்லது அதற்கான முயற்ச்சினை செய்வதும் குற்றமாகும்.  
    இந்தக் குற்றத்திற்கு பத்துஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 240- Delivery of Indian coin, possessed with knowledge that it is counterfeit

    Whoever, having any counterfeit coin which is a counterfeit of 1[Indian coin], and which, at the time when he became possessed of it, he knew to be a counterfeit of 1[Indian coin], fraudulently or with intent that fraudulently or with intent that fraud may be committed, delivers the same to any person, or attempts to induce any person to receive 

it shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

1. Subs. by the A.O. 1950, for "Queen's coin". 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment