Sunday, 4 October 2015

தினம் ஒரு சட்டம் - பாலியல் தொழிலுக்கு பெண்ணை வாங்கினால் அல்லது வைத்திருந்தால்


இ.த.ச 373,

    யாராவது, ஒரு பெண்னை அவள் பதினெட்டு வயது நிரம்பவில்லை அவரை விபச்சாரத்தில் தள்ள வேண்டும் அல்லது அவர் முறைக்கேடான ஒரு புணர்ச்சிக்கு பயண்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது அத்தகைய விபச்சாரம் அல்லது முறைக்கேடனா புணர்ச்சி நடைப்பெறும் என தெரிந்தும் அல்லது அந்தப் பெண்னை ஒரு சட்ட விரோதமான அல்லது ஒழக்ககேடான செயலுக்கு உட்படுத்தக்கூடும் என தெரிந்தும்.  


   அந்த நபரை வாங்குவதும், வாடகைக்கு பெறுவதும் அல்லது வேறு எந்த வகையிலாவது தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.


   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


விளக்கம்-1

பதினேட்டு வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணை விலைக்கோ அல்லது வாடகைக்கோ அல்லது தம்வசம் வைத்திருக்கும் ஒருவர் அவர் ஒரு விபச்சாரியாகவோ அல்லது அந்த விபச்சார விடுதியை நடத்துபவராகவோ இருக்கலாம். அவர் தான் இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளியாகிறார். அத்தகைய மைனர் பெண்ணை விலைக்கோ அல்லது வாடகைக்கோ  வாங்கி  தான் விபச்சார தொழில் நடத்தவில்லை என்பதை நிறுபிப்பது அவரின் மீது நிலை நிறுத்தப்படுகிறது.


விளக்கம் -2 

    இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள முறைக்கேடானப் புணர்ச்சி என்பது என்னவெனில் திருமணம் ஆன இருவருக்களுக்கிடையே நடைப் பெறும் ஒரு புனிதமான தம்பத்திய உறவை, திருமணம்மாகாத இருவருக்கிடையே எவ்விதமான சம்பிரதாய அடிப்படையிலும் அல்லாமல் நடத்திவைப்பதும் அல்லது அவர்கள் தொடர்பு கொள்ள பிணைப்பு ஏற்ப்படுத்துவதும் அல்லது உறவினைப் பரம்பரைச் சடங்கின் படி ஏற்காதவர்கள் இருவர்களுக்கிடையே ஏற்படும் உடல் புணர்ச்சியைக் குறிக்கும்.



Section 373- Buying minor for purposes of prostitution, etc.
 

   Whoever buys, hires or otherwise obtains possession of any *[person under the age of eighteen years with intent that such person shall at any age be employed or used for the purpose of prostitution or illicit intercourse with any person or for any unlawful and immoral purpose, of knowing it to be likely that such person will at any age be] employed or used for any purpose, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

** Explanation I- Any prostitute or any person keeping or managing a brothel, who buys or otherwise obtains possession of a female under the age of eighteen years shall, until the contrary is proved, be presumed to have obtained possession of such female with the intent that she shall be used for the purpose of prostitution.

ExplanationII-"Illicit intercourse" has the same meaning as in section 372].

* Subs. by Act 18 of 1924, sec, 2 for certain words.

** Ins. by Act 18 of 1924, sec, 4. 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

2 comments:

  1. பதிவுக்கு வாழ்த்துகல் நண்பரே...

    ReplyDelete