Wednesday, 11 March 2015

படித்ததில் பிடித்தது - சூது கவ்வும்


தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்


“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங காண்போம்;இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’என்றான்.

விளக்கம்:

“தருமத்தின் வாழ்வைச் சூது விழுங்கும் ஆனால், தருமம் மறுபடியும் எப்படியாவது வெற்றி பெற்றே தீரும். இது இயற்கை உண்மை. அதுவரை நாம் பொறுமையாக இருப்பதே நல்லது. கோபம் வேண்டாம். யார் மேலும் குற்றமில்லை; இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்”, என்று சொல்லி, வீமனின் கோபத்தைத் தணித்தான் அருச்சுனன். மேலும் தன் கையில் வீல் உள்ளது என்றான்


என் விளக்கம்:

இன்று நானும் இதுப்போல சூழ்நிலையில் இருக்கின்றேன் தருமம் மறுபடியும் எப்படியாவது வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பார்ப்போம் தர்மமா அல்லது அதர்மமா.
மேலும் என் கையில் நீதி உள்ளது என்கிறேன்.

7 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. சரி தான்... அனைத்தும் உங்கள் மனதில் உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா

   Delete
 3. கள்ளச்சாட்சி குறித்து உபாகமம் - 19 அதிகாரம்

  17. வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

  18. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,

  19. அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

  20. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.

  21. உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

  ReplyDelete
 4. பொய் சாட்சிக்குறித்து குர்ஆனில்

  2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

  2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

  ReplyDelete
 5. நன்றி http://daily-one-song.blogspot.in/2009/11/blog-post_27.html

  கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம் முன்னோர்கள் பண்டைக்காலம் தொட்டே கூறிவரும் தத்துவத்தை மெய்ப்பித்தது புகழ்பெற்ற விஞ்ஞானி கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு (theory of relativity) .எனும் தத்துவம்.
  ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், "நாம் பார்ப்பவையெல்லாம் நிஜமல்ல" எனும் ரீதியில் தான் கண்டறிந்த தத்துவத்தை விளக்குகையில் அவ்விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் அவரிடம், "தங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள இயலாது. நான் தற்போது தங்களைப் பார்க்கிறேன், தாங்கள் நிஜமில்லையா?" என்று கேட்டானாம். ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, "அந்த நட்சத்திரம் தெரிகிறதா?" என்று கேட்க அவன், "ஆம்" என்று பதிலிறுத்தானாம். பதிலாக ஐன்ஸ்டீன், "அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டது. நீ தற்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளீயிட்ட ஒளியே என்று கூறி அந்த உண்மையை விளக்கவே இளைஞன் மலைத்துப் போனானாம்.

  அவ்வாறெனில், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் ஆறும் சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் ஜீவராசிகள் அனைத்துப் பொய்யா? உண்மை எது பொய் எது என்று உண்மையிலேயே விளங்கவில்லை.

  ReplyDelete
 6. கடைசியாக

  " தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’ என்றான்." என்று உள்ளதே ?

  எல்லோரும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா ?

  ReplyDelete