Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, 24 March 2015

பாரதி கண்ட புதுமைப்பெண்



பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
      


                      அவர்கள் வேறு யாரும் இல்லை ஒருவர் தலைநகரிலும் மற்றோருவர் தமி்ழகத்திலும் உள்ளார். ஒருவர் சட்டக்கல்லூரி மாணவி பெயர் ஸ்ரேயா மற்றோருவர் மதுரை  அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி,



           டெல்லியைச் சேர்ந்தவர்  ஐடி ஆக்ட் 66-Aக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் இந்த சட்டமானது அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளுக்கு [COI - 19] எதிராக இருப்பதாகக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி இன்று ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. 
        
           இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது ஆஜரான அட்டர்னி ஜெனரல், மகராஷ்டிராவில் பால்தாக்கரே மறைவையொட்டி ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது தவறானது. அதற்காக 66(A)ஐ நீக்கக் கூடாது என்று கூறினார். மேலும் இந்த சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது என்றார்.

மேலும் வாசிக்க: http://tamil.oneindia.com/news/2012/11/30/india-sc-issues-notice-centre-five-states-on-section-66a-165497.html




தொழில்நுட்ப சட்டம் சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :

 1. விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
      
2. தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும்  விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது

3. யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ


தகவலை அனுப்பியவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும். இங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.

நன்றி தமிழ்பேப்பர், ஒன் இந்தியா

Information Technology (Amendment) Act 2008, Section 66(A) :

"Any person who sends, by means of a computer resource or a communication device -

a) any information that is grossly offensive or has menacing character; or

b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,

c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages shall be punishable with imprisonment for a term which may extend to two three years and with fine.

Explanation: For the purposes of this section, terms "Electronic mail" and "Electronic Mail Message" means a message or information created or transmitted or received on a computer, computer system, computer resource or communication device including attachments in text, image, audio, video and any other electronic record, which may be transmitted with the message."


Thanks & Content ndtv, Picture: http://takshashila.org.in & The Hindu

================================================================

மற்றோருவர் மதுரை  அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி





    இவர் தான் படித்த சட்டப்புத்தகத்திலிருந்தே சட்ட நுனுக்கங்களை வைத்தே புகார் தொடுத்திருக்கின்றார்


அதாவது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328 மற்றும் 319 பிரிவின் படி

ஐ.பி.சி சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு வசதி செய்யும் உட்கருத்துடன் அல்லது அதனால் அனேகமாக அவருக்கு காயம் விளைவிக்கக்கூடும் என்று அறிந்து, நஞ்சு எதையும் அல்லது மதிமயக்கம் செய்கிற போதை தருகிற அல்லது நலத்தை கெடுக்கிற மருந்துச்சரக்கு அல்லது வேறு பொருள் எதையும் எவர் ஒருவருக்கும் கொடுப்பவர் அல்லது  உட்கொள்ளும்படி செய்பவர் எவராயினும் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். அவரை அபாரதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்  என்கிறது

ஐ.பி.சி 319-ன் படி ஒருவருக்கு உடல்வலி, நோய் அல்லது வலிமைகேடு உண்டாக்குவதைக் காயப்படுத்தல் எனப்படும்

மேலும் வாசிக்க விகடன் மற்றும் சத்தியமார்க்கம்




Section 328 in The Indian Penal Code

328. Causing hurt by means of poison, etc., with intent to commit an offence.—Whoever administers to or causes to be taken by any person any poison or any stupefying, intoxicating or unwholesome drug, or other thing with intent to cause hurt to such person, or with intent to commit or to facilitate the commission of an offence or knowing it to be likely that he will thereby cause hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. 

 Section 319 in The Indian Penal Code
319. Hurt.—Whoever causes bodily pain, disease or infirmity to any person is said to cause hurt.

 இவர்களே பாரதி கண்ட புதுமைப்பெண்கள்...

Friday, 13 March 2015

1729











இது உலக அளவில் போற்றப்படும் ராமானுசன்-ஹார்டி நம்பர். ஒரு நாள் ஹார்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ராமானுசனை காண சென்றவர் இன்று டல்லான நாள் மேலும் நான் ஏறிய டாக்சி எண் கூட டல் நம்பர் என்கிறார் உடன் ராமனுசன் என்ன எண் என வினவினார் அவர் பதிலாக 1729 என்கிறார். உடன் ராமனுசன் இது ஒரு வித்தியாசமான எண் என்கிறார் ஹார்லி எப்படி என்கிறார்

இரண்டு வகைகளில் இந்த நம்பரைப் பெற முடியும் மிக சிறிய எண்களின்  முன்றின் அடுக்குகளினால் அங்கிலத்தில் CUBE என்பார்கள் உதாரணம் கீழ்




இதற்கேன் இந்த பதிவு என்கிறீர்களா இதோ வருகிறேன் விஷயத்திற்கு

இதை ராமனுசன் தன் மனக்கணக்கிலிருந்து பதில் கூறினார் இன்று CALC உபயோகிக்கும் நம்மால் இந்த பதிலை கூற முடியவில்லை இவர் தான் இன்றைய கணினி சங்கேத குறீயிட்டின் தந்தை இவரின் அக்கால கண்டுப்பிடிப்புகள் சில இன்று புதிய வடிவில்

1. ATM Card PIN Number
2. CAPTCHA - Number System
3. Random Rumber Generation
4. Hash Secure Key Generation for Password
5. PublicKey - Private Key Encryption
6. Four Number Lottery System
7. Mock Theta functions
8. ASCII to Number , Number to ASCII
9. Searching the Data in Disk with Mathematical Algorithm

இதுப்போல நிறைய கண்டுப்பிடிப்புகளை அவர் செய்தார் சிறு பிரளயம் முதற்கொன்டு அவர் லண்டனில் தினமும் தவறாமல் காலையில் அந்த தட்பவெப்ப நிலையில் குளித்து புஜை செய்தது அவருக்கு தீராத TB  நோயைத்தந்தது அதனால் தன் தாயார் மற்றும் மனையாட்டியை காணவந்தார் தாயகம் வந்தார். மிக குறைந்த வயதில் உயிர் நீத்தார். அவர் இன்றைய கணிணி உலகில் இருந்திருந்தால் நிறைய சாதனைகளை புரிந்திருப்பார்

பின்குறிப்பு மேலும் தகவல்களுக்கு இங்கு

இந்த பதிவு ஒரு டைம் பாஸ் பதிவல்ல நாமும் இதை நம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கனும்.


Wednesday, 11 March 2015

படித்ததில் பிடித்தது - சூது கவ்வும்


தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்


“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங காண்போம்;இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’என்றான்.





விளக்கம்:

“தருமத்தின் வாழ்வைச் சூது விழுங்கும் ஆனால், தருமம் மறுபடியும் எப்படியாவது வெற்றி பெற்றே தீரும். இது இயற்கை உண்மை. அதுவரை நாம் பொறுமையாக இருப்பதே நல்லது. கோபம் வேண்டாம். யார் மேலும் குற்றமில்லை; இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்”, என்று சொல்லி, வீமனின் கோபத்தைத் தணித்தான் அருச்சுனன். மேலும் தன் கையில் வீல் உள்ளது என்றான்


என் விளக்கம்:

இன்று நானும் இதுப்போல சூழ்நிலையில் இருக்கின்றேன் தருமம் மறுபடியும் எப்படியாவது வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பார்ப்போம் தர்மமா அல்லது அதர்மமா.
மேலும் என் கையில் நீதி உள்ளது என்கிறேன்.

Tuesday, 10 March 2015

படித்ததில் பிடித்தது : Lord Ullins Daughter







Lord Ullin's Daughter - பிரபு உள்ளின் மகள்
by Thomas Campbell

A Chieftan to the Highlands bound,
Cries, 'Boatman, do not tarry;
And I'll give thee a silver pound
To row us o'er the ferry.'


சீப்டன்: படகோட்டியே பயப்படாதே என்னை அந்த கரையில் விட முடியுமா நான் எவ்வளவு வெள்ளி பணம் வேண்டுமானாலும் தருகிறேன்

'Now who be ye would cross Lochgyle,
This dark and stormy water?'
'Oh! I'm the chief of Ulva's isle,
And this Lord Ullin's daughter.




படகோட்டி: யாருயா நீ இந்த நேரத்துலஇந்த நதியை கடக்க சொல்லுற என்ன விஷயம் சொல்லு


சீப்டன்: நான் உல்வா தீவின் தலைவன் இவள் என் காதலி உள்ளின் மகள்
 
'And fast before her father's men
Three days we've fled together,
For should he find us in the glen,
My blood would stain the heather.



சீப்டன்: வேகமாக ஆற்றைக்கடக்க உதவி செய் இவளின் தந்தையின் ஆட்கள் எங்களை தேடுகிறார்கள் கடந்த மூன்று நாளாக நாங்கள் ஓடிக்கொன்டிருக்கின்றோம் எங்களைப்பரா்த்தால் அவர்கள் கொன்றுவிடுவார்கள்


 'His horsemen hard behind us ride;
Should they our steps discover,
Then who will cheer my bonny bride
When they have slain her lover?'


சீப்டன்: குதிரை வீரர்கள் எங்கள் பின்னால் வருகிறார்கள் என்னை அவர்கள் கொன்றுப்போட்டால் என் காதலியின் சந்தோஷ நாட்களை என்ன முடியுமோ

 Outspoke the hardy Highland wight:
'I'll go, my chief - I'm ready:
It is not for your silver bright,
But for your winsome lady.


படகோட்டி: சீப் நான் தயார் வெள்ளிக்காக இல்ல உன்னுடைய காதலிக்காக

 'And by my word, the bonny bird
In danger shall not tarry:
So, though the waves are raging white,
I'll row you o'er the ferry.'


படகோட்டி: நமக்கேதிரே பெரிய வெள்ளம் போல நீர் உள்ளது இருந்தாலும் உங்களுக்காக படகை செலுத்துகிறேன்

 By this the storm grew loud apace,
The water-wraith was shrieking;
And in the scowl of heaven each face
Grew dark as they were speaking.


கவிஞர்: காண்போரை கவலை பட செய்யும் நதியின் அலைகள் ஒரு நரகத்தைப்போல காட்சியளித்தது
 

But still, as wilder blew the wind,
And as the night grew drearer,
Adown the glen rode armed men-
Their trampling sounded nearer.



கவிஞர்  : நல்ல சுறாவெளி விசியது இருளும் மெல்ல சுழ்ந்தது குதிரைவீரர்கள் வரும் சத்தமும் கேட்டது


'Oh! Haste thee, haste!' the lady cries,
'Though tempests round us gather;
I'll meet the raging of the skies,
But not an angry father.'



சீப்டன்காதலி :வேகமாக! வேகமாக!! அவர்கள் வந்துவிட்டார்கள் நான் இந்த அலையைக்கூட எதிர்கொள்ள முடியும் ஆனால் என்னால் என் தந்தையை என்னால் எதிர் கொள்ள முடியாது

The boat has left a stormy land,
A stormy sea before her-
When oh! Too strong for human hand,
The tempest gathered o'er her.


கவிஞர்: படகு கரையை விட்டு நதியில் இறங்கியது இருவரின் இதயத்திலும்

இடி இறங்கியது போல இருந்தது

And still they rowed amidst the roar
Of waters fast prevailing;
Lord Ullin reach'd that fatal shore-
His wrath was chang'd to wailing.



கவிஞர்: படகு நதியின் நடுவில் சென்றுக்கொன்டிருந்தது அப்போது பிரபு உள்ளீன் தன் ஆட்களுடன் அங்கு வந்தார் தன் மனதை மாற்றிக்கொன்டார் அவர்களை சேர்த்து வைக்க வேன்டும் அவருள் எழ்ந்தது


 For sore dismay'd, through storm and shade,
His child he did discover;
One lovely hand she stretch'd for aid,
And one was round her lover.


கவிஞர்: அப்போது எழந்த ஒரு பெரிய அலை அவர்களை சூழ்ந்துக்கொன்டது



'Come back! Come back!' he cried in grief,
'Across this stormy water;
And I'll forgive your Highland chief,
My daughter!- oh, my daughter!'

பிரபு உள்ளின் : மகளே வந்துவிடு ! வந்துவிடு !! அந்த ஆழிப்பேரலையிலிருந்து நான் உன்னையும் உன் காதலனையும் மன்னித்து விடுகிறேன் என் மகளே! என் மகளே!!

 

'Twas vain: the loud waves lash'd the shore,
Return or aid preventing;
The waters wild went o'er his child,
And he was left lamenting.



கவிஞர்: அப்போது எழந்த பெரிய அலை அவர்களை சூழ்ந்துக்கொன்டது எந்த உதவியும் கிடைக்கவில்லை நதி அவர்களை இழ்த்துக்கொன்டது. உள்ளீன் அழதுக்கொன்டு வீடு திரும்பினான்.


Thomas Campbell

படித்ததில் பிடித்தது : தேரா மன்னா செப்புவ துடையேன்



20. வழக்குரை காதை
தேரா மன்னா செப்புவ துடையேன் 
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்


அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; 


விளக்கம்

தேரா மன்னா - ஆராய்ச்சியில்லாத அரசனே;

சேப்புவது உடையேன் - நின்பால் கூறவேண்டிய குறை ஒன்றுடையேன் காண் யான்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் - சிறிதும் இகழ்தற்கிடனில்லாத சிறப்பினோடே விண்ணவர் தாமும் வியந்து புகழும்படி ஒரு புறாவினது மிக்க துன்பத்தினைத் தீர்த்தருளிய சிபி என்னும் செங்கோல் வேந்தனும் அவனல்லாமலும்;



வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் பெறல் அரும்புதல்வனை ஆழியின் மடித்தோன் - அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியினது நடுவில் அமைந்த நாக்கு அசையும்படி ஓர் ஆவானது அசைத்து ஒலித்த அளவிலே விரைந்து அங்குச் சென்று அம்மணியை அசைத்த ஆவினது கடைக்கண்ணினின்றும் ஒழுகுகின்ற துன்பக் கண்ணீர் தனது நெஞ்சினைச் சுடுதல் பொறாது அதற்குற்ற குறையை அறிந்தோர்பால் ஆராயந்துணர்ந்து அதற்கிழைத்த குற்றத்திற்கு முறை செய்வான் பெறற்கரும் செல்வமாகிய தன் ஒரே மகனைத் தன் தேராழியின் அடியிற் கிடத்திக் கொன்ற செங்கோல் வேந்தனாகிய மனு நீதிச் சோழன் என்பானும் அருளாட்சி செய்த;

 பெரும்பெயர் புகார் - பெரிய புகழ் படைத்த பூம்புகார் என்னும் நகரங்காண்; என் பதி -யான் பிறந்து வளர்ந்த இடமாகும்;



யான் அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருந்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி- அம்மூதூரின்கண் பிறரால் எட்டியும் சுட்டியும் பழி கூறப்படாத பழஞ்சிறப்பினோடு திகழும் வாணிகர் குடிகளுள் வைத்து வண்மை காரணமாக எழுந்த தனிப்பெரும் புகழ் திசையெலாம் சென்று திகழ்தலையுடைய கொழுங்குடிச் செல்வனாகிய பெருங் குடியிற் பிறந்தவனும் மாசாத்துவான் என்னும் இயற்பெயரோடு மன்னனால் வழங்கப்பட்ட இருதிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயரையு முடையவனும் ஆகிய வணிகனுடைய ஒரே மகனாகப் பிறந்துவைத்தும்;

ஊழ்வினை துரப்ப வாழ்தல் வேண்டி - எமது பழவினை செலுத்துதலாலே எங்குலத் தொழில் செய்து நன்கு வாழ்தலை விரும்பி;

சூழ்கழல் மன்னா - சுற்றிக் கட்டிய வீரக் கழலையுடைய மன்னனே;

நின் நகர்ப் புகுந்து - உனது கோநகரமாகிய இம் மதுரையின்கண் புகுந்து;

இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி - இவ்விடத்தே அத் தொழிலுக்கு முதலாக என்னுடைய காற் சிலம்புகளுள் ஒன்றனை விற்றற்கு வந்து;


நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - உன்னாலே கொலைக்களத்தின்கண் வெட்டுண்டு ஒழிந்த கோவலன் என்பவனுடைய மனைவியாவேன் காண்;

என் பெயர் கண்ணகி என்பது என - என்னுடைய பெயர் கண்ணகி என்பதுகாண் என்று கூறா நிற்ப, என்க.

நன்றி தினமலர் [http://temple.dinamalar.com/news_detail.php?id=8335]


Monday, 9 March 2015

படித்ததில் பிடித்தது : Fear No More





Fear No More


Fear no more the heat o’ the sun,
Nor the furious winter’s rages;
Thou thy worldly task hast done,
Home art gone, and ta’en thy wages:
Golden lads and girls all must,
As chimney-sweepers, come to dust.

Fear no more the frown o’ the great;
Thou art past the tyrant’s stroke;
Care no more to clothe and eat;
To thee the reed is as the oak:
The scepter, learning, physic, must
All follow this, and come to dust.

Fear no more the lightning flash,
Nor the all-dreaded thunder stone;
Fear not slander, censure rash;
Thou hast finished joy and moan:
All lovers young, all lovers must
Consign to thee, and come to dust.

No exorciser harm thee!
Nor no witchcraft charm thee!
Ghost unlaid forbear thee!
Nothing ill come near thee!
Quiet consummation have;
And renownèd be thy grave!
 நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வகுப்பாசிரியர் நெப்போலியன் சார் எடுத்த பாடல் அதன் அர்த்தங்கள் சொல்லி மாளாது

 பயம் இனி இல்லை

பயம் னி இல்லை, சூரியனில் தூக்கிப்போட்டாலும்
மேலும் பெரிய சூராவெளியில் அடித்து சென்றாலும்
எல்லா கலைகளும் அழியும் பெரும் செல்வங்களும் அழியும்
தங்க மகன்களும் மகள்களும் வேலையாள்களும் 
பூமியின் அடியில் அழியும்

பயம் னி இல்லை, எவ்வளவு பெரிய அதிகாரி அல்லது சர்வதிகாரி முன்னாலும்
எதை திண்போம் எதை உடுத்துவோம் என்ற கவலையில்லை
அரசன்,  அறிஞன் மற்றும் மருத்துவர் எல்லாரும் 
 பூமியின் அடியில் செல்வார்களா



பயம் னி இல்லை மின்னல் மற்றும் இடியின் முன்னாலும் 
பொய் சாட்சி சொல்பவனுக்கும் பயப்படாதே
பொய் வழக்குக்கும் பயப்படாதே
அவர்களின் இன்பமும், களவியும் முடிந்தது
எல்லாரும் பூமியின் அடியில் செல்வார்களா

 எந்த ஒரு சூன்யமும் அவர்களை துன்படுத்துவதில்லை

எந்த சூன்யமும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை
எந்த துன்பமும் அவர்களை அனுகாது
மணவாளன் போல கல்லறையில் மெளனமாக இருப்பார்களாக

அதாவது நாம் வாழ்வில் எதற்கும் பயப்படக்கூடாது தவறு ஏதும் செய்யாமல்