Wednesday 18 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 211



தினம் ஓரு சட்டம் - இ.த.ச 211

    ஒருவருக்கு துன்பம் உண்டாக்க வேண்டும்  என்ற கருத்துடன் அவர் மீது குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பதும் அல்லது பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும்.

    சட்ட பூர்வமாகவும் நியாய பூர்வமாகவும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது, குற்றம் புரிந்ததாக பொய்யான குற்றச்சாட்டைத் தொடர்வதும் குற்றமாகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்

   அப்படிச் சுமத்தப்பட்ட குற்றம் மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைக்காவலைத் தண்டனையாகத் பெற்றுத்தர தக்க குற்றமாக இருப்பின் , பொய்க் குற்றம் சாட்டியவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்

Section 211 in The Indian Penal Code
211. False charge of offence made with intent to injure.—Whoev­er, with intent to cause injury to any person, institutes or causes to be instituted any criminal proceeding against that person, or falsely charges any person with having committed an offence, knowing that there is no just or lawful ground for such proceeding or charge against that person, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both; and if such criminal proceeding be instituted on a false charge of an offence punishable with death, 1[imprisonment for life], or imprisonment for seven years or upwards, shall be punishable with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
    
[Source & Thanks http://indiankanoon.org/doc/649942/]


No comments:

Post a Comment