Sunday, 9 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 221 - பொது ஊழியர் சட்ட விரோதமாக சிறையிலிருந்து தப்புவித்தல்





      யாராவது குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட
வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தப் அரசாங்க பொது ஊழியர் அந்தக் குற்றவாளி களைக் கருத்துடன் சிறைப்பிடிக்காமல் விட்டு விடுவதும் அல்லது குற்றவாளியை தப்பித்து ஒடுவதற்கும் முயற்சி செய்யத் துணையாக இருப்பதும் குற்றமாகும்.



    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் தப்புவித்தவர்களுக்கு மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் தப்புவித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .  



Read more: http://devgan.in/ipc/section/221/#ixzz3iFwcvwPP
 

No comments:

Post a Comment