Thursday, 20 August 2015

தினம் ஓரு உரிமை - கல்விக்கான சுதந்திரம்



இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத் 29 முதல்

பாகம் III - கல்விக்கான சுதந்திரம் - தொடர்ச்சி




29.சிறுப்பான்மை மக்களுக்கான உரிமைகள்

(1) - இந்தியாவில் வசிக்கின்ற மக்கள், ஒவ்வொருவருக்கும் தம் தாய்மொழியை பேணிக் காப்பதற்கான உரிமை இருக்கின்றது, அது எழுத்து வடிவிலோ அல்லது பேச்சி வடிவில் அல்லது ஒரு பண்பாட்டிற்கும் பொருந்தும். 



(2) - எந்த குடிமக்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் மதம், சாதி, இனம், மொழி அல்லது எதேனும் ஒரு காரணத்தைக் காட்டி அரசால் அல்லது அரசு உதவிப் பெற்று நடத்தப்படும் கல்விக் கூடங்களில் பயில அனுமதி அளிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது.


29. Protection of interests of minorities 

(1) Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same

 
(2) No citizen shall be denied admission into any educational institution maintained by the State or receiving aid out of State funds on grounds only of religion, race, caste, language or any of them 




 30. மதசார்பு அல்லது மொழியின் காரணமாக சிறுபான்மையினர் கல்வி நிலையம் தொடர்பாக

(1) மதச் சார்பு அல்லது ஒரு மொழியின் காரணமாக சிறுபான்மையினர் என்று கருதப்பட்டுள்ள குடிமக்களுக்கு, அவர்களுக்கெனக் கல்விச்சாலைகளை நிறுவுவதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் உரிமை இருக்கிறது.
(1A) - இந்த சட்டத்தின் படி சட்ட பூர்வமான முறையில் ஒரு பொது உபயோகத்துக்காக மதச் சார்பு அல்லது மொழியின் காரணமாக சிறுபான்மையினர் கல்விச்சாலை அமைந்திருக்கும் நிலத்தை அரசாங்கம் கைப்பற்றும் போது அந்த நிலத்திற்கான அரசாங்கம் நிர்ணயித்துள்ள அல்லது வேறு ஒரு சட்டப்படி ஒரு தொகையை நிர்ணயித்து அதை தந்து  அவ்வாறு அந்த இடத்தை கைப்பற்றும் போது இந்த 30. வது ஷரத்தின் (1) கிளையின்   கூறின் கீழ் அவ்வாறு கைப்பற்றுவதை காரணம் காட்டி தடுக்க முடியாது.

(2) - மதச் சார்பு அல்லது மொழியின் காரணமாக சிறுபான்மையினராக உள்ளவர்களின் நிர்வாகத்தின் கீழ் ஒரு கல்வி சாலை இருக்கிறது என்ற காரணம் காட்டி, சிறுபான்மை குடிமக்களுக்குகான கல்விசாலைக்கு ஒரு    உதவித் தொகை அளிப்பதில் எத்தகைய பாகுப்பாட்டையும் அரசு காட்டக்கூடாது.

 30. Right of minorities to establish and administer educational institutions 

(1) All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institutions of their choice 

(1A) In making any law providing for the compulsory acquisition of any property of an educational institution established and administered by a minority, referred to in clause ( 1 ), the State shall ensure that the amount fixed by or determined under such law for the acquisition of such property is such as would not restrict or abrogate the right guaranteed under that clause 
(2) The state shall not, in granting aid to educational institutions, discriminate against any educational institution on the ground that it is under the management of a minority, whether based on religion or language 
தகவல் http://indiankanoon.org/doc/1983234/ 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2 comments:

  1. வணக்கம் நண்பரே நல்ல தகவல்களுக்கு நன்றி
    தங்களைக் காணமுடியவில்லையே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ... எங்க நண்பரே... விழாவிலா

      Delete