Sunday, 2 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 211 - மோசடியாக மற்றவர் மீது பொய் வழக்கு தொடுத்தல்



    ஒருவருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் எண்ணத்துடனும் அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பதும், அல்லது பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும்.


   நியாயப்பூர்வமாகவும் அல்லது சட்டப்பூர்வமாக எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது, குற்றம் புரிந்ததாக பொய்யான குற்றச்சாட்டைத் தொடர்வதும் பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும்.

    இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும். 

   அப்படிச் சுமத்தப்பட்ட ஒரு குற்றம் மரணத்தண்டனை, ஆயுள்த்தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைக்காவலைத் தண்டனையாகப் பெறத்தக்க குற்றசாட்டாக இருப்பின், பொய்க் குற்றம் சாட்டியவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.
 

IPC 211: Section 211 of the Indian Penal Code

False charge of offence made with intent to injure

     Whoever, with intent to cause injury to any person, institutes or causes to be instituted any criminal proceeding against that person, or falsely charges any person with having committed an offence, knowing that there is no just or lawful ground for such proceeding or charge against that person, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both; 

    and if such criminal proceeding be instituted on a false charge of an offence punishable with death imprisonment for life, or imprisonment for seven years or upwards, shall be punishable with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

Source https://www.kaanoon.com/indian-law/ipc-211/
 


No comments:

Post a Comment