Showing posts with label பொய்ச்சான்று. Show all posts
Showing posts with label பொய்ச்சான்று. Show all posts

Monday, 3 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 210 - மோசடியாக பணம் பெற்றதாக மற்றவர் மீது பொய் வழக்கு தொடுத்தல்






       ஒருவர் நமக்கு எந்த விதமான தொகையும் தரவேண்டியது இல்லை ,  ஆனால் அந்த நிலையில் மோசடியாக அவர் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஒரு ஆணையைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

     மேலும் ஒருவர் நமக்கு கடன் பட்டிருக்கும் தொகையை விட அதிகமாக தர வேண்டும் என மோசடியாக அவர் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஒரு ஆணையைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  மேலும், நமக்கு எவ்விதமான உரிமையும் இல்லாத ஒரு சொத்துக்காக அப்படி வழக்குத் தொடர்வதும்,  அவர் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஒரு ஆணையைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

   ஒரு நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கை எடுத்து அடைய வேண்டியவற்றை அடைந்த பிறகு, மீண்டும் அந்த ஆணையைப் பின் பற்றி நடவடிக்கை எடுப்பதும், பிறரை அந்த ஆணையைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கும் படி அனுமதிப்பதும் குற்றமாகும்.
  
  இதுப்போன்ற செயல்கள், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படுபவைகள். ஆகவே இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும். 



Section 210:- Fraudulently obtaining decree for sum not due

Whoever fraudulently obtains a decree or order against any person for a sum not due, or for a larger sum than is due or for any property or interest in property to which he is not entitled, or fraudulently causes a decree or order to be executed against any person after it has been satisfied or for anything in respect of which it has been satisfied, or fraudulently suffers or permits any such act to be done in his name, 

shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

Sunday, 2 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 211 - மோசடியாக மற்றவர் மீது பொய் வழக்கு தொடுத்தல்



    ஒருவருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் எண்ணத்துடனும் அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பதும், அல்லது பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும்.


   நியாயப்பூர்வமாகவும் அல்லது சட்டப்பூர்வமாக எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது, குற்றம் புரிந்ததாக பொய்யான குற்றச்சாட்டைத் தொடர்வதும் பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும்.

    இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும். 

   அப்படிச் சுமத்தப்பட்ட ஒரு குற்றம் மரணத்தண்டனை, ஆயுள்த்தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைக்காவலைத் தண்டனையாகப் பெறத்தக்க குற்றசாட்டாக இருப்பின், பொய்க் குற்றம் சாட்டியவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.
 

IPC 211: Section 211 of the Indian Penal Code

False charge of offence made with intent to injure

     Whoever, with intent to cause injury to any person, institutes or causes to be instituted any criminal proceeding against that person, or falsely charges any person with having committed an offence, knowing that there is no just or lawful ground for such proceeding or charge against that person, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both; 

    and if such criminal proceeding be instituted on a false charge of an offence punishable with death imprisonment for life, or imprisonment for seven years or upwards, shall be punishable with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

Source https://www.kaanoon.com/indian-law/ipc-211/
 


தினம் ஓரு சட்டம் - இ.த.ச 209 - நீதிமன்றத்தில் பொய்வழக்கு தொடுத்தல் இல்லாத உரிமைக்காக







     ஒரு நீதிமன்றத்தில் , நமக்கு இல்லாத ஒரு உரிமைக்காக வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கைத் தொடர்ந்தவருக்குத் தாம் கோரும் உரிமை பொய்யானது என்பது நன்கு தெரியும். அப்படி நியாமின்றி பொய்யாகவும் தொடரப்பட்ட அத்தகைய வழக்கு பிறருக்கு தொல்லை தருவதருக்காவே தொடுக்கப்பட்டதாகும். 

     இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும். 


Section 209- Dishonestly making false claim in Court 

      Whoever fraudulently or dishonestly, or with intent to injure or any person, makes in a Court of Justice any claim which he knows to be false, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, and shall also be liable to fine. 

Source http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1650

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 208 - இல்லாத கடனை இருப்பதாக நம்ப வைத்தல்




      ஒருவருக்கு நாம் எந்தத் தொகையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
     இருப்பினும் அவர்க்கு நாம் பணம் தரவேண்டும் என வழக்குத் தொடர்ந்து ஆணை பெற அனுமதிக்கிறோம்.

   அதுப்போல நாம் ஒருவர்க்கு தரவேண்டிய தொகைக்கு அதிகமான தொகையைப் பெற்றுள்ளோம் என்று நீதிமன்றத்தில் ஆணையைப் பெற நாம் சம்மதிக்கின்றோம்.

   ஒருவர் நமக்கு  தரவேண்டிய கடனைப் முழவதும் நாம் பெற்றுக் கொண்டு அவர் தரவில்லை என்று நடவடிக்கை எடுக்க நாம் அவரை அனுமதிக்கின்றோம்.

   இதுப்போன்ற செயல்கள், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படுபவைகள். ஆகவே இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும்.

உதாரணம்-

 இதனால் நாம் நம்முடைய சொத்துக்களை ஜப்தி அல்லது தீர்வினைக்கு ஆகாமல் தடுக்கும் பொருட்டு, இல்லாத கடனை இருப்பதாகவும் , வாங்காத கடனை வாங்கியதாக காட்டி பிறரையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதாகும்.

 

 

 

Section 208:- Fraudulently suffering decree for sum not due


    Whoever fraudulently causes or suffers a decree or order to be passed against him at the suit of any person for a sum not due or for a larger sum than is due to such person or for any property or interest in property to which such person is not entitled, or fraudulently causes or suffers a decree or order to be executed gainst him after it has been atisfied, or for anything in respect of which it has been satisfied, 


     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.


llustration
  1. A institutes a suit against Z. Z, knowing that A is likely to obtain a decree against him, fraudulently suffers a judgment to pass against him for a larger amount at the suit of B, who has no just claim against him, in order that B, either on his own account or for the benefit of Z, may share in the proceeds of any sale of Z’ property which may be made under A’ decree. Z has committed an offence under this section.

Read more: http://devgan.in/indian_penal_code/chapter_11.php#ixzz3hf1U7FZN

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 207 - உரிமை இல்லாத சொத்திற்கு உரிமை கொன்டாடுதல்



     தனக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தில் எவ்விதமான உரிமையும் இல்லை என்று அறிந்தப்பின்னும் திருட்டுத்தனமாக அந்தச் சொத்தை ஏற்றுக் கொள்ளுவது, பெற்றுக்கொள்ளுவதும் அல்லது உரிமை கொண்டாடுவதும் குற்றமாகும்.

 



       பிறருக்குரிய ஒரு சொத்தை, ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அல்லது தகுதிப்பெற்ற அரசாங்க அதிகாரியின் உத்தரவின் பேரில் கைப்பற்றும்போது, அதைத் தவிர்ப்பதற்காகத் தனக்கு அந்தச் சொத்தில் உரிமை இருக்கிறதென்று மோசடி செய்வதும் குற்றமாகும்.

        உரிமையியல் தகுதிப்பெற்ற நீதிமன்றம்  அல்லது  உரிமையியல் தகுதிப்பெற்ற அதிகாரி அத்தகைய உத்தரவினைப் போடலாம் என்று அறிந்தப்பின் அத்தகைய மோசடி செய்வதும் குற்றமாகும்.

          இந்தக் குற்றத்திற்க்காக இரண்டு ஆண்டுகள் வரைக் சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாகக் விதிக்கப்படும்.



S. 207


Fraudulent claim to property to prevent its seizure as forfeited or in execution

 
 Whoever fraudulently accepts, receives or claims any property or any interest therein, knowing that he has no right or rightful claim to such property or interest, or practices any deception touching any right to any property or any interest therein, intending thereby to prevent that property or interest therein from being taken as a forfeiture or in satisfaction of a fine, under a sentence which has been pronounced, or which he knows to be likely to be pronounced by a Court of Justice or other competent authority, or from being taken in execution of a decree or order which has been made, or which he knows to be likely to be made by a Court of Justice in a civil suit, 


     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

Saturday, 1 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 206 - அரசு கைப்பற்றும் சொத்தை மறைத்தல்







     ஒரு உரிமையியல் வழக்கு மூலம் ஒரு சொத்தைக் கைப்பற்றும்படி ஒரு நீதிமன்றம் உத்தரவிடுகிறது அல்லது அத்தகைய உத்தரவை சில நேரங்களில் அத்தகைய அதிகாரம் பெற்ற அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிடலாம்.

    அத்தகைய உத்தரவு போட்டிருப்பதை அறிந்தவுடன் அல்லது அத்தகைய உத்தரவு போடப்படும் என்பதை அறிந்தவுடன் அந்த சொத்தை அதிகார பூர்வமாகக் கைப்பற்றப்படுவதைத் தவிப்பதற்காக,  (a)  அழிப்பதும் (removes), (b) மறைப்பதும் (conceals), (c) இடம் மாற்றி வைப்பதும் (transfers), (d) யாருக்கும் தெரியாமல் பிறரிடம் கொடுத்து வைப்பதும் (delivers) குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்குத் தண்டனையாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.



IPC 206 -

Fraudulent removal or concealment of property to prevent its seizure as forfeited or in execution.

      Whoever fraudulently removes(a), conceals(b), transfers(c) or delivers(d) to any person any property or any interest therein, intending thereby to prevent that property or interest therein from being taken as a forfeiture or in satisfaction of a fine, under a sentence which has been pronounced, or which he knows to be likely to be pronounced, by a Court of Justice or other competent authority, or from being taken in execution of a decree or order which has been made, or which he knows to be likely to be made by a Court of Justice in a civil suit, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 



நன்றி http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1647

Friday, 31 July 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 205 - பொய்ச்சான்று தண்டனைகள்-11





தினம் ஓரு சட்டம் - இ.த.ச 205 - பொய்ச்சான்று தண்டனைகள்-11



ஒரு வழக்கில் அல்லது குற்ற நடவடிக்கையில் ஆள் மாறாட்டம் செய்வது தவறாகும். ஒருவருக்கு பதிலாக மற்றோருவர் தாம் அவர்தான் என்று வந்து நிற்பதும் ஆள்மாறாட்டமாகும். அத்தகைய ஆள் மாறாட்டம் செய்வதும் மூலம் ஒப்புதல் வாக்குமுலம் தருவதும், தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதும், ஆணை பிறப்பிக்கும்படி செய்வதும், பினையாக நிற்பதும் அல்லது அத்தகைய வேறு எந்த வேலைகளையாவது ஒரு வழக்கில் அல்லது ஒரு குற்ற நடவடிக்கையில் செய்வது குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.



IPC 205- False personation for purpose of act or proceeding in suit



Whoever falsely personates another, and in such assumed character makes any admission or statement, or confesses judgment, or causes any process to be issued or becomes bail or security, or does any other act in any suit or criminal prosecution, 


shall be punished with imprisonment of either description for a term which may extend to three years or with fine, or with both. 

 Source http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1646

Wednesday, 29 July 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 204 - பொய்ச்சான்று தண்டனைகள்-10



தினம் ஓரு சட்டம் - இ.த.ச 204 - பொய்ச்சான்று தண்டனைகள்-10



    நீதிமன்றத்திற்குச் சாட்சியமாகக் கொண்டு வரத்தக்க ஆவணத்தை அழித்தும், மாற்றியும் அல்லது உருக்குலைத்தும் அதனைச் சாட்சியமாக நீதிமன்றத்தில் பயன்படுத்த விடாமல் செய்வது குற்றமாகும். அத்தகைய ஆவணத்தை ஒரு அரசு பொது அதிகாரியின் முன் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் இடர்கள் செய்வது குற்றமாகும்.



 ஒரு நீதிமன்றம் அல்லது ஒரு அரசு பொது அதிகாரி அத்தகைய ஆவணத்தைத் தம் முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணையிட்ட பின்னர் அதனைச் சிதைப்பதும் அல்லது அழிப்பதும் குற்றமாகும். 


இத்தகைய குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரைச் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

Section 204- Destruction of document or 
electronic record to prevent its production as 
sevidence




Whoever secretes or destroys any *[document or Electronic Record] which he may be lawfully compelled to produce as evidence in a Court of Justice, or in any proceeding lawfully held before a public servant as such, or obligates or renders illegible the whole or any part of such 1[document or Electronic Record] with the intention of prevention the same from being produced or used as evidence before such Court or public servant as aforesaid, or after he shall have been lawfully summoned or required to produce the same for that purpose, 

shall be punishable with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000) 


தகவல் http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1645

Picture http://www.indianpenalcode.in/ipc-204/
 
 

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 203 - பொய்ச்சான்று தண்டனைகள்-9



தினம் ஓரு சட்டம் - இ.த.ச 203 - பொய்ச்சான்று தண்டனைகள்-9 

நடைப்பெற்ற ஒருக் குற்றத்தைப்பற்றி வேண்டும் என்றே திரித்து பொய்யான தகவலைக் கொடுப்பவருக்கு இரண்டு ஆண்டுகள் வரைச் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.




விளக்கம் - இக் குற்றங்கள் இந்தியாவுக்கு வெளியே நடைப்பெற்றாலும், 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கத்தக்க எத்தகைய குற்றமானாலும் இ.த.ச பிரிவு 201, 201 மற்றும் 203 ஆகிய பிரிவுகளில் அடங்கும்.





IPC 203 : Giving false information respecting an offence committed.

Whoever knowing or having reason to believe that an offence has been committed, gives any information respecting that offence which he knows or believes to be false, shall be punished with imprisonment of either description for a term which may extend to two year, or with fine, or with both.

*[Explanation: - In sections 201 and 202 and in this section the word "offence" includes any act committed at any place out of *[India], which, if committed in *[India], would be punishable under any of the following sections, namely, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 and 460.]

*Added by Act 3 of 1894, sec.6.

**The words "British India" have successively been subs. by the A.O.1948, the A.O.1950 and Act 3 of 1951, sec.3 and sch. to read as above. 



Tuesday, 28 July 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 202 - பொய்ச்சான்று தண்டனைகள்-8


இ.த.ச 202 - பொய்ச்சான்று தண்டனைகள்-8




    ஒர் குற்றம் நடைப்பெற்றிருப்பதை அறிந்தப் பின்னரும் அதைப்பற்றிய தகவலை வேண்டும் என்றே சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்காமல் இருப்பதும் தண்டிக்கத்தக்க குற்றமாகும். 

இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம்  அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.







Section 202- Intentional omission to give information of offence by person bound to informinformation of offence by person bound to inform

   
Whoever, knowing or having reason to believe that an offence has been committed, intentionally omits to give any information respecting that offence which he is legally bound to give, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both. 

 தகவல் http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1643

படங்கள் http://www.indianpenalcode.in

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 201 - பொய்ச்சான்று தண்டனைகள்-7







இ.த.ச 201 - பொய்ச்சான்று தண்டனைகள்-7

ஒரு குற்றம் நடைப்பெற்றதை நாம் அறிகிறோம். அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக்குற்றம் பற்றிய சாட்சியத்தை, குற்றவாளியைக் காப்பற்ற வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைப்பெற்ற குற்றத்தைப் பற்றிய பொய்யான தகவலைப் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.


அப்படி மரணத்தண்டனை விதிக்கத்தக்க குற்றம் நடைப்பெற்றிருந்தால் , அப்படிச் செய்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைச் சிறைக்காவல் விதிக்கத்தக்க குற்றம் நடைப்பெற்றிருந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

பத்து ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறத்தக்க குற்றம் நடைப்பெற்றிருந்தால், அந்த குற்றத்திற்கு விதிக்கத்தக்க தண்டனையில் நான்கில் ஒரு பாகத்தை சிறைக்காவலாகவும் அல்லது அபராதமாகவும் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.










Section 201- Causing disappearance of evidence of offence, or giving false information to screen offender 
Whoever, knowing or having reason to believe that an offence has been committed, causes any evidence of the commission of that offence to disappear, with the intention of screening the offender from legal punishment, or with that intention gives any information respecting the offence which he knows or believes to be false,

If a capital offence.- shall, if the offence which he knows or believes to have been committed is punishable with death, be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;

If punishable with imprisonment for life.- and if the offence is punishable with *[imprisonment for life], or with imprisonment which may extend to ten years, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine;

If punishable with less than ten years' imprisonment.- And if the offence is punishable with imprisonment for any term not extending to ten years, shall be punished with imprisonment of the description provided fro the offence, for a term which may extend to one-fourth part of the longest term of the imprisonment provided for the offence, or with fine, or with both.

Illustration

A, knowing that B has murdered Z, assists B to hide the body with the intention of screening B from punishment. A is liable to imprisonment of either description for seven years, and also to fine.

*Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 


தகவல் http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1642

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 199 மற்றும் 200 - பொய்ச்சான்று தண்டனைகள்-6





 இ.த.ச 199 - பொய்ச்சான்று தண்டனைகள்-6 

யாராவது, தாம் அளித்துள்ள அல்லது ஒப்புதல் கொடுத்துள்ள அறிக்கையில் காணப்படும் விவரங்களை ஒரு நிதிமன்றம் அல்லது பொது ஊழியர் அல்லது சட்டத்தின் கீழ் பணியாற்றுகின்ற அதிகாரம் பெற்றுள்ள வேறு யாராவது சாட்சியமாக பயன்படுத்துவார்கள் என்று தெரிந்தும், அந்த அறிக்கையில் அதன் நோக்கத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் பொய்யான அல்லது உண்மைக்கு மாறான விவரங்களைத் தருவதும் அல்லது உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.  பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 199:- False statement made in declaration which is by law receivable as evidence


Whoever, in any declaration made or subscribed by him, which declaration any Court of Justice, or any public servant or other person, is bound or authorized by law to receive as evidence of any fact, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, touching any point material to the object for which the declaration is made or used, shall be punished in the same manner as if he gave false evidence. 



 இ.த.ச 200 - பொய்ச்சான்று தண்டனைகள்-7

  இ.த.ச 199 க்கூறப்பட்டுள்ள படி ஒர் அறிக்கை அல்லது நிகழ்வு பொய்யானது என்று தெரிந்திருந்தும் , அதனை உண்மையானதுப் போல பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்த முயற்சி செய்வோருக்கும் பொய்ச் சாட்சியம் கூறியவருக்குரிய தண்டனை கிடைக்கும்.

விளக்கம் - அத்தகைய அறிக்கை ஒழங்கற்றது என்று கருதி நீதிமன்றம் தள்ளக்கூடியதாக இருப்பினும், அதனை இ.த.ச 199 மற்றும்  இ.த.ச 200 ஆகியப்பிரிவுகளில் விளக்கப்பட்ட அறிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.






 IPC 200 Using as true such declaration knowing it to be false

Whoever corruptly uses or attempts to use as true any such declaration, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence.



Read more: http://devgan.in/ipc/section/200/#ixzz3hDJspDSu

Explanation-A declaration which is inadmissible merely upon the ground of some informality, is a declaration within the meaning of sections 199 to 200. 
 

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 196, 197 & 198 - பொய்ச்சான்று தண்டனைகள்-3





இ.த.ச 196 - பொய்ச்சான்று தண்டனைகள்-3

தான் பயன்படுத்தும் சாட்சியம் பொய்யானது அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் அதனை உண்மையான சாட்சியமாக உபயோகிப்போருக்கும், உபயோகிக்க முயற்சிச் செய்பவருக்கும் , பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.

IPC 196. Using evidence known to be false

Whoever corruptly uses or attempts to use as true or genuine evidence any evidence which he knows to be false or fabricated, shall be punished in the same manner as if he gave or fabricated false evidence.



இ.த.ச 197 - பொய்ச்சான்று தண்டனைகள்-4

அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய அத்தாட்சிப் பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையேன்று பதிவோருக்கும், அதனைச் சாட்சியாமாகப் பயன்படுத்துவோருக்கும் பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.

IPC 197 . Issuing or signing false certificate

 Whoever issues or signs any certificate required by law to be given or signed, or relating to any fact of which such certificate is by law admissible in evidence, knowing or believing that such certificate is false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence.




இ.த.ச 198 - பொய்ச்சான்று தண்டனைகள்-5


 அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய அத்தாட்சிப் பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையேன்று அளித்து அது பொய்யானது என்று அறிந்தப்பின்னர் அதனை உண்மையானது என்று பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்த முயற்சி செய்பவருக்கும், பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.


198S. Using as true a certificate known to be false


 Whoever corruptly uses or attempts to use any such certificate as a true certificate, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence.


Monday, 27 July 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 195 - பொய்ச்சான்று தண்டனைகள்-2





இ.த.ச 195 - பொய்ச்சான்று தண்டனைகள்-2 

தம்முடைய சாட்சியத்தியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிந்தப்பின்னரும், ஒருவர் பொய் சாட்சி உருவாக்கினாலும் , அந்த நபருக்கு, அந்த நபர் எத்தகைய குற்றத்தைப்பற்றிச் சாட்சியம் அளித்தாரோ அத்தகைய குற்றத்திற்கு உரிய தண்டனையை விதிக்கப்படவேண்டும்.





Read more: http://devgan.in/ipc/section/195/#ixzz3h6fu6dfI



 பொய்க்கான குறியீடு





 பொய்ப்பற்றிய சட்ட முதுமொழிகள்


Falsa demonstratio non nocet - A false description does not vitiate.

Lex punit mendaciam - The law punishes falsehood.

Falsa demonstratio non nocet - A false description does not vitiate.

falsus-in-uno-falsus-in-omnibus - false in one thing, false in everything
  

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 194 - பொய்ச்சான்று தண்டனைகள்






இ.த.ச 194 - மரணத் தண்டனை வழங்க கூடிய குற்றத்துக்குரிய பொய்ச்சான்றுக்கான தண்டனைகள்

     யாராவது ஒருவர், தாம் அளிக்கின்ற சாட்சியத்தின் மூலம் மற்றோருவர் மீது மரணத்தண்டனை விதிக்கத்த குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்தும், பொய்ச்சான்று தந்தாலும், அல்லது பொய்ச்சான்றினை உருவாக்கினாலும் குற்றமாகும்.

  அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.

   அத்தகைய சாட்சியத்தின் விளையாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டித் தண்டிக்கப்பட்டு, தண்டனையும் நிறைவேறப்பட்டால், அத்தகைய சாட்சியத்தைத் தந்தவருக்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.




 IPC 194 : Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence.

Whoever gives or fabricates false evidence, intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any person to be convicted of an offence which is capital by the laws for the time being in force in India shall be punished with imprisonment for life, or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine;

If innocent person be thereby convicted and executed — and if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment hereinbefore described.



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.