Monday, 27 July 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 194 - பொய்ச்சான்று தண்டனைகள்






இ.த.ச 194 - மரணத் தண்டனை வழங்க கூடிய குற்றத்துக்குரிய பொய்ச்சான்றுக்கான தண்டனைகள்

     யாராவது ஒருவர், தாம் அளிக்கின்ற சாட்சியத்தின் மூலம் மற்றோருவர் மீது மரணத்தண்டனை விதிக்கத்த குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்தும், பொய்ச்சான்று தந்தாலும், அல்லது பொய்ச்சான்றினை உருவாக்கினாலும் குற்றமாகும்.

  அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.

   அத்தகைய சாட்சியத்தின் விளையாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டித் தண்டிக்கப்பட்டு, தண்டனையும் நிறைவேறப்பட்டால், அத்தகைய சாட்சியத்தைத் தந்தவருக்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.




 IPC 194 : Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence.

Whoever gives or fabricates false evidence, intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any person to be convicted of an offence which is capital by the laws for the time being in force in India shall be punished with imprisonment for life, or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine;

If innocent person be thereby convicted and executed — and if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment hereinbefore described.



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment