Thursday, 13 August 2015

தினம் ஓரு உரிமை - இந்திய நாட்டின் குடிமகன்



      யார் இந்த நாட்டின் குடிமகன்கள் என்று இந்திய அரசியல் சாசனம் ஷரத் 5 முதல் ஷரத் 11 வரை விளக்கி கூறப்பட்டுள்ளது.


பாகம் - II

5. இந்திய அரசியல் சாசனம் துவங்கப்பட்ட நவம்பர் நாளிலிருந்து இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபர்களும் மேலும்

(அ)  இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும்,

(ஆ) ஒருவருடைய பெற்றோரில் யாரவது ஒருவர் இந்தியராக இருப்பின் அத்தகைய நபரும்,

(இ)  இந்திய அரசியல் சாசனம் துவங்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தியாவில் வசித்து வரும் நபர் களும்.

இந்திய குடிமகன்கள் ஆவார்.

6. ஷரத் 5ல் யாது கூறப்பட்டிருப்பினும், அவை மட்டும்மன்றி தற்போதைய பாகிஸ்தானில் அடங்கியுள்ள பிரதேசத்திலிருந்து வெளியேறி இந்திய நாட்டில் குடியேறியுள்ள ஒவ்வொருவரும், இந்திய நாட்டின் குடிமகனாக கருதப்படுவார் - தற்போது என்பது  இந்திய அரசியல் சாசனம் துவங்கப்பட்ட காலத்தைக் குறிக்கும்.

(அ) இந்திய அரசாங்கச் சட்டப்படி இந்தியாவில் அந்த நபர் அல்லது அவரின் பொற்றோரில் ஒருவர் அல்லது பெற்றோரின் பெற்றோர் யாரவது ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும்.

(ஆ) (i) - 1948 சூலைத் திங்கள் 19ம் நாளுக்கு முன்னர் இந்தியாவில் குடியேறி, அவ்வாறு குடியேறிய நாளிலிருந்து இந்தியாவில் வசித்து வருபவர்

(ஆ)-(ii)- அவ்வாறு 1948 சூலைத் திங்கள் 19ம் நாளுக்கு பின்னர் இந்தியாவில் குடியேறி, அதற்கென இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் இந்திய குடிமகனாக பதிவு செய்யப்படுவதற்குரிய மனுவை, அந்த அலுவலருக்கு இந்திய அரசியல் சாசனம் துவங்கப்படுவதற்கு முன் அதற்கான விண்ணப்பத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் குறைந்தப்பட்சம் ஆறு மாதங்கள் இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.

இவர்கள் இந்திய குடிமக்கள் எனக் கருதப்படுவார்கள்.

7. ஷரத் 5 மற்றும் ஷரத் 6 ல் யாது கூறப்பட்டிருப்பினும், தாமாக மனம் முன்வந்து 1947 ஆம் ஆண்டு மார்ச் முதல் நாளுக்கு முன்னர் இந்திய நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு குடியேறிய நபர்கள் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டாது.

அவ்வாறு தவறுதலாக பாகிஸ்தானில் குடியேறி மனம் திரும்பி இந்தியாவில் நிரந்தமாக குடியேறுவதாக அனுமதிப் பெற்று, இந்தியாவில் வசித்து வரும் நபர்களுக்கு இந்த ஷரத்தில் உள்ளவைப் பொருந்தாது. அவர்களை ஷரத் 6 - (ஆ) படி 1948 சூலை 19ம் நாளுக்கு முன்னர் இந்தியாவில் குடியேறியவராக கருதப்பட வேண்டும்.



8. ஷரத் 5 படி யாது கூறப்பட்டிருப்பினும், 1935ம் ஆண்டில் இந்திய அரசாங்க சட்டப்படி, இந்தியா என்று விவரிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பிறந்துள்ள ஒவ்வொரும் அல்லது அவர்களின் பெற்றோர்களில் ஒருவர் அல்லது பெற்றோர்களின் பெற்றோர் ஒருவர் இந்தியாவில் பிறந்து அத்தகைய நபர் வேறு நாடுகளில் வசித்து வந்தாலும் அவர் அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது கான்சுலேடில் இந்திய குடிமகனாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது இந்திய அரசியல் சாசனம் துவங்கப்படுவதற்கு முன்னர், அதற்குரிய படிவத்தில் இந்திய அரசின் விதிமுறைகளின் படியும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

9. இந்திய குடிமகன் ஒருவர், தாமாக முன் வந்து வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருந் தால், அந்த நபரை இந்திய அரசியல் சாசனம் ஷரத் 5 அல்லது ஷரத் 6 அல்லது ஷரத் 8 ன் படி இந்திய குடிமகனாகக் கருதக் கூடாது.

10. இந்தப் பாகம்  II கூறியுள்ளப்படி, இந்திய குடிமகனாக இருக்கும் அல்லது கருதப்படும் ஒவ்வொரு நபரும், அதுபற்றிய பாரளுமன்றம் உருவாக்கும் சட்டத்திற்குட்பட்டு, இந்திய குடிமகனாக நீடிப்பார்கள்.

11. இந்த பாகம்  II கூறப்பட்டுள்ள யாவையும், ஒரு குடியுரிமையை வழங்குவதற்கு அல்லது ரத்து செய்வதற்கு மற்றும் குடியுரிமை விவகாரங்கள் மாற்றத்தை எற்படுத்தும் சட்டங்களை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்துக்குரிய அதிகாரத்தைப் பாதிக்காது.



CITIZENSHIP

 Article 5.         Citizenship at the commencement of the Constitution.
Article 6.          Rights of citizenship of certain persons who have migrated to India from Pakistan.

Article7.           Rights of citizenship of certain migrants to Pakistan.

Article 8.          Rights of citizenship of certain persons of Indian origin residing    outside India.

Article 9.          Persons voluntarily acquiring citizenship of a foreign State not to be citizens.

Article 10.           Continuance of the rights of citizenship.

Article 11.           Parliament to regulate the right of citizenship by law.

தகவல் http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss%285%29.pdf

Thanks https://en.wikipedia.org/wiki/Constitution_of_India


     குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2 comments:

  1. தகவல்கள் நிறைய அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. Thanks for Coming this blog and Reading....

      Delete