Monday 29 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 350



இ.த.ச 349 - 358 வரை தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் :



இ.த.ச 350 :வன்முறைத் தாக்குதல்


         ஒருவருடைய சம்மதமின்றி அவரைத் தாக்கும் போது ஒரு குற்றத்தைப் புரிய வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய தாக்குதல் காயம், அச்சம் அல்லது தொல்லை தர வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடனும் அத்தகைய தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.

எடுத்துக்காட்டு:




    ஒருவர் மீது அவருடைய அனுமதியின்றி நாயை ஏவி விட்டு அவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் அல்லது அச்சம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் இந்தத் தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.



I.P.C 350 : Criminal Force

     Whoever intentionally uses force to any person, without that person’s consent, in order to the committing of any offence, or intending by the use of such force to cause, or knowing it to be likely that by the use of such force he will cause injury, fear or annoyance to the person to whom the force is used, is said to use criminal force to that other.

Illustrations

    A incites a dog to spring upon Z, without Z’ consent. Here, if A intends to cause injury, fear or annoyance to Z, he uses criminal force to Z.


தகவல் http://devgan.in/ipc/index.php?q=350&a=1

No comments:

Post a Comment