Showing posts with label தாக்குதல். Show all posts
Showing posts with label தாக்குதல். Show all posts

Monday, 29 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 350



இ.த.ச 349 - 358 வரை தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் :



இ.த.ச 350 :வன்முறைத் தாக்குதல்


         ஒருவருடைய சம்மதமின்றி அவரைத் தாக்கும் போது ஒரு குற்றத்தைப் புரிய வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய தாக்குதல் காயம், அச்சம் அல்லது தொல்லை தர வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடனும் அத்தகைய தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.

எடுத்துக்காட்டு:




    ஒருவர் மீது அவருடைய அனுமதியின்றி நாயை ஏவி விட்டு அவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் அல்லது அச்சம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் இந்தத் தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.



I.P.C 350 : Criminal Force

     Whoever intentionally uses force to any person, without that person’s consent, in order to the committing of any offence, or intending by the use of such force to cause, or knowing it to be likely that by the use of such force he will cause injury, fear or annoyance to the person to whom the force is used, is said to use criminal force to that other.

Illustrations

    A incites a dog to spring upon Z, without Z’ consent. Here, if A intends to cause injury, fear or annoyance to Z, he uses criminal force to Z.


தகவல் http://devgan.in/ipc/index.php?q=350&a=1

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 349



தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் :



இ.த.ச 349 :

       ஒருவருடைய உடலை அசைப்பதும், அசையாமல் தடுப்பதும், அல்லது அசைவில் மாற்றத்தை உண்டாக்குவதும் ஒரு பொருளை அசைத்து, அசையாமல் தடுத்து அல்லது அதனுடைய அசைவில் மாற்றத்தை உண்டாக்குவது ஆகியவற்றின் மூலம் அந்தப் பொருள் ஒருவருடைய உடலின் ஒருப் பகுதி அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடை அல்லது வைத்திருக்கும் பொருள் அல்லது அவருடைய உணர்வைத் தொடக்கூடிய ஒரு பொருளைத் தொடுவதும் ஆகியவற்றில் எதனைப் புரிந்தாலும் அந்த நபர் தாக்குதல் செய்கிறார் என்று கூறலாம்.


அந்த நபர் அத்தகைய அசைவு, அசைவில் மாற்றம் அல்லது அசைவைத் தடுக்கும் செயல், கீழ் காணப்படும் மூன்று வகைகளில் இருக்கும்.

1. தன்னுடைய உடல் பலத்தைப் பயன்படுத்தி அத்தகைய செயல் நடக்கலாம்.

2. ஒரு பொருளை அசைப்பதன் மூலம் மேற் கூறப்பட்ட அசைவினை உண்டாக்கலாம்.

3.ஒரு மி்ருகத்தை ஏவி விட்டு அத்தகைய மாற்றத்தை உண்டாக்கலாம் அல்லது மாற்றத்தை அல்லது அசைவை நிறுத்தலாம்



IPC - 349 : Force

A person is said to use force to another if he causes motion, change of motion, or cessation of motion to that other, or if he causes to any substance such motion, or change of motion, or cessation of motion as brings that substance into contact with any part of that other’s body, or with anything which that other is wearing or carrying, or with anything so situated that such contact affects that other’s sense of feeling;

Provided that the person causing the motion, or change of motion, or cessation of motion, causes that motion, change of motion, or cessation of motion in one of the three ways hereinafter described:
  1. By his own bodily power.
  2. By disposing any substance in such a manner that the motion or change or cessation of motion takes place without any further act on his part, or on the part of any other person.
  3. By inducing any animal to move, to change its motion, or to cease to move.