Showing posts with label தற்காப்பு. Show all posts
Showing posts with label தற்காப்பு. Show all posts

Monday, 6 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 269


     


       உயிர்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் தொற்றுநோயைப் பரப்பக்கூடிய அல்லது பரப்பக் கூடும் எந்தச் செயலையும் யாரும் செய்யக்கூடாது. 

    அப்படி அத்துமீறி அந்த செயலைப் செய்தவருக்கு ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்



Section 269 in The Indian Penal Code
  
     Negligent act likely to spread infection of disease danger­ous to life.—Whoever unlawfully or negligently does any act which is, and which he knows or has reason to believe to be, likely to spread the infection of any disease dangerous to life, 
   shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both. 

[Source & Content http://indiankanoon.org/doc/734195/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 268





     ஒருவர் செய்கின்ற ஒரு செயலால் பொதுமக்களுக்கு அல்லது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு அல்லது பொது மக்களின் உரிமைக்கு குந்தகம் அல்லது தீீங்கு அல்லது அபாயம் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்ப்பட்டால் அதனை பொதுத் தொல்லை என்று கூறுகிறோம். தனிப்பட்ட ஒரு மனிதனுக்குச் உபயோகமாகக் இருக்கின்றது என்ற காரணம் காட்டி எந்தப் தொல்லையையும் மன்னிக்க முடியாது அல்லது அனுமதிக்க முடியாது.


Section 268 in The Indian Penal Code
  Public nuisance.—A person is guilty of a public nuisance who does any act or is guilty of an illegal omission which causes any common injury, danger or annoyance to the public or to the people in general who dwell or occupy property in the vicinity, or which must necessarily cause injury, obstruction, danger or annoyance to persons who may have occasion to use any public right. A common nuisance is not excused on the ground that it causes some convenience or advantage.

Sunday, 29 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 106




       மரணத்தைப்பற்றிய அச்சத்தை உண்டாக்க கூடிய தாக்குதலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதியான மற்றோருவருக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அந்தச் செயல் குற்றமாகாது.

விளக்கம்
        A யைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கூட்டம் தாக்க முற்படுகிறது. கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யாமல் தப்பிக்க முடியாது. 
      அப்படித் துப்பாக்கி பிரயோகம் செய்யும் போது கூட்டத்தில் கலந்துள்ள குழந்தைகளுக்கு தீங்கு நேரிடலாம், தற்காப்புக்கென அந்தக் கூட்டத்தை நோக்கிச் சுடுவதால், அந்தக் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பட்டாலும் A மீது குற்றம் சுமத்த முடியாது.

Section 106 in The Indian Penal Code
       
      Right of private defence against deadly assault when there is risk of harm to innocent person.—If in the exercise of the right of private defence against an assault which reasonably causes the apprehension of death, the defender be so situated that he cannot effectually exercise that right without risk of harm to an innocent person, his right of private defence extends to the running of that risk. 
 
 Illustration 
 
     A is attacked by a mob who attempt to murder him. He cannot effectually exercise his right of private defence without firing on the mob, and he cannot fire without risk of harming young children who are mingled with the mob. A commits no offence if by so firing he harms any of the children. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1606852/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 105

          
  
          எப்பொழுது நம்முடைய சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயம் உண்டாகிறதோ அப்போழுதே நம்முடைய சொத்தினைப் பாதுகாக்கும் உரிமையும் நமக்குக் கிடைக்கின்றது.
 
          நமது சொத்தை திருட வரும் போது, திருடனிடமிருந்து நமது சொத்தை மீட்கும் வரையில் நமக்கு அந்த உரிமை இருக்கிறது. அல்லது அவற்றை மீட்க அதிகாரிகளின் உதவி நமக்குக் கிடைக்கும் வரையில் அந்த உரிமை இருக்கிறது.

          
               அதேப்போல் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வரும் போதும் கொள்ளையடிக்க முயற்சி செய்யும் போதும் மரணம் அல்லது தவறாகத் தடை செய்யும் அபாயம் ஏற்படும் பொழுதும், அத்தகைய அபாயநிலை அல்லது உணர்வு நீங்கும் வரையில் நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கிறது.

           அதே போல குற்றவாளி அத்துமீறி நுழைதல், சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து புரியும்வரை நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கிறது.
   

Section 105:- Commencement and continuance of the right of private defence of property

   The right of private defence of property commences when a reasonable apprehension of danger to the property commences. The right of private defence of property against theft continues till the offender has effected his retreat with the property or either the assistance of the public authorities is obtained, or the property has been recovered.

The right of private defence of property against robbery continues as long as the offender causes or attempts to cause to any person death or hurt or wrongful restraint or as long as the fear of instant death or of instant hurt or of instant personal restraint continues.
The right of private defence of property against criminal trespass or mischief continues as long as the offender continues in the commission of criminal trespass or mischief.
The right of private defence of property against house-breaking by night continues as long as the house-trespass which has been begun by such house-breaking continues.

[Thanks & Content http://devgan.in/indian_penal_code/chapter_04.php#s105]

Saturday, 28 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 104




குறிப்பிட்டுள்ள குற்றங்களன்றி திருட்டு, தொல்லை தருதல், வரம்பு மீறுதல் ஆகிய குற்றங்களைப் பிறர் செய்தாலும், செய்ய முயற்சி செய்தாலும் தற்காப்புக்கென மரணத்தைத் தவிர, வேறு எவ்வகையான தாக்குதலை வேண்டுமானாலும் செய்யலாம். வேண்டும் மென்றே மரணம் சம்பவிக்கும்படி மட்டும் செய்யக் கூடாது.

            தற்காப்புக்காக செய்யப்படும் காரியத்தால் விளைகிற தீங்கும்


Section 104 in The Indian Penal Code
                                When such right extends to causing any harm other than death.—If the offence, the committing of which, or the attempt­ing to commit which, occasions the exercise of the right of private defence, be theft, mischief, or criminal trespass, not of any of the descriptions enumerated in the last preceding section, 
          that right does not extend to the voluntary causing of death, but does extend, subject to the restrictions mentioned in section 99 of IPC, to the voluntary causing to the wrong-doer of any harm other than death.
[Source  & Content http://indiankanoon.org/doc/1409246/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 103




      நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க வரும் போதும், இரவு நேரத்தில் வீட்டை இடித்து, உடைத்து உள்ளே நுழைய முயலும்போது, தீ வைத்து சொத்துக்களை அழிக்க முனையும் போதும், திருடுவதற்காக அல்லது தொல்லைத் தருவதற்காக அத்துமீறி நம் இடத்தில் நுழைய முயற்சி செய்யும்போதும், அந்த முயற்சியால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் மரணம் சம்பவிக்கலாம் என்ற அச்சம் ஏற்படும்போதும், அத்தகைய எதிரியை நாம் தாக்கி, அதனால் எதிரிக்கு மரணம் சம்பவித்தாலும் அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது. அந்த செயல் தற்காப்புக்காகச் செய்யப்பட்டதாகவே கருதப்படவேண்டும்.



Section 103 in The Indian Penal Code
 
    When the right of private defence of property extends to causing death.—The right of private defence of property extends, under the restrictions mentioned in section 99, to the voluntary causing of death or of any other harm to the wrong-doer, if the offence, the committing of which, or the attempting to commit which, occasions the exercise of the right, be an offence of any of the descriptions hereinafter enumerated, namely:— 
 
(First) — Robbery;
 
(Secondly) —House-breaking by night;
 
(Thirdly) — Mischief by fire committed on any building, tent or vessel, which building, tent or vessel is used as a human dwell­ing, or as a place for the custody of property;
 
(Fourthly) —Theft, mischief, or house-trespass, under such circum­stances as may reasonably cause apprehension that death or griev­ous hurt will be the consequence, if such right of private de­fence is not exercised. 
 
STATE AMENDMENTS
 
(Karnataka) —(1) In section 103, in clause Thirdly,— 
 
(i) after the words “mischief by fire”, insert the words “or any explo­sive substance”; 
 
(ii) after the words “as a human dwelling, or” insert the words “as a place of worship, or”. 
 
(2) After clause Fourthly, insert the following clause, namely:— “Fifthly.—Mischief by fire or any explosive substance committed on any property used or intended to be used for the purpose of Government or any local authority, statutory body or company owned or controlled by Government or railway or any vehicle used or adapted to be used for the carriage of passengers for hire or reward.” [Vide Karnataka Act 8 of 1972, sec. 2 (w.e.f. 7-10-1972)].
 
(Maharashtra) —In section 103, add the following at the end, namely:— “Fifthly.—Mischief by fire or any explosive substance committed on any property used or intended to be used for the purposes of Government or any local authority, statutory body, company owned or controlled by Government, railway or tramway, or on any vehicle used or adapted to be used, for the carriage of passengers for hire or reward”. [Vide Maharashtra Act 19 of 1971, sec. 26 (w.e.f. 31-12-1971)]. Uttar Pradesh.—In section 103, after clause fourthly, add the following clause, namely:— “Fifthly.—Mischief by fire or any explosive substance committed on—
 
(a) Any property used or intended to be used for the purpose of Government, or any local authority or other corporation owned or controlled by the Government, or
 
(b) any railway as defined in clause (4) of section 3 of the Indian Railways Act, 1890 or railways stores as defined in the Railways Stores (Unlawful Possession) Act, 1955, or
 
(c) any transport vehicle as defined in *clause (33) of section 2 of the Motor Vehicles Act, 1939.” [Vide Uttar Pradesh Act 29 of 1970, sec. 2 (w.e.f. 17-7-1970)]. * See clause (47) of sec. 2 of the Motor Vehicles Act, 1988.
 
 
நன்றி http://indiankanoon.org/doc/860501/

Friday, 27 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 102





        நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்படக் போகிறது என்ற அச்சம் எப்போது நமக்குத் தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையும் நமக்குக் கிடைக்கின்றது.


    நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும், புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும், நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம்.

Section 102 in The Indian Penal Code
  Commencement and continuance of the right of private defence of the body.—

    The right of private defence of the body commences as soon as a reasonable apprehension of danger to the body arises from an attempt or threat to commit the offence though the of­fence may not have been committed; and it continues as long as such apprehension of danger to the body continues.

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 101






         இ.த.ச பிரிவு 100 ல் குறிப்பிட்டுள்ள பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள குற்றங்களில் ஒன்றை எதிரி செய்ய முற்படும் பொழுது மட்டும், தற்காப்புக்கெனத் திருப்பித் தாக்குவதால் எதிரிக்கு மரணம் ஏற்பட்டாலும் அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது.


    மற்ற சமயங்களில் பிரிவு 99 வது கூறியுள்ளப்படி மரணத்தைத் தவிர வேறு எத்தகைய தீங்கு நேர்ந்தாலும் குற்றமாகாது. அப்படி மீறி மரணம் விளைந்தால், அத்தகைய மரணத்தைத் தற்காப்புக்கு எனச் செய்யப்பட்ட மரணம் என்று கொள்ளப்படமாட்டாது.



Section 101 in The Indian Penal Code
    When such right extends to causing any harm other than death.—If the offence be not of any of the descriptions enu­merated in the last preceding section, the right of private defence of the body does not extend to the voluntary causing of death to the assailant, but does extend, under the restric­tions mentioned in section 99, to the voluntary causing to the assailant of any harm other than death.

Thursday, 26 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 100





  கீழே சொல்லப்பட்ட நேரங்களில் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் பொருட்டுச் செய்யப்படும் காரியத்தால் எதிரிக்கு ஏதாவது மரணம் அல்லது வேறு ஏதாவது சம்பவித்தாலும் அதனைக் குற்றமாக் கொள்ள முடியாது. அந்தச் சூழ்நிலைகள்

1. நம்மை எதிரி தாக்கி கொலை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படும் பொழுது,

2. எதிரியின் செயலால் நம் உடலுக்கு கொடுங்காயம் ஏற்படலாம் என்ற எண்ணம் தோன்றும் பொழுது,

3. கற்பழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர் நம்மை தாக்கம் போது

4. இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் எதிரி நெருங்கும் பொழுது

5. கடத்தி செல்ல வேண்டும் என்ற கருத்துடன் நம்மை அண்டியுள்ளவரை எதிரி தாக்க முனையும் பொழுது

6. சட்ட விரோதமான ஒருவரை எதிரி காவலில் வைப்பதற்கு முயற்சி செய்து அதனின்றும் சட்ட பூர்வமான அதிகாரிகளை அணுகி, விடுதலை பெற முடியாத நிலை ஏற்படும்பொழுது


Section 100 in The Indian Penal Code
100. When the right of private defence of the body extends to causing death.—The right of private defence of the body extends, under the restrictions mentioned in the last preceding section, to the voluntary causing of death or of any other harm to the assailant, if the offence which occasions the exercise of the right be of any of the descriptions hereinafter enumerated, namely:— 

(First) — Such an assault as may reasonably cause the apprehension that death will otherwise be the consequence of such assault; 
(Secondly) —Such an assault as may reasonably cause the apprehen­sion that grievous hurt will otherwise be the consequence of such assault; 
(Thirdly) — An assault with the intention of committing rape; 
(Fourthly) —An assault with the intention of gratifying unnatural lust; 
(Fifthly) — An assault with the intention of kidnapping or abduct­ing; 
(Sixthly) — An assault with the intention of wrongfully confining a person, under circumstances which may reasonably cause him to apprehend that he will be unable to have recourse to the public authorities for his release. 
[Source & Content http://indiankanoon.org/doc/714464/]

 

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 99





            ஒரு பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் அல்லது செய்ய முயற்சி செய்யும் காரியத்தை எதிர்த்துத் தற்காப்பு உரிமையைப் பிரயோகிக்க முடியாது. அப்படித் தற்காப்பு உரிமையைப் பிரவோகிக்க வேண்டுமென்றால் அந்தப் பொது ஊழியரின் செயலால் மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படக்கூடும் என்ற நியமான உணர்வு எழ வேண்டும்.

  பொது ஊழியரின் செய்கை சட்டப்படி முறையற்றதாகக்கூட இருக்கலாம், இருப்பினும் அவரை எதிர்த்து தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தக்கூடாது.


   அதே போல் நல்ல எண்ணத்துடன் செயல்படும் ஒருவரின் ஆணையின் கீழ் நடைப்பெறும் காரியத்தை எதிர்க்க முடியாது. அந்தக் காரியம் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் எதிர்க்க முடியாது. அப்படி தற்காப்பு உரிமையை பயன்படுத்தி எதிர்க்க வேண்டுமென்றால், அந்தச் செயலின் மூலம் மரணம் அல்லது கொடுங்காயம் சம்பவிக்க கூடும் என்ற நியாயப்பூர்வமான அச்சம் ஏற்பட வேண்டும்.

   அதேப்போன்று அந்தச் செயலை எதிர்த்து அரசாங்க அதிகாரிகளின் உதவியையும் பாதுக்காப்பையும் நாடிப் பெறுவதற்கான அவகாசம் இருக்கும் போது தற்காப்பு உரிமையை பயன்படுத்தல் கூடாது.

   தற்காப்பு உரிமையை எல்லை மீறிப் பயன்படுத்தக் கூடாது. தற்காப்புக்காக தாக்க நேரிட்டால் அளவுக்கு மீறித் தீங்கு உண்டாக்கக்கூடாது. தன்னைக் காத்துக் கொள்ள எந்த அளவுக்கு தாக்குதல் நடத்த வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தக் கூடாது.

விளக்கம்

1. காரியத்தை செய்பவர் பொது ஊழியர் என்று தெரியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது தவறாகாது.

2. அதேப் போல பொது ஊழியரின் ஆணைப்படி ஒரு காரியம் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது தவறாகாது.




Section 99 in The Indian Penal Code
     
      Acts against which there is no right of private defence.—There is no right of private defence against an act which does not reasonably cause the apprehension of death or of grievous hurt, if done, or attempted to be done, by a public servant acting in good faith under colour of his office, though that act, may not be strictly justifiable by law. 
      There is no right of private defence against an act which does not reasonably cause the apprehension of death or of grievous hurt, if done, or attempted to be done, by the direction of a public servant acting in good faith under colour of his office, though that direction may not be strictly justifiable by law. There is no right of private defence in cases in which there is time to have recourse to the protection of the public authorities. Extent to which the right may be exercised.—
     The right of private defence in no case extends to the inflicting of more harm than it is necessary to inflict for the purpose of defence. 
Explanation 1.—A person is not deprived of the right of private defence against an act done, or attempted to be done, by a public servant, as such, unless he knows or has reason to believe, that the person doing the act is such public servant. 
Explanation 2.—A person is not deprived of the right of private defence against an act done, or attempted to be done, by the direction of a public servant, unless he knows, or has reason to believe, that the person doing the act is acting by such direc­tion, or unless such person states the authority under which he acts, or if he has authority in writing, unless he produces such authority, if demanded. 
[Source & Content http://indiankanoon.org/doc/650803/]


தினம் ஓரு சட்டம் - இ.த.ச 98





                இளமையின் காரணமாகவும், அறிவுத் தெளிவடையாத காரணத்தினாலும், புத்தி சுவாதீனமில்லாமலும், போதையின் விளைவாகவும், ஒருவர் புரியும் குற்றச் செயலைக் குற்றமாக கருத இயலாவிட்டாலும் அத்தகைய நபர்களிடமி்ருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை நமக்கு உண்டு


விளக்கம்

     1. புத்தி சுவாதீனமில்லாத Z, A யைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார். Z மீது குற்றம் சாட்ட முடியாது. இருப்பினும் Z மிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக A என்ன செய்தாலும் அதனைக் குற்றமாக கொள்ள முடியாது.


  2.  தான் நுழைவதற்கு உரிமையுள்ள ஒரு வீட்டுக்குள் Z இரவில் நுழைகிறார்.  A தவறுதலாகத் திருடன் என்று நினைத்துக் கொன்டு Z தாக்க முற்படுகிறார். A யின் செயலைக் குற்றமாகக் கொள்ள முடியாது. இருப்பினும் Z தன்னைத் A யிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும்  உரிமை இருக்கிறது.


Section 98 in The Indian Penal Code
 
    Right of private defence against the act of a person of unsound mind, etc.—When an act, which would otherwise be a certain offence, is not that offence, by reason of the youth, the want of maturity of understanding, the unsoundness of mind or the intoxication of the person doing that act, or by reason of any misconception on the part of that person, every person has the same right of private defence against that act which he would have if the act were that offence. 
 
Illustrations
 
(a) Z, under the influence of madness, attempts to kill A; Z is guilty of no offence. But A has the same right of private defence which he would have if Z were sane.
 
(b) A enters by night a house which he is legally entitled to enter Z, in good faith, taking A for a house-breaker, attacks A. Here Z, by attacking A under this misconception, commits no offence. But A has the same right of private defence against Z, which he would have if Z were not acting under that misconcep­tion. 
 
[source & content http://indiankanoon.org/doc/1159920/]

Wednesday, 25 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 97






           இ.த.ச 99 ஆவது பிரிவில் விரிவாக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ஒவ்வொருவருக்கும் கீழ் கண்ட உரிமை இருக்கிறது.

1. தன்னுடைய உடலையும் அல்லது பிறருடைய உடலையும் தாக்க கூடிய குற்றங்களிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை.

2. தன்னுடைய சொத்துக்களையும், பிறருடைய சொத்துக்களையும் பாதிக்கக் கூடிய குற்றங்களிருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை.

 [சொத்து என்பது அசையும் பொருட்களையும், அசையாத பொருட்களையும் குறிக்கும், சொத்துக்களை அழித்தல், வரம்பு மீறி ஆளுதல் ஆகியவை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களாகும்]

IPC 97

Every person has a right, subject to the restrictions contained in section 99, to defend- 

First.--His own body, and the body of any other person, against any offence affecting the human body; 

Secondly.--The property, whether movable or immovable, of himself or of any other person, against any act which is an offence falling under the defintion of theft, robbery, mischief or criminal trespass, or which is an attempt to commit theft, robbery, mischief or criminal trespass.

நன்றி http://www.lawnotes.in

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 96






                  சில நேரங்களில் நம்மைப் பிறரிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்குச் சில காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்குத் தீங்கு ஏற்படலாம். அந்த தீங்கு, சொத்துக்கு நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ, உடலுக்குக் காயம் விளைவிப்பதற்காகவோ அல்லது தவிர்க்க முடியாத நேரத்தில் மரணம் சம்பவிக்கக் கூடியதாக கூட அமையலாம் ஆனால் அத்தகைய செயலைத் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருத முடியாது.


Section 96 in The Indian Penal Code
  
 
   Things done in private defence.—Nothing is an offence which is done in the exercise of the right of private defence.


[Source & Content http://indiankanoon.org/doc/777353/]