Saturday 2 September 2017

நீட் குறித்த ஒரு முக்கிய புரிதல்






    நண்பர் ஒருவர் கூறுகையில் குறைந்தபட்சம் ஓராண்டு விலக்கு அளித்துருந்தால் கூட இந்த மரணம் நிகழ்ந்து இருக்காதே. என கருத்து தெரிவித்தார்கள்.

ஒராண்டு இல்லை 10 ஆண்டுகள் வரை விலக்கு அளித்தாலும் நம்முடைய மாணவர்களால் நீட்டை எதிர் கொள்ள முடியாது ஏனேன்றால் நமது நாட்டில்

மாநில கல்விமுறை - State Syllabus , CBSE Syllabus, ICSE Syllabus என உள்ளது இந்த CBSE மற்றும் ICSE Syllabus களில் மாநில கல்வி முறையை விட இரண்டு வருடம் முன்னிலை வகிக்கின்றார்கள்.

அதாவது நம்முடைய மாநில கல்விமுறையில் 10ம் வகுப்பு படிப்பவர்களுக்கு மற்ற கல்விமுறையில் படிப்பவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு கல்விமுறை பயிற்றுவிக்கப் படுகின்றது.

நம்முடைய மாநில கல்விமுறையில் 12ம் வகுப்பு படிப்பது சற்றே பின்தங்கியது, அந்த நிலையில் CBSE மற்றும் ICSE Syllabus களில் கல்வி பயிலுபவர்கள் கல்லூரிக்கு இணையாக முதலாம் ஆண்டு பாடத்திட்டற்கு ஈடாக இருக்கும்.

ஆகையால் அவர்களுக்கு கேட்கப்படும் கேள்வி எளிதாக இருக்கும் இதனால் அவர்களால் எளிதாக NEET, COMET, NIIT, CET போன்ற தேர்வுகளை எளிதாக அனுகவும் வெற்றிப் பெறவும் முடிகின்றது.

காலம் காலமாக தமிழில் படிக்கும் நம்மால் இதை எப்படி எதிர் கொள்ளமுடியும்,
 

அதற்கான ஒரே தீர்வு இந்தியா முழுவதும் ஒரே விதமான பாடதிட்டத்தை கொண்டு வரவேண்டும், அப்போது தான் இந்த நிலையை களைய முடியும் அதுவும், 6 அல்லது 8ம் வகுப்பு முதல் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு வந்தப்பின்பு தான் இந்த NEET தேர்வை அறிமுகப்படுத்த வேண்டுமே ஒழியே உடனே அடுத்த வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து என அறிமுகப்படுத்த முடியாது.

மேலும் Choose the Best Answer போன்ற தேர்ந்த எடுக்கும் விடையை அளித்தால் அதனை சிலர் கள்ள சந்தையில் விற்று காசும் பார்க்கும் நிலை உள்ளது ஆகையால் தேர்வு முறையில் அவர்களின் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Entrance Test மார்க் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

ஏன் என்றால் பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் தகிடுதத்தம் செய்தும், கம்யூட்டரை கவனித்தும் மார்க் எடுத்துவிடுகின்றார்கள் ஆனால் உண்மையில் கஷ்டப்பட்டு படிக்கும் ஏழைமாணவர்களுக்கு மருத்துவம், என்.ஆய்டி போன்ற படிப்புகள் எட்டா கனியாக உள்ளது.

இதனை தயவு செய்து மத்திய மாநில் அரசுகள் கவனத்தில் எடுத்து, உடனடியாக நீட்டை அமல் படுத்தாமல் மாநில பாடதிட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி பின்பு இத்தகைய தேர்வை நடத்தட்டும்.

எல்லா இடத்தையும் யார் பிடிக்கின்றார்கள் என பார்ப்போம், கடல் திமிங்கிலத்தை குளத்து மீனுடன் போட்டி போட முடியுமா .....?

போட்டி தேர்வுகள் பொதுவாக பொட்டி தேர்வாகவே இருக்கின்றது ... பணம் தான்..

As per reports, a total of 11, 38,890 students registered for this examination including 1522 NRIs, 480 OCIs, 70 PIOs and 613 Foreigners. This exam was conducted in 10 languages at 1921 exam centres in 103 cities. thanks to http://indiatoday.intoday.in/education/story/neet-paper-leak-2017/1/948271.html

     பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். அதிகம் பகிரவும்.

5 comments:

  1. அதற்கான ஒரே தீர்வு இந்தியா முழுவதும் ஒரே விதமான பாடதிட்டத்தை கொண்டு வரவேண்டும், அப்போது தான் இந்த நிலையை களைய முடியும் என்ற தங்கள் கருத்து சரியானது

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா ...

      Delete
    2. அப்ப பாருங்க நாம தான் முதலிடம்

      Delete
  2. கல்வி என்பது மாநில உரிமை. இப்போது ஒன் இந்தியா, ஒரே மொழி என்ற பெயரில் இந்த உரிமை நசுக்கப் பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுக்கும் படிக்கப் போகும் படிப்புக்கும், பார்க்கப் போகும் வேலைக்கும் என்ன சம்பந்தம் என்பதனை, அந்தந்த நுழைவுத் தேர்வு கேள்விகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு என்ற பெயரில் ஊழல் செய்பவர்களுக்கு கொண்டாட்டம்.

    ReplyDelete

  3. நோக்குமிடமெல்லாம்...

    Saturday, September 2, 2017
    கவிதை 082
    நீங்கள் கொடுத்த பாடத்திட்டம்தான்
    நீங்கள் கொடுத்த புத்தகங்கள்தான்
    நீங்கள் கொடுத்த கேள்வித்தாள்தான்
    நீங்கள் கொடுத்த தாளில்தான்
    நீங்கள் குறித்து கொடுத்த நாளில்தான் நீங்கள் அனுப்பிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் எழுதினாள்
    நீங்கள் அனுப்பிய ஆசிரியர்கள்தான் திருத்தினார்கள்
    இத்தனைக்குப் பிறகுதான் இவ்வளவு எடுக்கிறாள்.
    நீங்கள் மதிப்பிட்ட உங்கள் பிள்ளையைத்தான் அவன் தகுதி இல்லாதவனு சொன்னான்
    நீ போட்ட மதிப்பெண் செல்லாதுன்றான்
    நீ போட்ட மதிப்பெண்ணை அவன் அசிங்கப் படுத்தியதும் குழந்தை நாண்டுக்கறா
    அசிங்கம் பார்க்க நமக்கேது நேரம்
    எம் எல் ஏ ஓடிப்போயிடப்போறான்
    அவனக் கவனி
    இரா எட்வின் at 10:20 PM
    Share

    No comments:
    Post a Comment
    வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

    தமிழில் டைப் செய்ய Click செய்யவும்


    Home
    View web version
    நானெப்படுவது...
    My photo
    இரா எட்வின்


    ReplyDelete