Friday 25 December 2015

தினம் ஒரு சட்டம் - கலக கூட்டத்தினரை அமர்த்தினால்


இ.த.ச 158

    யாராவது இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள இ.த.ச பிரிவு 141 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள செயல்களில் ஒன்றைப் புரிவதற்காக அல்லது அந்தக் குற்றத்திற்கு துணைப்புரிவதற்கு யாராவது உடந்தையாக இருத்தாலும் அல்லது (பணத்திற்காக) அமர்த்தப்பட்டாலும் அல்லது (பணத்திற்காக) அமர்த்தப்படுவதற்கு முயற்சி செய்ந்தாலும் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரைக் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படலாம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

அல்லது ஆயுத்தாங்கும் கூட்டத்தை அமர்த்தினால் :-

     யாராவது அவ்வாறு பணத்துக்காக அமர்த்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த நபர்கள்,  மரணத்தை விளைவிக்ககூடிய ஆயுதம் அல்லது அபாயகரமான ஆயுதம் தாங்கி அந்த கூட்டம் செல்ல முன் வந்தால், அவ்வாறு பணத்துக்காக அமர்த்திய அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 158- Being hired to take part in an unlawful assembly or riot
 

     Whoever is engaged, or hired, or offers or attempts to be hired or engaged, to do or assist in doing any of the acts specified in Section 141, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both,

or to go armed.- and whoever, being so engaged or hired as aforesaid, goes armed, or engages or offers to go armed, with any deadly weapon or with anything which used as a weapon of offence is likely to cause death, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 

இ.த.ச 141

      யாராவது ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்கள் சட்ட விரோத மாக கூடி கீீழ் கானும் செயலை செய்ந்தால் அது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் ஆகும்.

1 - மத்திய அல்லது மாநில அரசை வன் முறைச் செயலாலும் அச்சத்தாலும் தம்தம் கடமையை செய்ய விடாமல் தடுப்பதும்.

2 - சட்டப்படி நிலை நாட்டப்பட்ட ஒரு சட்ட நடவடிக்கையை எதிர்ப்பதும்

3 - அத்துமீறி நுழைதல் அல்லது அத்துமீறி நுழைந்து சொத்துக்களை அழித்தல் அல்லது அது தொடர்பான வேறு குற்றங்களை செய்தல்

4 - அடுத்த மனிதர்களின் தனிப் பட்ட சுதந்திர உரிமைகளில் வன் முறைச் செயலாலும் அல்லது அச்சுறுத்தி அவர்களின் சுதந்திர நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு அவர்களைத் தடுப்பதும் அல்லது மறுப்பதும் அல்லது பறிப்பதும்.

5 - வன் முறை செயல்கள் மூலம் பிறர் செய்யக்கூடாத காரியத்தை செய்யும் படி பிறரைக் கட்டாயப்படுத்துவதும்.

விளக்கம் - சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் எனப்படுவது முதலில் கூட்டம் கூடும் போது சட்ட விரோதமாக இல்லாமல் பிற்பாடு அது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதலாக ஆகும்.



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete