Showing posts with label House trespass. Show all posts
Showing posts with label House trespass. Show all posts

Saturday, 19 September 2015

தினம் ஒரு சட்டம் - House trespass - குற்றங் கருதி வீடுப்புகுதலும் அதன் தண்டனைகளும் - 2.

இ.த.ச 448

       யாரவது,  குற்றங் செய்ய கருதி யாராவது வீடு புகும் குற்றத்தை புரிந்தாலும். அந்த நபருக்கு ஒர் ஆண்டுகள் வரையில்  சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 448- Punishment for house-trespass
Whoever commits house-trespass shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine or which may extend to one thousand rupees, or with both. 


இ.த.ச 449

        
யாரவது, மரணத்தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற புரிய கருதி நுழைந்தாலும், அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 449- House-trespass in order to commit offence punishable with death
Whoever commits house-trespass in order to the committing of any offence punishable with death, shall be punishable with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1909 



இ.த.ச 450

  யாரவது, ஆயுள் தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற புரிய கருதி நுழைந்தால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 450- House-trespass in order to commit offence punishable with imprisonment for life
Whoever commits house-trespass in order to the committing of any offence punishable with *[imprisonment for life], shall be punished with imprisonment of either description for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for " transportation for life" (w.e.f. 1-1-1956). 

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1910
 இ.த.ச 451

  யாரவது,  சிறைத் தண்டனை பெறக்கூடிய  எந்த குற்றத்தை புரிவதற்காகவும் குற்றம் கருதி வீடுப்புகும் குற்றத்தை யார் புரிந்தாலும், அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 451- House-trespass in order to commit offence punishable with imprisonment
Whoever commits house-trespass in order to the committing of any offence punishable with imprisonment, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, and shall also be liable to fine; and if the offence intended to be committed is theft, the term of the imprisonment may be extended to seven years. 

 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1911




இ.த.ச 452

யாரவது, ஒருவரை காயப்படுத்துவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அல்லது முறையின்றி தடுப்பதற்காக அல்லது காயம் ஏற்படும் என்று அச்சுறுத்துவார் அல்லது முறையின்றித் தடுப்பார் என்ற அச்சத்தை உண்டாக்குவதற்கான தேவையான ஆயத்துடன் குற்றங்கருதி வீடு புகும், அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 452- House-trespass after preparation for hurt, assault or wrongful restraint
       Whoever commits house-trespass, having made preparation for causing hurt to any person or for assaulting any person, or for wrongfully restraining any person, or for putting any person in fear of hurt, or of assault, or of wrongful restraint, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.



http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1912

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

Friday, 18 September 2015

தினம் ஒரு சட்டம் - House trespass - குற்றங் கருதி வீடுப்புகுதலும் அதன் தண்டனைகளும் - 1.



இ.த.ச 442 - குற்றங் கருதி வீடுப் புகுதல்

மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் குற்றங்கருதி அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி வீடுப் புகுதல் ( House trespass ) என்று சொல்லப்படும்.


மேலும அவர் வழிப்பாட்டுக்கு உரிய ஒர் கட்டிடம் அல்லது சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்குள் குற்றங் கருதி அத்து மீறுவதை குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்றே கூறப்படும்.



விளக்கம் - அத்து மீறுதல் செய்யும் நபரின் உடல் உறுப்பின் ஒருப் பகுதி உள்ளே நுழைத்தாலும் குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்ற குற்றம் நடைப் பெற்றாக கருதப்படும்.


Section 442- House trespass

    



    Whoever commits criminal trespass by entering into or remaining in any building, tent or vessel used as a human dwelling or any building used as a place for worship, or as a place for the custody of property, is said to commit "house-trespass".

Explanation-The introduction of any part of the criminal trespasser's body is entering sufficient to constitute house-trespass.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1902




இ.த.ச 443 -ஒளிந்து வீடுப் புகுதல்





மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு தெரியாமலும், குற்றங்கருதி  வீடு புகுதலை மறைந்திருந்து மேற்க்கொண்டால், அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி ஒளிந்து வீடுப் புகுதல்  ( Lurking house-trespass )  என்கிறோம்.




Section 443- Lurking house-trespass

Whoever commits house-trespass having taken precautions to conceal such house-trespass from some person who has a right to exclude or eject the trespasser from the building, tent or vessel which is the subject of the trespass, is said to commit "lurking house-trespass". 







இ.த.ச 444 - இரவில் ஒளிந்து வீடுப் புகுதல்



      மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு தெரியாமலும், குற்றங்கருதி  வீடு புகுதலை மறைந்திருந்து சூரிய மறைவுக்குப் பிறகும் சூரிய உதயத்துக்கு முன்னும் மேற்க்கொண்டால், அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி இரவில் ஒளிந்து வீடுப் புகுதல் ( Lurking house-trespass by night )  என்கிறோம்.



Section 444- Lurking house-trespass by night

Whoever commits lurking house-trespass after sunset and before sunrise, is said to commit "lurking house-trespass by night".

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1904


Thanks to  http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1900

 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.