Thursday, 26 February 2015

ஆப்பிளின் ஆப்பிளை கடித்தது யார் ?


ஆப்பிளின் ஆப்பிளை கடித்தது யார் ?

சத்தியமா நான் இல்லைன்னு காமெடி பண்ணாதிங்க ப்ரதர். இதுக்கு பின்னாடி நிறைய தகவல்கள் இருக்கு என்னவென்று பார்ப்போம்.

இந்த உலகத்தின் தலை எழுத்தை நான்கு ஆப்பிள்கள் மாற்றியிருக்கிறது


         அவையாவன முதலாவது ஆதாம் சாப்பிட்ட முதல் ஆப்பிள். கடவுளாள் தடுக்கப்பட்ட அந்த கனியை அவன் புசித்தான் அதனால் மனிதன் ஏடன் தோட்டத்திலிருந்து பூமிக்கு அனுப்பபட்டான் ஆதாரம் பைபிள்.

ஆதியாகமம் 3 17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

          இரண்டாவது  நியுட்டன் ஒரு நாள் காலேஜ்க்கு போகமல் கட்டு அடிச்சிட்டு வந்து ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் நியுட்டன். அப்போது ஆப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இந்த ஆப்பிள் மேல் நோக்கி போகாமல் பூமியை நோக்கி ஏன் வருகின்றது. இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இதன் முலம் E=MC2  என்ற சமன் நமக்கு கிடைத்தது இதன் முலம் அறிவியல் உலகில் நாம் காலடி எடுத்து வைத்தோம் பல சாதனைகளைப்புரிந்தோம் பல கிரகங்களுக்கு சென்றோம், செயற்கைக்கோள்களை ஏவினோம்.மூன்றாவது அலன் டூரிங், 

அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.
இயந்திரங்களை உணர்வு உள்ளவையாகவும், சிந்திக்கக் கூடியவையாகவும் உருவாக்க முடியுமா என்பது குறித்த செயற்கை அறிவுத்திறன் தொடர்பான விவாதத்துக்கு டூரிங் சோதனை மூலம் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். இவர் தேசிய இயற்பியல் சோதனைக்கூடத்தில் பணிபுரிந்த போது நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்புக்களை செய்தார். ஆனாலும் இவை அவற்றின் முழு வடிவில் அப்போது உருவாக்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டில் இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மான்செஸ்டர் மார்க் I என்னும் உலகின் முதலாவது உண்மையான கணினிகளுள் ஒன்றை உருவாக்கும் பணியில் இணந்துகொண்டார்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிளெச்லி பார்க்கில், ஐக்கிய இராச்சியத்தின், இரகசியக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கான மையத்தில் பணி புரிந்தார். அப்போது சில காலம், ஜேர்மனியின் கடற்படை தொடர்பான இரகசியக் குறியீட்டுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். ஜேர்மன் குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்கான பல நுட்பங்களை இவர் உருவாக்கியுள்ளார்.  நன்றி  விக்கி  

இவர் மர்மமான முறையில் விஷம் செலுத்தப்பட்ட ஆப்பிளை உண்டு மரித்தார் அவர்
தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவதாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அந்த மனிதரை மனோசிக குருவாக நினைத்ததாலும் அவரின் கடைசியாக சாப்பிட்ட ஆப்பிளை உருவகப்படுத்தி கடித்த ஆப்பிளை(BITTEN APPLE) தன் கம்பெனியின் சின்னமாக வைத்தார்.

மேலும் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தான் 
ஆப்பிளை அதிகமதிகம் விரும்புவதாலும் நிறைய தின்பதாலும் அந்தப் பேரை வைத்ததாக கூறினார்.நான்காவது ஸ்டீவ் ஜாப்ஸ்ன் ஆப்பிள்.   மேலும் வாசிக்க ஸ்டீவ் ஜாப்ஸ்

 
 

 ஆப்பிள்  சின்னம் கடந்து வந்த பாதை : 
Apple : ‘It’s a computer company, not a fruit store.’

The Newton Crest logo (1976) : ‘Newton… A mind forever voyaging through strange seas of thought… alone’
The Rainbow logo (1976-1998) : “What a wonderful urban legend.”

The Monochrome logo (1998 – Present) : 
பின்குறிப்பு: இன்று நிறைய மக்கள் ஆப்பிள் கணினி வாங்கிவிட்டு உபயோகிக்க முடியாமல் நிறைய சிரம படுகின்றார்கள் அவர்களுக்கு ஓர் இனிய செய்தி நிங்கள் vmware - virtual machine இன்ஸ்டால் செய்து அதில் ஓன்றுக்கு மேற்ப்பட்ட OS - Windows / Windows XP / 2008 ஆப்ரேட்டிங் சிஸ்டம் வைத்துக்கொள்ளலாம். அப்படி தான் ஓருவர் வாங்கிவிட்டு உபயோகிக்க முடியாமல் தவித்தார். என் ஆலோசனை படி செய்தார் இப்ப சூப்பர் செந்தில்ன்னு சொல்கின்றார். அவரிடம் நான் கேட்ட கேள்வி தான் இந்த பதிவு. தயவுசெய்து பின்னுட்டம் போடுங்க.


6 comments:

 1. நல்ல தகவல்கள். எழுத்துக்கள் இன்னும் சற்றுப் பெரிதாகவும் வரிகளுக்கிடையே இன்னும் கொஞ்சம் அதிக இடைவெளியும் பத்திகளுக்கிடையே இன்னும் கொஞ்சம் இடைவெளியும் இருந்தால் தளம் இன்னும் பிரகாசிக்கும்.

  ReplyDelete
 2. அறியாத அறிந்திருக்கவேண்டிய
  அற்புதத் தகவலகளை அற்புதமாகப்
  பதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பலருக்கும் உதவும்...

  பழனி ஐயா சொன்னதையும் மனதில் வைத்துக் கொண்டு பகிரவும்...

  ReplyDelete
 4. அனைவருக்கும் நன்றி !!!

  பழனி ஐயா நீங்கள் சொன்னப்படி செய்தாகிவிட்டது.

  நன்றி ரமணி ஐயா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா.

  ReplyDelete
 5. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 6. Thansk http://blogintamil.blogspot.fr/

  ReplyDelete