Monday, 22 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யாக கணக்கு எழுதினால்


இ.த.ச 477அ -

          யாராவது, ஒருவர் மற்றோருவருடைய கணக்கராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது வேலைக்காராகவோ அல்லது பணியாளாகவோ அல்லது மேற்குறிய நிலையில் பணிச் செய்பவராக இருந்து தன் முதலாளி அல்லது அலுவலகத்திற்கு உரிய ஒரு ஆவணத்தில் அல்லது கணினி ஆவணத்தில் அல்லது புத்தகத்தில் அல்லது தாளில் அல்லது எழுத்தில் அல்லது விலைமதிப்புள்ள காப்பிட்டில் அல்லது கணக்கு புத்தகத்தில் பொய்யாக ஒரு சேர்க்கையை உட்புகுத்துவதும் அல்லது உட்புகுத்துவதற்கு உடந்தையாக இருப்பதும் அல்லது ஒரு வரவு செலவு கணக்கு அல்லது அது தொடர்பான மேற்கூறிய ஒரு ஆவணத்தில் அழிப்பதும் , திருத்துவதும், உருமாற்றம் செய்வதும் அல்லது பொய்யாக்குவதும் குற்றமாகும். மேலும் எழுத வேண்டியதை எழுதாமல் இருப்பதும் அல்லது விட்டுவிடுவதும் அல்லது அத்தகைய செயலுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமாகும்.




Section 477-A- Falsification of accounts

*Whoever, being a clerk, officer or servant, or employed or acting in the capacity of a clerk, officer or servant, willfully, and with intent to defraud, destroys, alters, mutilates or falsifies any **[book, electronic record, paper, writing], valuable security or account which belongs to or is in the possession of his employer, or has been received by him for or on behalf of his employer, or willfully, and with intent to defraud, makes or abets the making of any false entry in, or omits or alters or abets the omission or alteration of any material particular of any material particular form or in, any such **[book, electronic record, paper, writing], valuable security or account, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

விளக்கம் - இந்தப் பிரிவில் யாரை அவர் ஏமாற்ற இவ்வாறு செய்கின்றார் என்றோ அல்லது எத்தகைய தொகையினை அதன் மூலம் அவர் ஏமாற்றுவதற்கும் வஞ்சிப்பதற்கும் ஏற்பாடு செய்ந்துள்ளார் என்று கூறிப்பிட வேண்டும் என்பது தேவையில்லை, பொதுவாக இத்தகைய செயலின் மூலம் ஏமாற்றும் கருத்து உள்ளது என்பதை குறிப்பிட்டாலே இந்த பிரிவின் கீழ் அடங்கும்.




Explanation-It shall be sufficient in any charge under this section to allege a general intent to defraud without naming any particular person intended to be defraud without naming any particular person intended to be defrauded or specifying any particular sum of money intended to be the subject of the fraud, or any particular day on which the offence was committed.]

* Added by Act 3 of 1895, sec. 4.

** Ins. By Information Technology Act, 2000 (Sch. 1). W.E.F. 17-10-2000. 
 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1938


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

1 comment: