Wednesday, 10 February 2016

தினம் ஒரு சட்டம் - கொடுங்காயத்தை கோபமூட்டப்பட்ட நிலையில் தாக்கினால்



இ.த.ச 335


     யாராவது ஒருவர், எதிர்பாரத வகையில் திடீரென கடுஞ்சினம் ஊட்டப்பட்டவர், சினம் ஊட்டியவர் அல்லாத வேறு ஒருவரைத் தாக்கவேண்டும்
என்ற கருத்தின்றி அல்லது எண்ணமின்றி அவருக்கு கொடுங்காயம் உண்டாக்ககூடும் என்ற தெளிவும் இன்றி, கோபம் உண்டான நிலையில் தன்னிச்சையாக கொடுங்காயத்தை உண்டாக்கினால் அது குற்றமாகும்.


     இந்தக் குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது இரண்டாயிரம் வரையில் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

விளக்கம் - இதச 333 மற்றும் இதச 334 ஆகியவற்றில் அவற்றின் விளக்கம் கூறப்பட்டுள்ளது, மேலும் இதச 300 வது பிரிவின் கீழும் பரிசிலித்து இந்த தண்டனையை வழங்கலாம்.

Section 335- Voluntarily causing grievous hurt on provocation


    Whoever *[voluntarily] causes grievous hurt on grave and sudden provocation, if he neither intends nor knows himself to be likely to cause grievous hurt to any person other than the person who gave the provocation, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to four years or with fine which may extend to two thousand rupees, or with both

Explanation:
- The last two sections are subject to the same provisos as Explanation 1, section 300.

* Ins. by Act 8 of 1882, Sec. 8.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment