Sunday, 7 February 2016

பயங்கரமான ஆயுதங்களால் தன்னிச்சையாக தாக்கினால் என்ன தண்டனை


இ.த.ச 325
      

       யாராவது, இ.த.ச பிரிவு 334 லில் கூறியுள்ளதைப் போல அல்லாமல்,  தன்னிச்சையாக கொடுங்காயப்படுத்துதல் என்ற ஒரு செயலை செய்ந்து அதனால் ஒரு கொடுங்காயம்  உண்டாகின்றது. இது குற்றமாகும்.

 இந்தக்குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

இ.த.ச 326


        யாராவது, ஒரு மரணத்தை உண்டாக்க வேண்டி ஒரு காரியத்தை செய்ய...அதனால் ஒரு கொடுங்காயம் விளைகின்றது..
      அந்தக் காயமானது ஒரு மரணத்தை அல்லது கொடுங்காயத்தை உண்டாக்க பயன்படுத்தப்படும் ஆயுதத்தால் சுடுவதாலோ அல்லது அத்தகைய ஆயுதத்தால்  குத்துவதாலோ அல்லது அத்தகைய ஆயுதத்தால் வெட்டுவதாலோ உண்டாகின்றது.

     அல்லது நெருப்பினாலோ அல்லது நெருப்பால் காய்ச்சப்பட்ட ஒரு பொருளாளோ அல்லது அத்தகைய அபாயத்தை விளைவிக்ககூடிய விஷம், துருப்பிடித்த கருவி, வெடிப்பொருள் மனிதருடைய உடலில் அல்லது சுவாசத்தில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அல்லது ஒரு மிருகத்தை ஏவியும் இதனை செய்வதும் சாத்தியமாக கூடும்.  

     எனவே இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்து அதனால் ஒரு கொடுங்காயம்  யாருக்காவது உண்டானால், அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 325- Punishment for voluntarily causing grievous hurt

    Whoever, except in the case provided for by section 335, voluntarily causes grievous hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.


Section 326- Voluntarily causing grievous hurt by dangerous weapons or means

    Whoever, except in the case provided for by section 335, voluntarily causes grievous hurt by means of any instrument for shooting, stabbing or cutting, or any instrument which, used as a weapon of offence, is likely to cause death, or by means of fire or any heated substance, or by means of any poison or any corrosive substance, or by means of any explosive substance, or by means of any substance which it is deleterious to the human body inhale, to swallow, or to receive into the blood, or by means of any animal, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

*Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).
 

Images http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-326-300x300.png
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment