Tuesday, 16 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யான ஆவணத்தை மோசடியாக பயன்படுத்தினால்


இ.த.ச 471

யாராவது, ஒரு பொய்யான ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை அது பொய்யானது எனத் தெரிந்தும் நேர்மையின்றி அல்லது மோசடி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் அதனை ஒரு உண்மையான ஆவணமாக பயன்படுத்துபவருக்கு, அந்த ஆவணத்தை பொய்யாக உருவாக்கியவருக்கு வழங்கப்படும் தண்டனையே விதிக்கப்படும்.

அதாவது ஒரு ஆவணத்தை பொய்யாக உருவாக்கினால் பின் வரும் சாரத்தை படிக்கவும்...


இ.த.ச 468

       

     யாராவது ஒருவர் , அடுத்தவரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் போலியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி அவரை வஞ்சிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் ஆவணம் உருவாக்குபவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 471- Using as genuine a forged document or electronic record

   Whoever fraudulently or dishonestly uses as genuine any *[document or electronic record] which he knows or has reason to believe to be a forged **[document or electronic record], shall be punished in the same manner as if he had forged such **[document or electronic record].

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000).

** Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-12000) 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment